மின்சார இணைப்பிற்கு பதிவு செய்ய வீட்டுவரி ரசீது வழங்க ரூபாய்.10,000 லஞ்சம் பெற்ற ஊழல் ஊராட்சி மன்றத் தலைவர் கைது
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகில் உள்ள அலவாக்கோட்டை கிராமத்தில் வீடயடுவரி இரசிது மின்சார இனைப்புப் பதிவு செய்ய வழங்க ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவரை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.
அலவாக்கோட்டை கிராம ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரகாஷம். அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளம் கம்பன் என்பவர் தன்னுடைய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கவும் அதற்கான மின் இனைப்பைப் பெற ஊராட்சி மன்றத்தில் ரசீது தேவைப்பட்டதால் தலைவர் பிரகாஷத்தை நாடியுள்ளார்.
அதற்கு அவர் 10000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் இளம் கம்பன் சிவகங்கையிலுள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்த நிலையில் அவர்களின் ஆலோசனைப்படி
பினாப்தலின் இரசாயனம் தடவிய பணத்தை அலவாக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்தே தலைவர் வாங்கவே அரசு சாட்சியுடன் இளம் கம்பன் வழங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர்
ஊராட்சித் தலைவர் பிரகாஷத்தை கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அங்கு சோதனை நடத்தப்பட்டு பின்னர் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருத்துகள்