உத்தரவாதமான வருவாய் தருவதாக கூறப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என, என்.எஸ்.இ., எனும் 'தேசிய பங்குச் சந்தை' முதலீட்டாளர்களை மீண்டும் எச்சரித்துள்ளது.
'ஏய்மர்ஸ் டிரேடர்' நிறுவனத்துடன் சூரஜ் மவுரியா என்பவர் இணைந்து, உத்தரவாதமான வருமானம் தருவதாக கூறி, திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என, தேசிய பங்குச் சந்தை எச்சரித்து உள்ளது.
சூரஜ் மவுரியா, முதலீட்டாளர்களின் வர்த்தகக் கணக்கு தகவல்களையும், அவர்களின் பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு வருகிறார் என்றும், இது தங்கள் கவனத்துக்கு வரவே, முதலீட்டாளர்களை எச்சரிப்பதாகவும், தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
மேலும், முதலீட்டாளர்கள் தங்களுடைய பயனர் அடையாளம் மற்றும் கடவுச் சொல்லை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
இதற்கு முன், 'பஜார் பிரைவேட் லிமிடெட், ரியல் டிரேடர், க்ரோவ் ஸ்டாக்' ஆகிய நிறுவனங்கள் குறித்தும், இத்தகைய எச்சரிக்கையை, தேசிய பங்குச் சந்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்