முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் உலக தர நிர்ணய தின நிகழ்ச்சி

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் உலக தர நிர்ணய தின நிகழ்ச்சி "நிலையான வளர்ச்சி இலக்கிற்கான தர நிலைகள் - ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை


இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ் ) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

சர்வதேச தர நிர்ணய அமைவனம் (ISO) , சர்வதேச மின்னணு தொழில் நுட்ப கூட்டமைப்பு (IEC), சர்வதேச தகவல் தொடர்பு கூட்டமைப்பு (ITU) இவற்றின் வல்லுநர்களை கௌரவப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 14-ம் தேதி உலக தர நிர்ணய தினம் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும், சர்வதேச நிலையை மனதில் கொண்டு ஒரு தலைப்பில் / பொருளில் கொண்டாடப்படுகின்றது. உலக தர நிர்ணய தினத்தின் ஒரு பகுதியாக BIS தென்மண்டல அலுவலகம், சென்னை மூவர்ணக் கொடியால் பிரகாசிக்கப்பட்டது மற்றும் உலக தரநிலைகள் தின THEME  குறித்த செய்திகள் மற்றும் ISI  முத்திரை கட்டாயமாக்கப்பட்ட  பொருட்கள் பற்றி பொதுமக்களுக்கான டிஜிட்டல் திரைகள் மூலம்  காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த வருடத்திற்கான தலைப்பு / பொருள் "நிலையான வளர்ச்சி இலக்கிற்கான தர நிலைகள் - ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை ". இந்திய தர நிர்ணய அமைவனம் - தென் பிராந்திய அலுவலகம், சென்னை, இந்த உலக தர நிர்ணய தினத்தை (மானக் மஹோத்ஸவ்) அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, சென்னையில் இன்று கொண்டாடியது.

ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், விஞ்ஞானி எஃப் & துணை இயக்குநர் ஜெனரல் (தெற்கு பிராந்தியம்), பிஐஎஸ், தனது வரவேற்பு உரையின் போது தர நிர்ணயங்களின் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அது வகிக்கும் பங்கை வலியுறுத்தினார். சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து  சமகால நவீன உலகம் வரையிலான தரநிலைகளின்  பரிணாம வளர்ச்சி மற்றும் வணிக வளர்ச்சிக்கானகண்டுபிடிப்புகளை  கொண்டு வருவதிலும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் தரப்படுத்தலின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பார்வையாளர்களுக்கு விளக்கினார். ஒரு சிறந்த உலகத்திற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகளின் பங்கை அவர் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.ஆர்.வேல்ராஜ் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றினார். அவரது உரையின் போது அவர் நுணுக்கமான செய்திகள் மூலம்  நிலைத்தன்மை மற்றும் ஆண்டுகாலமாக இருக்கும் நடை முறைகள் பற்றி  பார்வையாளர்களை அறிவூட்டினார். அவர் என்ட்ரோபி, சிஸ்டம் மற்றும் சுற்றுப்புறங்கள் பற்றிய  கருத்துகளை வெப்ப இயக்கவியலில் (thermo  dynamics ) இருந்து தற்கால உலகிற்கு தொடர்புபடுத்தினார். ஒருவர் சிட்டத்தை சிறப்பாக  மாற்றும் போது, சுற்றுப்புறத்தில் உள்ள பிரச்சனைகள்  அதிகரிக்கின்ற நிலையும் அதை குறைந்தபட்சமாக வைத்திருப்பதே சவாலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர், தற்போதைய சென்னை மெட்ரோ வெள்ள மேலாண்மைக் குழுவின் தலைவருமான Dr.V.திருப்புகழ், IAS (ஓய்வு)  தொழில்நுட்ப அமர்வின் தலைவராக கலந்து கொண்டு நிகழ்வை நடத்திக்கொடுத்தார். Dr.V.திருப்புகழ் அவர்கள் Sendai Framework ( பேரழிவு அபாயத்தின் முப்பரிமாணங்களை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துகிறது),  நிலையான வளர்ச்சி இலக்குககளின் ஒன்றோடொன்றான  தொடர்பைக் குறிப்பிட்டார். அனைத்து 17 நிலையான வளர்ச்சி இலக்குகளும்  ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு 2030 ஆம் ஆண்டுக்குள் முழுமை அடைய வேண்டும் என்றும் , இதுவே பொருளாதார மற்றும் உயிர் இழப்பை தடுக்கும் என்றார்.

சிறப்புப் பேச்சாளர்கள் குழு பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களைக் கொண்டிருந்தது.  அவர்கள் " மேம்பட்ட வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகள் - சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை "என்ற தலைப்பில் தங்கள் கருத்துக்களைப்  பகிர்ந்து கொண்டனர்

நுட்ப அமர்வில், சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்ட  டாக்டர் எஸ்.ஜனகராஜன், முன்னாள் பேராசிரியர், MIDS & தலைவர் SaciWATERS ஹைதராபாத் சுத்தமான நீர் மற்றும் சுத்திகரிப்பு பற்றி பேசினார். அவரது  அதிகரித்து வரும் நீர் தேவை  மற்றும் குறைந்து வரும் நீர் வளம்  பற்றி அவர் குறிப்பாக இந்தியாவின் தண்ணீர் சூழ்நிலையைப் பற்றி பேசினார், உலகின் தனிநபர் நீர் கிடைப்பதில் இந்தியா 50 வது இடத்தில் உள்ளது. உலகின் புதுப்பிக்கத்தக்க நீர் வளத்தில் 4% இந்தியாவிடம் உள்ளது. விவசாய நீருக்கான கிடைக்கும் நீர் தொடர்பான பிரச்சனைகளையும் அவர் விளக்கியதோடு , நீர் பயன்பாடு மற்றும் இருப்பு நிலைத்தன்மையின் நிலைத்தன்மையின் அதிகரிப்புக்கான காரணங்களை மேற்கோள் காட்டினார்.

ஐஐடி-மெட்ராஸின் பேராசிரியர் ஸ்ரீ ரமேஷ் கர்தாஸ், நிலையான இரசாயன மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தீங்கற்ற கரைப்பான்கள் பற்றி உரையாற்றினார். நிலையான தீர்வுகளை உருவாக்க அடிப்படை அறிவியலை,  பொறியியல் துறையுடன்  ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

ஸ்ரீ எஸ்.குமாரசாமி, முன்னாள் நிர்வாக இயக்குனர், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் தொழில், புதுமை மற்றும் உள்கட்டமைப்பு & காலநிலை நடவடிக்கை பற்றி பேசினார். சுரங்கத் தொழிலில் நல்ல நடைமுறைகள் மற்றும் சுரங்கத் தொழிலில் SDG கள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன என்பதை விளக்கினார். பசுமை சுரங்கம் மற்றும் ஒருங்கிணைந்த விவசாய முறையின் கருத்தையும் அவர் விளக்கினார்

முன்னதாக, திருமதி.ஜி.பவானி, விஞ்ஞானி-E , இயக்குநர் மற்றும் தலைவர் (சென்னை கிளை அலுவலகம்-,BIS)  உலக தர நிர்ணய தின செய்தியை தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள தேசிய தரநிலை அமைப்புகளில் BIS இன் தனித்துவத்தை அவர் விளக்கினார்.

WSD Theme மற்றும்  முக்கியத்துவத்தை விஞ்ஞானி-F  & தெற்கு மண்டல ஆய்வக  தலைவர் திருமதி மீனாட்சி கணேசன் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள தரநிலைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதில் WSD இன் முக்கியத்துவத்தை தெரிவித்தார்.  இந்திய சூழ்நிலையை மையமாகக் கொண்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சட்டங்களை மேற்கோள் காட்டி ஒவ்வொரு நிலையான வளர்ச்சி இலக்கையும் அவர் விளக்கினார்.

விஞ்ஞானி-பி ஸ்ரீ துர்கா பிரசாத் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,