மதுரையில் தனியார் வளர்ப்பு யானை மீட்பு,
யானையை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுபடி மீட்டு திருச்சிராப்பள்ளிக்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர் . யானை அரசின் அனுமதியுடன் மதுரை மாநகர் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த விமலன் என்பவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெண் யானை ஒன்றை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தார். உத்தங்குடி பகுதியில் ஒரு வீட்டில் வளர்த்து வந்தார். அதற்கு சுமதி எனப் பெயரிட்டார் தற்போது 58 வயதாகும் யானை நடிகர் சூர்யா நடித்த 7ஆம் அறிவு, தாஜ்மஹால், நேருக்கு நேர், 'கடைசி விவசாயி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் சம்பளம் பெற்று நடிக்கவும் வைத்துள்ளதுடன் ன் அந்த வளர்ப்பு யானையை நடைப்பயிற்சி என்று தெருவில் பிச்சை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தியதாக பல புகார் எழுந்தது. இந்த நிலையில் மதுரை நிவாஸ், என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில்:-
மதுரை மாநகரில் தனியாரிடம் பெண் யானை ஒன்று பராமரிக்கப்படுகிறது. அதற்கு சுமதி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த யானையை பராமரிப்பதற்காக வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட உரிமம் கடந்த ஆண்டே காலாவதியாகி விட்டது. அதன்பின் அந்த உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளும் எந்த விதமான கேள்வியும் எழுப்பவில்லை. இந்த யானையை, பொதுமக்களிடம் பிச்சை எடுக்க வைத்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை அதை வளர்ப்பவர்கள் பயன்படுத்துகின்றனர். திருமணம், இறப்பு, திரைப்படம் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளி மாவட்டங்களுக்கும் இந்த பெண் யானையை கூலி வாங்கிக் கொண்டு செல்கின்றனர். இது யானைகள் பராமரிப்பு சட்டத்தின் படி தவறான நடவடிக்கையாகும்.
எனவே தனியாரிடமிருந்து யானையை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை வனப் பாதுகாவலர், மற்றும் மதுரை மாவட்ட வனப் பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
என மனுவில் கூறியிருந்த மனு.
வழக்கு பட்டியலிடப்பட்டு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது.
வனத்துறை அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் வனத்துறை அலுவலர்கள் இலஞ்சம் பெறுவதும், உரிமம் புதுப்பிப்பதும் தடுக்கப்பட்டது. எனவே யானையை வெளியே எங்கும் கொண்டு செல்லக்கூடாதென்று வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்திருந்தனர்.இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக சுமதி யானைக்கான கால உரிமம் புதுப்பித்தலுக்காக வனத்துறைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் வனத்துறை அலுவலர்கள் அதை புதுப்பிக்க மறுத்த நிலையில் உரிமம் தாமதமான நிலையில் வனத்துறைணஉரிமம் வழங்கக் கோரி அந்த யானை வளர்ப்பவர்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டதையடுத்து வழக்கில் ஏதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்ட வனத்துறை அலுவலர் சார்பில் அரசு வழக்கறிஞர் அளித்த பதிலின் அடிப்படையில் யானையை முறையாக பராமரிப்பதற்கான வசதிகள் இல்லை என கூறி யானையை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் மதுரை மாவட்ட வன அதிகாரி குருசாமி டோப்ளா, வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் உத்தங்குடி சென்று வளர்ப்பு யானை சுமதியை மீட்டு லாரி மூலமாக திருச்சிராப்பள்ளி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறை சட்ட விதிகளை மீறி தனிநபர் வளர்ப்பு யானை பறிமுதலானது . வனத்துறை சட்டத்தின் படி கிளியை வைத்து ஜோதிடம் பார்க்கும் நிலையே தவறு எனும் நிலையில் யானை வளர்த்து அதை பயன் படுத்தி வருவாய் பெறுவது குற்றம்.
கருத்துகள்