ஆவடி போர் ஊர்தி நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது
ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (சிவிஆர்டிஇ) பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மார்ச் 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 52-வது தேசிய பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. ஊழியர்களின் பங்கேற்புடன் 9-ந் தேதி தீயணைப்புக் குறித்த செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.
தீ விபத்து போன்ற எதிர்பாராத சம்பவங்களின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சிபிஆர்டிஇ பாதுகாப்புப் பணியாளர்கள் செயல் முறை விளக்கம் செய்து காண்பித்தனர். நிறுவனத்தின் மருத்துவக் குழுவினர், மாரடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார்கள். இந்த நிகழ்வுகளின் போது போர் ஊர்தி நிறுவனத்தின் இயக்குநரும், சிறந்த விஞ்ஞானியுமான வி.பாலமுருகன், மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்