முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி தானாக பதவி பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி தானாக பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு


காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத்தொடர்ந்து,  ஆபா முரளிதரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில்,  ''இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8 (3) ன்படி குறைந்தபட்சம்  இரண்டாண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகளின் பதவி, தீர்ப்பு வந்ததும் தானாகவே தகுதி நீக்கம் ஆகிவிடும் என்பது தவறானது.



எனவே, அவ்வாறு தானாகவே தகுதி நீக்கம் ஆகிவிடும் என்பதை சட்டவிரோதமானதென நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். தானாகவே பதவி பறிபோய் விடும் என்பது அரசியல் சாசனத்திற்குள் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக நுழைந்துள்ள வைரஸ் கிருமியைப் போன்றதென அறிவிக்க வேண்டும்'' எனக் கோரப்பட்டுள்ள இந்த மனு வழக்கறிஞர் தீபக் பிரகாஷ் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மனுவில், ''அவதூறு வழக்கில் அதிகபட்சம் இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட மாட்டாது என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 ன் படி உறுதிப்படுத்த வேண்டும்.


ஏனெனில், அவதூறு வழக்கில் தகுதி நீக்கம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமையைப் பாதிக்கிறது'' என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும். இதில் பொதுநீதி  யாதெனில்   இராகுல் காந்தி மீது வழக்குப் போட்டது 
 பூர்னேஷ் மோடி  குஜராத் சட்டமன்ற உறுப்பினர் 

நரேந்திர மோடியை ராகுல் அவமானமாகப் பேசிவிட்டார் என்பதற்கான வழக்கல்ல.இது 


நீரவ் மோடி என்ற பிஸினஸ் ஆசாமி சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகளில் பெருந் தொகைகளைக்  கடனாகப் பெற்றுவிட்டு - கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார்.  கர்நாடக மாநிலம் கோலார் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி அவதூறாகப் பேசியதாக குஜராத் மாநிலத்தில் வழக்கு 
மோடி, பட்டேல், சோலங்கி தாகூர் ,யாதவ்,  ரெட்டி ,ராவ், நாயுடு,கௌடா, நாயர், இவை எல்லாம் குஜராத்தில் மாத்திரமல்ல வட தென் இந்தியாவில் ஜாதிகள் இணைப்பில் இல்லாத பலரது பெயர்கள் இல்லை பல்வேறு சமூகங்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகளின் பெயர்களில் தான் மக்கள் இன்று வரை அறியப்படுகிறார்கள் மாதவ் சிங் சோலங்கி, கேசுபாய் பட்டேல் இப்படித் தான் தலைவர்களைக் கூட அழைக்கும் நிலை 


ஒரு கிராமத்தில் பல மோடிகள் இருப்பார்கள், பல பட்டேல்கள் இருப்பார்கள்... 

ராகுல் காந்தி- பிரதமர் நரேந்திர மோடியை  விமரிசிப்பதாக எண்ணி - "மோடி என்றாலே மோசடி"- என்று பேசியரால்

"மோடி" என்ற பின்னொட்டை தாங்கிய சமூகத்திலிருந்து ஒருவர் ராகுல் மீது வழக்குப் போட்டுவிட்டார். இதுதான் இனிமேல் இந்தியாவில் அணைத்து சமூக ஜாதிய மக்களுக்கும் பொருந்தும் உதாரணம் காட்டும் தீர்ப்பாகும்,

"ஒரு குறிப்பிட்ட ஜாதியை - சமூகப் பிரிவினரை இழிவு படுத்துவது போலப் பேசுவது"- என்பது தண்டனைக்குரிய குற்றம். 
இனி பலரும் இதே முறையில் சிக்குவார்கள்,
சூரத் நீதிமன்றம் அந்த அடிப்படையில் "ராகுல் காந்தி குற்றவாளி"- என்று தீர்ப்பளித்து - அதற்கு அந்த சட்டப்பிரிவின் படி இரண்டாண்டுகள் சிறை தண்டனை அளித்திருக்கிறது. 

அதே நீதிமன்றத் தீர்ப்பை  ராகுல் விரும்பினால் உச்ச நீதிமன்றம்  வரை கொண்டு முறையீடு - அப்பீல் செய்யவும் அனுமதி உண்டு 30 நாள் ஜாமீனும் உண்டு.  
இது DUE PROCESS OF LAW.
"கருத்துரிமை" பறிப்பா இல்லையா என்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் தான் முடிவு செய்யும் 

ஒரு குறிப்பிட்ட ஜாதியை அல்லது சமூகப் பிரிவை - "இந்த சாதிப் பின்னொட்டு வைத்துள்ளவன் அத்தனை பேரும் மோசடி - என்று பேசினாரா அல்லது  ஒருவரை மட்டுமே குறிப்பிட்டாரா இது "கருத்துரிமை"யா? இல்லையா என்பதே தற்போது எழுவினா 

தமிழ்நாட்டில் அப்படி ஏதாவது ஒரு ஜாதியைக் குறிப்பிட்டு - "அதில் அத்தனை பயலும் மோசடி"- என்றால் இனி வழக்குகள் பேசியவர் மீது வரலாம் அதற்கு முன் உதாரணம் ராகுல்காந்தி மீதான தீர்ப்பு,   

தமிழ்நாட்டில் கும்மிடிப் பூண்டி தாண்டி வேறு எதுவும் தெரியாத கிணற்றுத் தவளைகள் - லால் பகதூர் சாஸ்திரியை - பிராமணர் அல்லாதவர் என்பதை அறியாமல் - வி.பி.சிங்தான் முதல் "பார்ப்பனர் அல்லாத இந்தியப் பிரதமர்"- என்று பலர் பேசிவந்ததை நாமரிவோம்  (1989 ஆம் ஆண்டில்).

இவர்களுடைய வரலாற்று அறியாமையும் பல்லிளித்தது. இவர்கள் சொல்படியே பார்த்தாலும் சரண்சிங் அதற்கு முன்பே (1979 ஆம் ஆண்டில்) சில நாட்களேனும் "பார்ப்பனரல்லாத" பிரதமர் ஆகிவிட்டார். 
இதில் சிலர் லால் பகதூர் சாஸ்திரியை பிராமணர் என்று கருதி - உண்மையில் பிராமணர் அல்லாத அவரை விட்டு விட்டு - வி.பி.சிங்தான் "பார்ப்பனரல்லாத" முதல் பிரதமர் என்று கொண்டாடினார்கள்.
பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி வித்யா பீடத்தை நிறுவினார். 

பிரிட்டிஷ் அரசிடமும் பின் சுதந்திர பாரதம் அமைந்தால் அந்த சுதந்திர பாரத அரசிடமும் பைசா கூட மானியம் (GRANT) வாங்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி வித்யா பீடத்தை நிறுவினார். 

அது முழுக்க முழுக்க சுதேசி கல்வி நிறுவனம் - அதில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு "சாஸ்திரி" என்று பட்டம்! (சாஸ்திரம் - படிப்பு/ பாடம்) 

பீகாரின் பட்டியலினத் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான போலோ பஸ்வான் சாஸ்திரி கூட இதில் பயின்றவர்தான். 

ஆனால் பஞ்சாபகேச சாஸ்திரியும், நீலகண்ட சாஸ்திரியும் மட்டுமே தெரியுமாதலால் லால்பகதூர் சாஸ்திரியை "பார்ப்பனர்" கணக்கில் சேர்த்துவிட்டனர்.

முதலில் வட மாநிலங்களின் சமூக அமைப்பு - பெயர் சூட்டும் முறை இதை எல்லாம் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டினால் - மோடியை எதிர்த்தால் அதை அரசியல் நிகழ்வாக விட்டுவிடுவார்கள்! 

ஆனால் "மோடி எனும் சாதி" யை விமர்சித்தால் வழக்கு இருவே இனி இந்தியா முழுவது ஜாதி விமர்சனம் வழக்காக மாறும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...