விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பொதுக்கூட்டத்திற்குச் சென்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் எச்.ராஜா கைது
பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திண்டிவனத்தில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், எச்.ராஜா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் தடையை மீறி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றதையடுத்து பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்
எச்.ராஜாவை விடுவிக்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியினர் அங்கு திடீர் சாலைமறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட எச்.ராஜா, இராமநத்தம் சமுதாய நலக் கூடத்தில் சிறை வைக்கப்பட்டார். அப்போது எச் ராஜா, பேசுகையில் ‛‛பட்டியலின மக்களுக்குத் துரோகம் செய்யும் திமுக கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியேற வேண்டும். தமிழகத்து பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திமுக அரசு செலவு செய்யவில்லை. பட்டியலின மக்கள் மீது திருமாவளவனுக்கு அக்கறையில்லை'' என விமர்சித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் எச் ராஜா பங்கேற்றால் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்து கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, தலைவர்களுக்கும் வருகைத் தடை விதிக்கப்பட்டது
கருத்துகள்