சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் மாபெரும் உணவுத் திருவிழா 2023
தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களின் தலைநகர் தில்லிப் பிரதிநிதிகளுடன் உணவு பதனத் தொழில்கள் துறை செயலாளர் வட்டமேசை மாநாடு நடத்தினார்
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் மாபெரும் உணவுத் திருவிழா 2023 தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களின் தலைநகர் தில்லிப் பிரதிநிதிகளுடன் உணவு பதனத் தொழில்கள் துறை செயலாளர் டிசம்பர் 8 அன்று வட்டமேசை மாநாடு நடத்தினார்.
இந்த மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்திய அவர் உணவு பதனத் தொழில்கள் அமைச்சகத்தால் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டதைவிட மாபெரும் நிகழ்வை 2023 அக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்று கூறினார். இந்த நிகழ்வு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு குறிப்பிட்ட வாய்ப்புகளை வெளிப்படுத்தவும், உலகளாவிய மற்றும் உள்நாட்டு வணிகத் தலைவர்கள், விநியோகிப்பாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களுடன் ஒத்துழைக்கவும், உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு சில்லறை விற்பனை துறைகளில் முதலீடு மற்றும் நிதி ஆதார ஆர்வத்தை உருவாக்குவதற்கும் ஒரு தளத்தை வழங்கும் என்றார்.
அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இந்த நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்வதற்கான கருத்துக்களை / ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன . நிகழ்வில் தீவிரமாக பங்கேற்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், கொள்கை வகுப்பதில் மூத்தவர்கள், வேளாண் உணவு நிறுவனங்கள், உணவு பதன அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் மெகா உணவுத் திருவிழாவில் தொடர்புடைய அனைத்துப் பங்குதாரர்களின் பங்கேற்பை உறுதி செய்வதிலும் அமைச்சகத்திற்கு ஆதரவளிக்குமாறு அவை கேட்டுக் கொள்ளப்பட்டன.
சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டின்' ஒரு பகுதியாக, சிறு தானியங்கள் அடிப்படையிலான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் பல நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அமைச்சகத்தால் தொடர் நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
மாபெரும் விழா நடைபெறவுள்ள 2023 அக்டோபர் மாதம் மட்டுமின்றி அந்த ஆண்டு முழுவதும் ஒத்துழைப்பு அளிப்பதாக இம்மாநாட்டில் பங்கேற்ற மாநிலங்களின் தலைநகர் தில்லிப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
கருத்துகள்