நிதிச் செலவினங்கள் துறை சார்பில் தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக சிறப்பு பிரச்சாரம்
நிதி அமைச்சகத்தின் கீழுள்ள செலவினங்கள் துறை, 2022 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை அரசு அலுவலகங்களில் தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக சிறப்பு பிரச்சாரம் 2.0-வை மேற்கொண்டது
பணியிடங்களில் தூய்மை என்ற நோக்கத்தின் அடிப்படையில், நிதி அமைச்சகத்தின் கீழுள்ள செலவினங்கள் துறை, அதனுடன் இணைக்கப்பட்ட அலுவலகங்கள் மற்றும் துணை அலுவலகங்கள், மத்திய ஓய்வூதியக் கணக்கு அலுவலகம், அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் உள்ளிட்டவை தூய்மை சிறப்பு பிரச்சாரம் 2.0-இல் பங்கேற்றன.
2022 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை, அரசு அலுவலகங்களில் தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 2.0-வை கடைப்பிடித்தன. இதன் முக்கிய நோக்கம் நிலுவையில் உள்ள விஷயங்கள்/பிரச்சினைகளை கண்டறிந்து சரியான நேரத்தில் தீர்வு காண்பது, சுமையை குறைக்க ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளை தளர்த்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
செப்டம்பர் 14 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பிரச்சாரத்தின் முதற்கட்டத்தில், பல்வேறு துறைகளின்கீழ் நிலுவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள், அமைச்சகங்களின் பரிந்துரைகள், பொதுமக்களின் குறைகள், முறையீடுகள், மறுஆய்வு செய்யப்பட வேண்டிய கோப்புகள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன. இவற்றை சரி செய்யும் பணிகளில் அனைத்து அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் முயற்சிகளின் வாயிலாக நிலுவையில் உள்ள பெரும்பாலான விஷயங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், அலுவலகங்களில் தூய்மைப் பணிகளை செய்வதில் செலவினங்கள் துறை வெற்றி பெற்றுள்ளது.
2022 அக்டோபர் 2 முதல் 31 வரையிலான தூய்மை பிரச்சாரம் 2.0 நடவடிக்கைகளின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட 124 கேள்விகளில் 120-க்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 52 பொதுப்புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் 49 மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தேவையற்றதாக கருதப்படும் குப்பைகள் மற்றும் காலாவதியான பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பழைய பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் சுமார் 2 லட்சத்து 18 ஆயிரத்து 200 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கருத்துகள்