கோயம்புத்தூர் கார் வெடிப்பு என்ஐஏ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
கோயம்புத்தூர் கார் வெடிப்பு தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் அவசர ஆலோசனைகளை மேற்கொண்ட நிலையில் . தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, உளவுத்துறை அதிகாரிகளுடன் செய்த ஆலோசனை கூட்ட முடிவில்.
இதன் தொடர் விசாரணையை என்ஐஏவிற்கு மாற்றம் செய்து கொடுக்கலாமென்று முடிவெடுக்கப்பட்டதற்கான பரிந்துரையை முதல்வர் செய்தார்.
அது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது; மேலும், கோயமுத்தூர் மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும், மாநிலத்தில் இது போன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும்
கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கியப் பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்: மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும். இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், ஊக்குவித்திடவும் முதல்வர் அறிவிப்பையடுத்து மத்திய அரசு இந்தப் பரிந்துரையை ஏற்றுள்ளதன் படி என்ஐஏ விசாரணைக்கு முறையாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பே என்ஐஏ அதிகாரபூர்வமற்ற முறையில் விசாரணையைத் தொடங்கிவிட்டது. இந்த வழக்கில் தற்போது பைல்கள் மட்டுமே கைமாற வேண்டும். அதன்படி கோயமுத்தூர் காவல்துறை இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்களை உடனே தமிழ்நாடு உள்துறை அமைச்சகத்திடம் கொடுப்பார்கள். அவர்கள் ஆவணங்களை சரி செய்துவிட்டு அதை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுப்பார்கள். பின்
உள்துறை அலுவலகம் அந்த ஆவணங்களை சோதனை செய்யும். அதன் பின்னர் அவர்கள் என்ஐஏ தெற்கு மண்டல அதிகாரிகளிடம் ஆவணங்களைக் கொடுப்பார்கள். கோயம்புத்தூர் கார் வெடிப்பு தொடர்பாக தற்போது என்ஐஏ டிஐஜி கேபி வந்தனா விசாரணையை நடத்தி வருகிறார். . முன்னதாக தமிழ்நாடு அரசு இந்த வழக்கை என்ஐஏவிற்கு மாற்றியது ஏன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்திருந்தார். அதில், இந்த வழக்கில் தமிழ்நாடு மட்டும் சம்பந்தப்படவில்லை. மற்ற மாநிலங்களும் இதில் தொடர்பு கொண்டுள்ளது. கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ளவர்களும் இந்த விவகாரத்தில் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்படுகிறது. வெளிமாநிலங்கள் தொடர்பு இருப்பதாக உள்ள நிலையில் மத்திய அமைப்பு விசாரிப்பது எளிதாக இருக்கும். இதன் காரணமாக என்ஐஏ விசாரித்தால் சரியாக இருக்கும் என்பதால் வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது, என்று விளக்கம் அளித்தார். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்