இராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை
இராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார்.
காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்." மேலும் ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமிகளின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமிகளின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சமூகத்திற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற சேவைக்காக பிரம்மபூஜ்ய ஸ்ரீசித்தேஷ்வர சுவாமிகள் நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் ட்விட்டரில்
கூறியிருப்பதாவது;
“சமூகத்திற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற சேவைக்காக பிரம்மபூஜ்ய ஸ்ரீசித்தேஷ்வர சுவாமிகள் நினைவுகூரப்படுவார். மற்றவர்களின் நலனுக்காக அவர் அயராது பாடுபட்டார்.
செறிவான ஞானத்திற்காக அவர் போற்றப்பட்டார். சோகமான இந்த தருணத்தில் அவரின் எண்ணற்ற பக்தர்களுடன் எனது எண்ணங்கள் இருக்கின்றன. ஓம் சாந்தி மேலும்மகாராஷ்ட்ரா சட்டமன்ற உறுப்பினர் திரு லக்ஷ்மண் ஜக்தீப் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
மகாராஷ்ட்ரா சட்டமன்ற உறுப்பினர் திரு லக்ஷ்மண் ஜக்தீப் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :
“மகாராஷ்ட்ரா சட்டமன்ற உறுப்பினர் திரு லக்ஷ்மண் ஜக்தீப் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். பொதுமக்கள் நல்வாழ்வு, புனே மற்றும் அதன் அருகாமைப்பகுதிகளின் வளர்ச்சி போன்றவற்றுக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர். அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.
கருத்துகள்