ஆசியாவின் முதல் ஹெலிகாப்டர்களின் செயல்திறன் அடிப்படையிலான செயல்முறை விளக்கத்திற்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி, ககன் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜூஹுவிலிருந்து புனேவுக்கு ஹெலிகாப்டர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஆசியாவின் முதல் செயல்முறை விளக்கத்தை பாராட்டியுள்ளார்.
மத்திய சிவில் விமான போக்குவரத்து மற்றும் எஃகு துறை அமைச்சரின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்துள்ள பிரதமர்,
"இந்தத் துறைக்கான குறிப்பிடத்தக்க மைல்கல்! பாதுகாப்பான மற்றும் திறமையான விமானப் போக்குவரத்து நிர்வாகத்திற்காக மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்