கீழ்சாதி எனக் கூறும் அடையாளம் மாறவில்லையே': தமிழ்க்குடிமகன் டீசர்
திரைப்பட இயக்குநர் சேரன் நடிப்பில் உருவான தமிழ்க்குடிமகன் டீசரை திரைப்படக்குழுவினர் வெளியிட்டனர். பாரதிக்கண்ணம்மா,
'ஆட்டோகிராப்' மற்றும் பொற்காலம்,பிரிவோம் சந்திப்போம் போன்ற திரைப்படத்தின் மூலம் மக்களின் மத்தியில் நடிகராக முத்திரை பதித்த இயக்குநரும் நடிகருமான சேரன் நடிப்பில் உருவான திரைப்படம்
தமிழ்க்குடிமகன் திரைப்பட டிரைலர் லக்ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'பகிரி', 'பெட்டிக்கடை' படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவெ இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சாதியும், அதற்குண்டான தொழிலையும் கட்டாயப்படுத்தும் அமைப்பு முறைக்கு எதிரானதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசருக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்