ஜம்மு & காஷ்மீரில் 75 நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் ‘அமிர்த ஏரிகள்’ திட்டத்தை மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார்
ஜம்மு & காஷ்மீரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் ‘அமிர்த ஏரிகள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்
மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
ஜம்மு & காஷ்மீரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் ‘அமிர்த ஏரிகள்’ திட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் முருகன், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜம்மு – காஷ்மீர் சென்றுள்ளார்.
சுற்றுப் பயணத்தின் முதல் நாளான இன்று, குல்காம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், வளர்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், ஜம்மு – காஷ்மீர் முழுமையான வளர்ச்சிப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது என்றார்.
குல்காம் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் இந்த நடவடிக்கையின் மூலம், இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், பொருளாதார வளர்ச்சி அடையும் என்றார்.
அமைச்சர் முருகன் உள்ளூர் மீன் வளர்ப்போருடன் கலந்துரையாடினார். அப்பகுதியில் உள்ள மீன்வளர்ப்புப் பண்ணைகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது, உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவாதாகவும், நவீன தொழில்நுட்பத்தை உள்நாட்டு மீன்தொழிலில் ஈடுபடுவோர் பயன்படுத்தி பலனடைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
பின்னர், அகர்பாலில் அதிநவீன கருவிகள் கொண்ட நடமாடும் கால்நடை பராமரிப்பு வாகனத்தை மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாடர்காமில் உள்ள அதிக விளைச்சல் தரும் ஆப்பிள் பண்ணைக்கு சென்று பார்வையிட்டார்.
கருத்துகள்