ஜப்பானில் உள்ள வக்கயாமாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்குப் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்
ஜப்பானில் உள்ள வக்கயாமாவில், ஜப்பான் பிரதமர் திரு.ஃபுமியோ கிஷிடா கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஜப்பானில் உள்ள வக்கயாமாவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் எனது நண்பர் PM @Kishida230 கலந்துகொண்டபோது வன்முறை சம்பவம் நடந்ததாக அறிந்தேன். அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதில் நிம்மதி அடைந்தேன். அவர் தொடர்ந்து நலமுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கப் பிரார்த்தனை செய்கிறேன். அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்தியா கண்டிக்கிறது."
கருத்துகள்