ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை எடுத்துரைக்கும் வீடியோவைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
ஒரு இசைக்கலைஞர் பல மொழிகளில் பாடும் இனிமையான பாடலைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வின் சிறந்த வெளிப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,
"திறமை வாய்ந்த சினேகதீப் சிங் கல்சியின் இந்த அற்புதமான இசையுணர்வைக் கண்டேன். இனிய இசையுடன் இது 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' உணர்வின் சிறந்த வெளிப்பாடாகும். சூப்பர்!"
கருத்துகள்