ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் துறையால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முகாம் 2.0 –ன் 3-ஆவது வாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது
மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வுகால பயன்கள் தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதற்கான தொடர்பு துறையாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் துறை உள்ளது. நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான சிறப்பு முகாம் 2.0 காலத்தில் இந்த துறை 68 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குதல் மற்றும் விரைவான குறைதீர்ப்பை உறுதி செய்வதற்காக 4,200 நிலுவையில் உள்ள ஓய்வூதியம் தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயித்திருந்தது.
21.10.2022 நிலவரப்படி இந்த துறை மூலம் கீழ்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது முகாமின் 20 நாட்களுக்குள் 3,150 ஓய்வூதிய குறைபாடுகளுக்கு தீர்வு காணப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அனைத்து குறைகளையும் தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளுடன் இந்த துறை கூட்டங்களை நடத்தியது.
முகாமின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி நிலுவையில் உள்ள ஓய்வூதியத் துறைகளை தீர்ப்பதற்கு இந்த துறை கண்காணிப்பு செய்து வருகிறது. விதிகள் மற்றும் நடைமுறைகளை எளிதாக்க துறை ரீதியாக 30 சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன. 3,094 மின்னணு கோப்புகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு பைசல் செய்யப்பட்டன. நாடுமுழுவதும் இந்த துறையும் ஓய்வூதியதாரர்களின் சங்கங்களும் மொத்தம் 26 தூய்மை இயக்கங்களை நடத்தியுள்ளன.
கருத்துகள்