முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டாயிரம் கோடிகள் மோசடி செய்த பாரதிய ஜனதா கட்சியின். விளையாட்டுப்பிரிவு மாநிலச் செயலாளர் ஹரீஷ் உள்ளிட்ட இருவர் கைது

 பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி  பல கோடிக்கணக்கான ரூபாய் மோசடி


செய்த வழக்கில் ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான









பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்த நிறுவனத்தில் மற்றொரு இயக்குனர் நாராயணன் என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறை இன்று கைது செய்துள்ளனர். ஆருத்ரா மோசடியில் சம்பந்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின். விளையாட்டுப்பிரிவு மாநிலச் செயலாளர் ஹரீஷ் உள்ளிட்ட இருவரும் கைது இன்னும் பலர் சிக்குவார்கள்.

அதிக வட்டி தருவதாகக் கூறி ஏமாற்றி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த ஆருத்ரா நிறுவனம்



சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்ட் எனும் நிதி நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 30 சதவீதம் வரை வட்டிப் பணம் தரப்படுமெனக் கூறி, சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2,438 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று, மக்களுக்கு உரிய வட்டி தராமல் ஏமாற்றியதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு அதிகப்படியான புகார்கள் குவிந்தன அதனடிப்படையில் அந்த நிறுவனத்தின் மீது 2022 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சிலர் கைதும் செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.



இந்த மோசடி தொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும் முக்கிய தொடர்பு இருந்து வந்தது. அவர் மீது மோசடி குற்றச்சாட்டுகளும் இருந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவர் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக இணைந்தார். மக்களின் பணத்தை மோசடி செய்த நபர் பாஜகவில் இணைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு விளையாட்டு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது மேலும் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹரிஷ் என்பவன் எந்தவித வருமானமும் இல்லாமல் அவனுடைய பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவனுடைய சொத்து மற்றும் வங்கிக் கணக்குகளை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர்  முடக்கினர். இந்த நிலையில், பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஹரிஷை இன்று கைது செய்தனர். அவருடன் ஆருத்ரா நிறுவன நிர்வாகியான மாலதி என்பவரையும் கைது செய்தனர்.

அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான பிறகு குற்றப்பின்னணி கொண்டவர்கள்  இணைவது அதிகமாகிவிட்டது என்று அக்கட்சியில் உள்ள ஆரம்ப கால நபர்களே குற்றச்சாட்டுகள் கூறிய வண்ணம் இருந்தனர். அதில்  ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள்,  கூலிப்படைத் தலைவன் நெடுங்குன்றம் சூர்யா மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் பாஜகவில் இணைந்ததும்  அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆருத்ரா கோல்டு மோசடி முக்கிய குற்றவாளியும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான ஹரிஷ் கைது செய்யப்பட்டிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் சம்பந்தப்பட்ட பலர் இன்னும் கைதாகலாம் என்பதே தற்போதய நிலைஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி செய்த முக்கிய குற்றவாளியான பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஹரிஷ் கைது செய்து ரகசிய இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை  தீவிர விசாரணை

நடத்துவதாகத் தெரிகிறது ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான பாஜக முன்னாள் நிர்வாகி ஹரிஷ் மற்றும் மாலதியை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தனர். சென்னை அரும்பாக்கத்தை தலைமையிடமாக வைத்து ஆருத்ரா நிதி நிறுவனம் இயங்கியது. அதற்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை புதுக்கோட்டை என மாநிலம் முழுவதும் கிளைகளைப் பரப்பினர். இந்த நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்தால் 1 லட்ச ரூபாய்க்கு மாதம் 25 முதல் 35 சதவீதம் வரை வட்டி தரப்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் வந்திருந்தது.


அதை நம்பி, தமிழ்நாடு முழுவதும் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 1 லட்சம் பேர் சுமார் 2,438 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்நிலையில், திடீரென ஆருத்ரா நிதி நிறுவனத்தை மூடிவிட்டு இயக்குநர்கள் தலைமறைவாகினர். அதனால், முதலீடு செய்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துமிழ்நாடு முழுவதும் புகாரளித்தனர். இந்த வழக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு. ஆருத்ரா நிதி நிறுவனம் மீது இந்தியத் தண்டணைச் சட்டம் 420, 406, 409, 120(பி), 109, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இயக்குநர்கள், முகவர்கள் என 21 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் மோசடி தொடர்பாக நிதி நிறுவன இயக்குநர்களான பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ் மற்றும் மேலாளர்களான பேச்சுமுத்து ராஜா, அய்யப்பன், ஏஜென்ட் ரூசோ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளிகளான மேலாண் இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி உஷா, மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேர் வெளிநாடு தப்பிச் சென்றனர். அவர்களைப் பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.                 ஆருத்ரா நிதி நிறுவனம்  மீதான வழக்கில் இதுவரை ரூ.5.69 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவன இயக்குநர்கள், ஏஜென்ட்களின் 120 க்கும் மேற்பட்டவர்களின்  வங்கிக் கணக்கிலிருந்த ரூ.96 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 97 அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளநிலையில், தலைமறைவான இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஷ் மற்றும் மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. இந்த மோசடியைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


அதேநேரம், ஹரிஷ், ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் முக்கியமானவர் என்பதால் அவரை ரகசிய இடத்தில் வைத்து பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.      ஹரீஷ் முதலீட்டாளர் களிடமிருந்து ரூ.210 கோடி டெபாசிட் வசூல் செய்து தனது வங்கி கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்துள்ளார். இவர் தனது பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சொத்துக்களை வாங்கிக்  குவித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதையடுத்து ஹரிஷீன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

மோசடி குறித்து பேசாமலிருக்க அரசியல் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சிலருக்கு ரூ.100 கோடி வரை வாரி வழங்கிய ஹரிஷ்

பாஜக நிர்வாகியாவர் ஆரூத்ரா நிதி  நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் புகார் அளிக்க தொடங்கியதும், ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ஹரிஷ் பாதுகாப்புக்காக  பாஜவில் இணைந்தார். ஓரிரு நாளில் அவருக்கு பாஜக மாநில விளையாட்டுப்பிரிவுச் செயலாளராக பதவி வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் தேர்தல் நடந்ததால், தேர்தலுக்கான செலவுகளை ஹரிஷ் ஏற்றதாகவும் கூறப்படுகிறது. இது நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ஆதாரங்களிலிருந்து உறுதியாகியுள்ளது.  


மேலும், ஆருத்ரா மோசடி குறித்து யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க கூடாது என்பதற்காக, பல அரசியல் கட்சியினருக்கு ரூ.100 கோடி வரை பணத்தை ஹரிஷ் மூலம் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மோசடி நேரத்தில் ஆருத்ராவின் மேலாண் இயக்குநர் ராஜசேகர், அவரது மனைவி உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்யாமல் இருக்க, வெளிநாட்டுக்கு தப்பி செல்ல கட்சிப் பதவியைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்துள்ளார். ஹரிஷ் இவ்வளவு நாள் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் கட்டுப்பாட்டில் பதுங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி வழக்கில் சிக்கியுள்ள அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்ய டிஜிபி சைலேந்திரபாபு 28 சார்பு ஆய்வாளர்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு வழங்கியுள்ளார். இதனால் ஹரிஷிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை குறித்து அனைத்தும் டிஜிபியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் ஹரிஷிடம், எந்தெந்த அரசியல் கட்சியனருக்கு பணம் வழங்கினார், இதுநாள் வரை எந்தத் தலைவர் கட்டுப்பாட்டில் பதுங்கியிருந்தார், மோசடியில் இருந்து தப்பிக்க எத்தனை கோடிகள் செல்வு செய்தார், நேரடியாக பணம் வாங்கிய அரசியல் கட்சியினர் யார், யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


பல மாதங்கள் தலைமறைவாக இருந்த ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ஹரிஷ் கைது செய்யப்பட்டதால் அவரிடம் பணம் வாங்கிய அரசியல் கட்சியினர் தற்போது கலக்கமடைந்துள்ளனர். மேலும், இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 210 கோடி டெபாசிட் வசூல் செய்து, தனது வங்கி கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்துள்ளார். இவர் தனது பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் 30க்கும் மேற்பட்ட சொத்துக்கள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.ஒன்றுமில்லாமல் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த இவர்களது அசையும் அசையாச் சொத்துகள் மதிப்பு  எவ்வளவு..?

இப்போதைய சொத்து மதிப்பு எவ்வளவுனு பார்த்தாலே போதும்!

இவர்கள் வாங்கிக் குவித்த  மோசடிக்கும் , வாங்கி வைத்திருக்கறதுக்கும் இடைப்பட்ட  வெளி அப்பட்டமாகவே தெரியும். 

1990-களில் தேக்கு  மரம் வைச்சா கோடிகளில் புரளலாம் என்றால்கள். அது அனுபவ் பிளான்டேசன் மக்களுக்கு நல்ல அனுபவம் தந்தது ஆனாலும் திருந்தவில்லை. 

1994-ஆம் ஆண்டில் சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்தால் கோடிகள். என்றார்கள் ஆனால் ஆனால் கோடிகள் வாங்கிய கேடிகள் மட்டுமே மஹாநதி படக்கதை போல நன்றாக வாழ்ந்தார்கள் . மக்கள் பணமிழந்து தவித்தனர்.

1996-2011 சாதி கட்சி ஆரம்பித்தால் கோடிகள் மற்றும் அதிகாரம் பெற்ற பலர் இங்குண்டு அதற்கு யாருடைய பணம் வந்தது?

பிறகு வான்கோழி ஈமுக் கோழி வளர்ப்பு மோசடி 

பிறகு மல்டி லெவல் மார்க்கெட்டிங். மோசடி 

அப்படியே போய் போய் தற்போது உங்களைப் பெரியாளா ஆக்குகிறேன், பேர்வழி என பல லட்சம் வியூஸ் பாலோயர்ஸ் என்று வந்து நிற்கிறது மோசடிகள்.தமிழகம் முழுவதும் 13 கிளைகளோடு இயங்கி வந்த ஆருத்ரா நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் வந்த நிலையில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்த 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரூசோ என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் மேலும் அவரின் வங்கி கணக்கில் இருந்த ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்.கே. சுரேஷ் உடன் ஒயிட் ரோஸ் என்ற படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடித்தவர் ரூசோ ஆவார் மக்களிடம் பல ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனம், ஹிஜாவு நிதி நிறுவனம், ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தின் நிர்வாகிகளை தேடப்படும் குற்றவாளிகளாக காவல்துறையில் அறிவித்துள்ளனர்.

காவல்துறை தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள், அறிக்கைகள் என எதற்கும் பதில் அளிக்காததால் இந்த அதிரடி அறிவிப்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர் சென்னை, திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயமுத்தூர் புதுக்கோட்டை  உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். தொலைக்காட்சிகள், வானொலிகள், பேரூந்துகள் என எங்கு பார்த்தாலும் இந்த நிறுவனத்தின் விளம்பரங்கள் தானிருக்கும். இவ்வாறு பல லட்சம் ரூபாய் செலவு செய்து மக்களின் மனதில் ஆருத்ரா நிறுவனம் இடம்பிடித்ததையடுத்து, தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு அதிக வட்டி தருவதாக அந்நிறுவனம் விளம்பரம் செய்தது. அதாவது, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.36 ஆயிரம் வீதம் 10 மாதம் பணம் தருவதுடன், 2 கிராம் தங்கக்காசு தருவதாகவும் ஆருத்ரா நிறுவனம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் அந்நிறுவனத்தில் சிந்திக்காமல் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால், கூறியபடி அந்நிறுவனம் மக்களுக்கு பணம் வழங்கவில்லை. என்பதை விட அவர்கள் எப்படித்தருவார்கள் என மக்கள் எதிர்க்கேள்வி  கேட்கவில்லை அரசியல் வாதிகள்  ஊழல் அதிகாரிகள்  வேண்டுமானால் இப்படி வாங்கிய இலஞ்சப்பணங்களை முதலீடு செய்தால் வரமல் போனால் அவர்களுக்கு கவலையில்லை ஆனால் சாமானிய மக்களின் பணத்தைக் களவாடிய இதுபோலவே, ஹிஜாவு அசோசியேட்ஸ நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்வோருக்கு 15 சதவீதம் வட்ட தருவதாக ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு விளம்பரம் செய்தது. இதை நம்பி,  பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஹிஜாவு நிறுவனத்தில் ரூ.800 கோடி முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தனர். வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிய ஐஎஃப் நிறுவனமும் இதே பாணியில் மக்களை ஏமாற்றியது. இவ்வாறு இந்த நிறுவனங்கள் மக்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பான புகார்களின் பேரில் அந்நிறுவனங்கள் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, , ஆருத்ரா கோல்டு நிறுவன நிர்வாகிகள் சென்னை மேத்தா நகர் ராஜசேகர், விருதுநகர் மைக்கேல்ராஜ், திருவள்ளூர் முகப்பேர் கிழக்கு உஷா, ஐஎஃப்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வேலூரைச் சேர்ந்த மோகன் பாபு, லட்சுமி நாராயணன் வேதநாராயணன், ஜனார்தனன், ஹிஜாவு நிறுவனத்தைச் சேர்ந்த புது பெருங்களத்தூர் அலெக்ஸாண்டர், மகாலட்சுமி பரந்தாமன், அம்பத்தூரைச் சேர்ந்த சுரேஷ், பெங்களூரைச் சேர்ந்த இனியா, சென்னையைச் சேர்ந்த சுஜாதா காந்தா, அடையாறு கவுரி சங்கர்,வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பிரிஸ்டில்லா, கலைச்செல்வி ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இவர்கள் அனைவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளனர்.அதுமட்டுமல்ல, இந்த மோசடி நிறுவனங்களின் உரிமையாளர்கள் பலர், வெளிநாட்டில் பதுங்கியிருக்கிறார்களாம்.. இவர்களை இண்டர்போல் உதவியுடன் ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.. இந்த 3 பெரிய நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக மேற்கொண்டு புகார் அளிக்க தனித்தனியாக இ-மெயில்  முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன.. அதேபோல, இந்த 3 மோசடி வழக்குகளிலும் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளிகளின் புகைப்படங்களையும் தமிழ்நாடு காவல்துறை இப்போது வெளியிட்டுள்ள நிலையில், தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளரை அணுகி தகவல் தெரிவிக்குமாறு தமிழ்நாடு காவல்துறை வேண்டுகோளும் விடுத்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த