சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபர்மாதம் 23 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு.
ஆண்டுதோறும் முடிசூடா மாமன்னர்கள் தியாக சீலர்கள் மாவீரர்கள் மருதுபாண்டியர் நினைவு நாள் அக்டோபர் 24 ஆம் தேதி திருப்புத்தூரில் தூக்கிலிடப்பட்ட தினம் மற்றும் அக்டோபர் 27 ஆம் தேதி காளையார் கோவிலில் அடக்கம் செய்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் சமூகத்தின் தலைவர்களும் பொதுமக்களும் கலந்து கொள்வார்கள். இந்தநிலையில் மருதுபாண்டியர் ஜெயந்தி நிகழ்ச்சியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம், பாதுகாப்புக் காரணங்களுக்காக சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
.சிவகங்கை மாவட்டத்தில், காளையார் கோயிலில் வரும் அக்டோபர் மாதம் .27 ஆம் தேதி நினைவு நாள் விழா நடைபெற உள்ளதால் சிவகங்கையில் நாளை (அக்டோபர் மாதம் .,23 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் .,31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்
மருதுபாண்டியர்கள்.சிவகங்கைச் சீமையின் மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபால நாயக்கர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, மறைந்த திப்பு சூல்தானின் தளபதி தூந்தாகி வாக் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்தியக் கூட்டமைப்பை உருவாக்கினர்.
1801 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சிராப்பள்ளி திருவரங்கத்தில் வெளியிட்ட “ஜம்புத் தீவு பிரகடனம்” மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.
1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டிற்கு முன்னர் நடந்த தென்னிந்தியப் புரட்சியே முதல் ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டமாக பல வரலாற்றாய்வாளர்களால் கருதப்படுகிறது.பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகக் கூறி 1801 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியார் போர் தொடுத்தனர். அது150 நாட்கள் இடைவிடாமல் நடந்த நிலையில்
காளையார்கோவில் காடுகளில் கொரில்லா முறையில் போர் நடந்தது. புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான், ஆங்கிலேயருக்கு்ப் படை அனுப்பி உதவி செய்தார்.
மருது சகோதரர்கள் மற்றும் பிற விடுதலை வீரர்களைப் பிடித்துக் கொடுப்போர்க்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது. காளையார்கோவில் காட்டினை அழிப்பவர்க்கு, அழிக்கப்படும் நிலம் 20 வருடத்திற்கு இலவசக் குத்தகையாக வழங்கப்படுமென ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அறிவித்தனர்.
காட்டில் பதுங்கியிருந்தபோது, தன் உதவியாளன் கருத்தானால் சின்ன மருது சுடப்பட்டார். இதற்காக கருத்தானுக்கு ஆங்கிலேயர் வெகுமதி அளித்தனர்.
காளையார்கோவிலில் களோனல் அக்னியூ மருது சகோதரர்களை கைதுசெய்தார். கௌரிவல்லப பெரியஉடையணத் தேவரை சிவகங்கையின் இஸ்திமிராசுதாரராக நியமித்தார். சிவகங்கை சமஸ்தானத்தில் இராணிர வீரமங்கை வேலுநாச்சியார் சுதந்திர ஆட்சி முடிவுக்கு வந்தது. சிவகங்கை அரசர் பெரிய உடையனத்தேவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். பாகனேரி அம்பலம் வாளுக்கு வேலி மருது சகோதரர்களை மீட்பதற்குச் செய்த முயற்சிகள் கத்தாளம்பட்டிலேயே தோல்வியடைந்தன.
மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். மருது சகோதரர்களுடன் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஆண் வாரிசுகள் அனைவரும் தூக்கிலிடப்பட்ட நிலையில் ( "துரைச்சாமி" சின்ன மருதுவின் மகன் ஒருவரைத் தவிர ) தூக்கிலிடப்பட்டனர். 500 க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் விருப்பப்படி அவர்களது உடலை மூன்று நாட்களுக்கு பின்னர் நரிக்குடியிலிருந்து வந்த உறவினர்கள் நல்லடக்கம் செய்த வரலாறு உண்டு காளீசுவரர் கோவில் முன்பு மற்றும் திருப்புத்தூரில் புதைக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் சிறுவன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு கப்பலில் நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்
கருத்துகள்