ஈரோடு கிழக்கில் அதிமுக இரு அணிகளின் வேட்பாளர்கள் யார் அவர்களுக்கு எந்தச் சின்னம் தலைவர்கள் முடிவால் தொண்டர்கள் கவலை
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக இரு அணிகளின் சார்பில்
போட்டியிடுவது யார்? கட்சியை கண்ணாடித் துண்டுகள் போல முதலில் ஐந்தாக உடைத்தவர்களே, மீண்டும் ஒட்டவைக்கும் முயற்சியில் இறங்க அது பலன்தராத நிலையில்,
சிதறிப்போன நெல்லிக்காய் மூட்டைகளை அள்ளிக்கட்ட முடியாது என்பதும், இப்போது உடைத்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது தான் இங்கு நிஜம் , தற்போது அரசியல் களம் கூறும் பாடம், அதிமுக பொதுச்செயலாளரான ஒதுங்கியிருக்கும் சசிக்கலா நடராஜன் தற்போது களத்திற்கு வந்தால் தவிர இதைச் சரி செய்ய முடியாது என்பது தான் அரசியல் அறிந்தவர்கள் கூறும் கருத்து, அதிமுகவை ஒன்று சேர விடாதவறு திமுக செயல்படுவது தான் அவர்கள் கட்சி வளர்ச்சிக்கு நல்லது என்ற நிலையில்,
அதிமுக தற்போது பாஜகவைச் சார்ந்து இருப்பது போல ஒரு பிம்பம் மக்களின் மத்தியில் பேசப்படும் நிலை வருவதற்கு ஊழல் செய்துவிட்டு தங்களைக் காப்பாற்ற நினைக்கும் அதன் தலைவர்கள் தான் காரணம், தொண்டர்கள் அமைதியாகவும் ஆனால் கவலையாகவும் உள்ளனர், நந்தவனத்திலோர்லான்டி கதைப்பாடல் பொருந்தும் நிலை போல உள்ளனர் குழப்பத்தில், எடப்பாடி கே.பழனிசாமி வேட்பாளருக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளரும் களம் காண வரும் நிலையில் முடிவெடுக்க முடியாமல் திணறும் பாரதிய ஜனதா கட்சி தங்களின் அரசியல் வளர்ந்து விட்டதாகவே அந்தத் தொண்டர்கள் முதல் மூன்றாம் கட்டத் தலைவர்கள் வரை கற்பனையில் உள்ளனர்
அது இல்லை என்பதே களம் உணர்த்தும் உண்மை, ஆகவே தேமுதிக போல பாஜக வேட்பாளர் அறிவிக்காமல் தயங்கும் நிலை, திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளில் கடுமையான குழப்பம் நிலவி வருவதால், தேர்தலில் போட்டியிடுவதா, அல்லது வேண்டாமா, வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற முடிவை எடுக்க முடியாமல் தலைவர்கள் திணறி வருகின்றனர். இது தமிழக அரசியலில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் 31 ஆம் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணியினரும் வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளனர். இவர்களில் எந்தத் தரப்புக்கு, சிறிதளவே வாக்குவங்கி உள்ள பாஜக ஆதரவளிக்கும் என்ற கேள்வியை முன்வைக்கக் காரணம், அதிமுக தொண்டர்கள் எல்லாம் பாஜகவை ஆதரிக்க மாட்டார்களா என்ற ஒரு ஆசை தான் அவர்களுக்கு , அது நடக்கவேண்டும் என உடைத்து, பின் நடக்காததால் ஒட்ட வைக்கும் இணைப்பு அதிமுக குறித்துப் பேசும் நிலையில்.
அரசியல் தெரிந்த அதன் பொதுச் செயலாளர் சசிக்கலா நடராஜன் தற்போது செய்தியாளர்களைச் சந்திக்க காரணம் கட்சியை உடைத்தவர்களால் ஒட்டவைக்க முடியாத காரணத்தால் உடைத்த இயக்கம் ஒன்று பட வேண்டும் என அவர்கள் விரும்பும் நிலை வருவதற்கு காரணம் இந்த பொது வெளியில் சில உண்மைகளைக் கூற முடியாத நிலை பத்திரிகைகளுக்கு உள்ளன, அது நமக்கும் பொருந்தும். தற்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் நமக்கான எதிர்காலத் தலைவர் யார் என்பதே. பெரிதாக எழுந்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரா அல்லது இணை ஒருங்கிணைப்பாளரா என்ற அடிப்படையில் எடப்பாடி கே. பழனிசாமி ஒரு வேட்பாளரையும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு வேட்பாளரையும் நிறுத்தும் பட்சத்தில்,
தேர்தல் ஆணையம் இருவரும் இரட்டை இலை சின்னத்தை A,B படிவம் கொடுத்துக் கேட்டு தேர்தல் நடத்தும் அதிகாரியை அணுகினால், இரட்டை இலைச் சின்னம் முடங்கும்.
இருவர் அணியும் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிட்டு பயில்வான்களாக தங்கள் சுயபலத்தை நிரூபிக்க வேண்டும். இது அவர்களுக்கு வாழ்வா சாவா போராட்டம். அதேநேரம், அதிமுகவின் இணைப்பு முடிவு பாஜக கையில் இருப்பதால் எந்த மாதிரியான முடிவை அவர்கள் கட்சி சார்ந்து எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்டுள்ளது. அப்படி இணைந்தால் கூட அதே வாக்குவங்கி இருக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை, தற்போதைய நிலையில், அதிமுக இரு அணிகளாக போட்டியிடும் சூழ்நிலையில் தான் உள்ளது.
அதிமுகவின் இரண்டு அணியினரும், டெல்லி தலைமை பேசாத நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கமலாலயத்துக்கு நேரில் சென்று ஆதரவு கேட்டதைப் பார்த்த தொண்டார்கள் தாயில்லாப் பிள்ளை பொன்ற நிலை என்ன என்பதை உணர்ந்தார்கள். அதே போன்று, அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்களையும், அவர்களது வீட்டுக்கே சென்று இரு அணியினரும் ஆதரவு கேட்டனர். அதில் பாமக உள்ளிட்ட பல கட்சிகள் யாருக்கும் ஆதரவில்லை என அறிவிக்கக் காரணம் இது பாஜக நடத்தும் பரிச்சை இதில் தேர்ச்சி விகிதம் கணக்கிட்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடக்கும் பலப்பரிட்சை இது,
அதில் பலிகடா எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்கள் சுயபலத்தில் சுயேச்சையாக வரும் சின்னத்தில் அவர்கள் வாங்கும் வாக்குகளே அவர்கள் இருவரின் ஏதிர்காலத்தையும் அக் கட்சி எதிர்காலத்தையும் தீர்மாணிக்கும்.
இதுவரை சிறிய கட்சிகளின் தலைவர்கள் தான், பெரிய கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பார்கள். ஆனால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இல்லாத கட்சிகளின் தலைவர்களைக் கூட அதிமுக இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. அதே நேரம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், பாஜக வேட்பாளரை நிறுத்தலாம் என்ற ஒரு எண்ணமும் மாநிலத் தலைமையான அண்ணாமலைக்கு உள்ளது அது மேலிடத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய முடிவாகும். ஆனாலும், இதில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் பாஜக தலைவர்கள் திணறி வருகிறார்கள். டெல்லி மேலிடமோ, யாருக்கு ஆதரவு என்று அறிவிப்பதில் அவசரப்பட வேண்டாம்.
அதேநேரத்தில், போட்டியிடவும் வேண்டாம் என்று கூறிவிட்டது. இந்த நிலையில், நேற்று திருச்சிராப்பள்ளியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூட, பாஜக போட்டியிடவில்லை என்று உறுதியாகக் கூறவில்லை. அதிமுக பெரிய கட்சி, அதனால் வெற்றி தோல்வி அறிந்து நாங்கள் முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். அதனால், பாஜ போட்டியிடாது என்று உறுதியாகக் கூற முடியாத நிலையே தற்போதும் உள்ளது. அதேநேரத்தில், அதிமுக ஆதரவு கேட்ட புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்ற கட்சி ஆகியவை எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவளிக்க மறுத்து விட்டது.
பாஜக போட்டியிடாத சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவு என்று அறிவித்தன. இது தவிர , நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகளும் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் அணி வேட்பாளரை ஆதரிக்குமா அல்லது தனி வேட்பாளரை அறிவிக்குமா என்பது நாளை தெரியும், எதிர்க்கட்சிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் குழப்பம் அடைந்துள்ள காரணம் பாஜகவை சார்ந்திருப்தே, மேலும், அதிமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் ஏற்கனவே முத்துசாமியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்த எடப்பாடி கே.பழனிச்சாமி முயற்சி செய்தார்.
அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார். முதலில் போட்டியிடத் தயார் என்று கூறியிருந்தவர், ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தான் போட்டியிட விருப்பமில்லை என்று கூறிவிட்டார். இது எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் இந்தத் தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசு அல்லது முன்னாள் துணை மேயர் ஆகியோரில் தனது அணி வேட்பாளராக இருவரில் ஒருவரை நிறுத்த ஆலோசனை நடத்துகிறார். ஆனால், யார் போட்டியிட்டாலும் ஜாமீன் தொகை திரும்பி வருமா என்பதே நிலை . இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் வேட்பாளர்கள் யோசிக்கின்றனர்
நன்கு அறிமுகம் உள்ள பிரமுகர்கள் போட்டியிட மறுத்த நிலையில், போட்டியிட விரும்பும் அதிமுகவின் (எடப்பாடி கே.பழனிச்சாமி அணி) ரூபாய்.15 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனு வாங்கலாம் என்று எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முதல் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுமெனவும் ,
இதற்கான விண்ணப்பக் கட்டணத் தொகையாக 15,000 ரூபாயை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் அதிமுக சார்பில் 23 ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டாலும்,
முதல் நாளில் ஒன்று, இரண்டு பேர் மட்டுமே விருப்ப மனு பெற்றுச் சென்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தெளிவான பதில்கள் கூற மறுத்து விட்டனர். அதன்படி பார்த்தால், விருப்ப மனு வாங்க பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை .
அதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘பொதுத்தேர்தல் அல்லது பல சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் என்றால் விருப்ப மனு பெறலாம். ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்குமா விருப்ப மனு பெற வேண்டுமா’ எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நிர்வாகிகள் இல்லாத கட்சிகளின் தலைவர்களைக் கூட அதிமுக இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
அதிமுகவுக்கு சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், பாஜ வேட்பாளரை நிறுத்தலாம் என்ற ஒரு எண்ணமும் அண்ணாமலைக்கு மட்டுமே உள்ளது. ஆனாலும், இதில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் பாஜக தலைவர்கள் தடுமாறி வருகிறார்கள்.
டெல்லி மேலிடமோ, யாருக்கு ஆதரவு என்று அறிவிப்பதில் அவசரப்பட வேண்டாம். அதேநேரத்தில், போட்டியிடவும் வேண்டாம் என்று கூறிவிட்டது. ஆக அதிமுகவை ஜெயலலிதா மரணமடைந்த பின் உடைத்தவர்கள் அதன் பலனை தற்போது அடையும் அறுவடைக்காலம் என்பதே இங்கு பொது நீதி.
கருத்துகள்