முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேதி மொழி மக்கள் வீதிக்கு வந்ததேன் - மனிப்பூர் அவலம் உண்மை நிலை

இலங்காபுரி (ஈழம்), காஷ்மீரம், பாலஸ்தீனம், உக்ரைன், ஜெருசலேம், இந்தியா (போர்சுவா நாக்பூர் பிற+மண்- பிராமணர்கள்) இந்த வரிசையில் மணிப்பூர்.


ஆம் நிலத்தை யார் கைப்பற்றுவது என்பதில் தான் இந்த யுத்தமும், போரும், இரத்தமும், கலவரம், இன அழிப்பு மற்றும் ஒற்றை மத உருவாக்கம் அனைத்தும். மணிப்பூர் தனி மாநிலமாக 21.ஜனவரி.1972- ல் தான்  உதயம்.

2011 மக்கள் தொகைக் கணக்குப் பதிவுகளின் படி  ஹிந்துக்கள் 41.39 சதவீதம், இஸ்லாமியர்கள் 8.40 சதவீதம், கிறிஸ்துவர்கள் 41.29 சதவீதம். சீக்கியர்கள் 0.05 சதவீதம், . தலைநகரம் இம்பாலை  ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் ‘மெய்த்தேயி’’ இனக்குழு மக்கள் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் உள்ளவர்களில் பெரும்பாலனவர்கள் ஹிந்து சமயத்தைச் சார்ந்தவர்கள். கிருஷ்ணரை வழிபடுபவர்கள். வேளாண்மையை முதல் தொழிலாகக் கொண்டவர் விவசாயக் குடிகள். 


பழங்குடி மக்களைக் காட்டிலும் வளமாக உள்ளவர்கள். இவர்கள், ஆட்சி அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவோராவர். 

1992-ஆம் ஆண்டில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரை நடை முறைக்கு வந்த பிறகு  இவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களின்  பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மணிப்பூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை அறுபதில் மெய்த் தேயி இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே நாற்பது பேர். மலைப் பகுதிகளில் முப்பத்து நான்கு வகை மலைவாழ் பழங்குடியினர் வாழ்கின்றனர்.  அதில் முதன்மையானவர்கள் குக்கி-சோமி எனும் நாகா இனத்தவராவர்.

 மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வரும் மக்களில் 40.88 சதவீதமாவர். 


மலைவாழ் பழங்குடியினருக்கான (ST) பிரிவில் இவர்களுக்கு 31 சதவீதம்  இடஒதுக்கீடு வழங்கப் படுகின்றது.  இதில்  பெரும்பான்மையினர் கிறித்தவர்களாவர்

வாக்குவங்கி  அரசியலில் வெற்றி பெற்று  தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்காகப் பெரும்பான்மை ஹிந்துக்களான மெய்த்தேயி மக்களை மலைவாழ் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து கூறிவந்த நிலையில் தற்போது அவர்கள் தலைமையிலான கூட்டணியாட்சி நடைபெறுகிறது. என். பைரோன் சிங் முதலமைச்சராவார். மெய்த்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர். பா.ஜ.க.-32, இடத்திலும் காங்கிரஸ் கட்சி -5, இடங்களிலும்  ஜெ.டி.யூ.-6, இடங்களிலும் நாகாலாந்து மக்கள் முன்னணி (N.P.F.)-7, இடத்திலும் மற்றவர்களில்  10 பேரும் சட்டமன்ற உறுப்பினர்களாவர்.மெய்த்தேயி வகுப்பைச் சேர்ந்த சிலர்  மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு வழக்குத் தொடுத்து .

உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி.முரளிதரன் 

மெய்த்தேயி வகுப்பு மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரை செய்து நான்கு வாரங்களுக்குள் ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும் என உத்தர விட்டதனால் மலைவாழ் பழங்குடியினரான குக்கி-சோமி, நாகா இன பழங்குடி மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்புகள் பறிபோய்விடுமென அச்சமடைந்தனர். 
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, பழங்குடிகளின் தலைவர் தின்காங்க் லூங்க் காங்க்மேய் கடுமையாக விமர்சனம் செய்ததனால் ஆத்திரமடைந்த நீதிபதி முரளிதரன், பழங்குடித் தலைவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடுத்து அவரை நீதிமன்றத்தில் நேர் நிறுத்த மாநிலக் காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டார்.
மலைவாழ் பழங்குடியினரின் உரிமையைப் பாது காப்பதற்காக 

03.05.2023 ஆம் தேதியன்று மணிப்பூர் அனைத்துப் பழங்குடி இன மாணவர் கூட்டமைப்பு (All Tribal Students’ Union Manipur) (ATSUM) சார்பில் 

மலைவாழ் பழங்குடியினரின் ஒற்றுமைப் பேரணியை எட்டு மலை மாவட்டங்களில் நடத்தினர். 

அதில்  மெய்த்தேயி குழுவினர் பழங்குடி இன மக்கள் மீது மிகப்பெரிய தாக்குலை நடத்தியதனால் இரு பிரிவினருக்குமிடையில் அது மிகப்பெரிய வன்முறை மூண்டது.

03.05.2023 ஆம் தேதியன்று தொடங்கிய வன்முறைப் போராட்டம் இன்று வரை தொடருகிறது. 


ஏராளமான வீடுகள், கிருஷ்துவத் தேவாலயங்கள், மருத்துவமனைகள் தீக்கிரையாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பழங்குடியினராவர். 

இலட்சக்கணக் கானவர்கள் தங்கள் உடைமைகளை இழந்து பரிதவித்தனர். வீடு இழந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அகதிகள் முகாம்களில் தங்கினர். 

இராணுவமும், அசாம் ஆயுதப்படையும் வரவழைக்கப்பட்டது. 

மெய்த்தேயி இன மக்கள் வாழும் சமவெளிப் பகுதியில் பெரும்பான்மையினர் ஹிந்துக்கள், சிறுபான்மையினர் கிறித்தவர்கள். ஆதலால்  247 தேவாலயங்களை அழிக்கப்பட்டன,

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து  தின்காங்க்லுங்க் காங்க்மேய் இரண்டு மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதில் ஒன்று மெய்த்தேயி மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரைக்குத் தடை. இரண்டாவது நீதிமன்ற அவமதிப்புக்குத் தடை விதிக்க வேண்டும். என்பதே


இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது. 

மேல் முறையீடு செய்த பா ஜ க. சட்டமன்ற உறுப்பினரும் மலைவாழ் பகுதி குழுவின் தலைவருமான தின்காங்க் லுங்க் காங்க்மேய் மனுவை திரும்பப் பெற்றார்.

அந்த மேல் முறையீட்டு வழக்குகளை  அனைத்திந்திய பழங்குடி மாணவர் சங்கத்தின் தலைவர் பட்டின்தாங் லூபெங் தொடர்ந்து நடத்தினர்.அதில் 

07.05.2023 ஆம் தேதியன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், 

“எந்த மாநிலத் திற்கும் எவர் எவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்று 

உச்சநீதிமன்றத்தின் அரசு அமைப்புச் சட்ட ஆய்வு இருக்கை அமர்வு பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியள்ளதை எடுத்துக்காட்டி 


மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது” என்று தீர்ப்பளித்தார். மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின்இந்தத்  தீர்ப்பு தான்  மே மாதம் 3-ஆம் தேது நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு மூலக்காரணமாகும். 

மணிப்பூர் மாநிலத்தின் சட்டப்படி பழங்குடியினர் வாழும் மலைப் பகுதியில் பள்ளத்தாக்கில் வாழும் மெய்த்தேயி இனமக்கள் நிலம் வாங்க முடியாது. 

அதனால்தான் நிலம் வாங்கும் உரிமையைப் பெற்று மலைப் பகுதியின் நிலவளங்களைச் சுரண்டுவதற் காகவே ஹிந்துக்களான இவர்கள் பட்டியல் இனப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்கின்றனர்.

பழங்குடியினர் கஞ்சா பயிரிடுகின்றனர் என்று கூறி பல இடங்களில் அவர்களின் பயிர்களை அழித்து விரட்டியடித்தனர்.  இது பழங்குடியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மலை வளங்களை தாரை வார்ப்பதற்காக மணிப்பூர் அரசு தொடர்ந்து செயல்படுகிறது எனவும் . 

அதற்குத் தடையாகவும் தங்களின் நீண்டகால வாழ்விடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் மலைவாழ் மக்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.மலைவாழ் பகுதியைச் சேர்ந்த பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் 

10.5.2023 ஆம் தேதியன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். 


அதில் ஏழு பேர் பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் அந்தக் கூட்டு அறிக்கையில்  இனிமேல் மணிப்பூர் மாநிலத்தின் நிர்வாகத்தின்கீழ் நாங்கள் வாழ விரும்ப வில்லை. 

எங்களை ஒடுக்குவதிலேயே இந்த அரசு குறியாக இருக்கின்றது. எனவே எங்களுக்கு தனி நிர்வாக அமைப்பு (யூனியன் பிரதேசம்) தேவை என்று வலியுறுத்தினர். 

உள்துறை அமைச்சர் அமித்ஷா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மலைப்பகுதியில் வாழும் குக்கி, நாகா இனமக்கள் குறிப்பாக கிறிஷ்தவர்கள், 

மே மாதம் 3 ஆம் தேதியன்று நடைபெற்ற தாக்கு தலில் குக்கி இன மக்கள் அதிகமாக வாழும் கராசந்தபூர் பகுதி  தான் மிக மோசமான  தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அங்குள்ள தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் 30.05.2023. ஆம் தேதியன்று 

குடியரசுத் தலைவரைச் சந்தித்து மணிப்பூர் கலவரத்தை நீங்கள் தலையிட்டு உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா வன்முறை நிகழ்ந்த பின் 29.05.2023 ஆம் தேதி முதல் 01.06.2023 ஆம் தேதி வரை மணிப்பூரில் தங்கியிருந்து பல்வேறு போராளிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்தார். இந்த நிலையில் மணிப்பூரில் இரண்டு பட்டியலினப் பெண்களை சில மனித மிருகங்கள் நிர்வாணப்படுத்தி  ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் . கேட்டால் இதுவும் தேச பக்தி என்றும் பாரத் மாதா கி ஜே என்ற கோசங்களுடன் ஊர்வலமும் போயினர். 

அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்  கூறும்போது தன்னுடைய அண்ணனுடைய நண்பர்களை மட்டும் தனக்கு  அடையாளம் தெரியுமென்று தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவர்களுடன் இனி யாரும் நட்புக் கொள்ளக்கூடாது என்பதை அந்த பெண் தெளிவு படுத்தியுள்ளார் 

 அதை புரிந்து கொண்டு அவர்களுடன் விலகி இருப்பது சிறந்தது. தவறினால் எந்தப்  பெண்களையும் விட்டுவைக்க மாட்டார்கள் என்ற பயம் கலந்த எச்சரிக்கை தான் அதை விடக் கொடூரம் வேறெங்கும் நடக்காது என்பதற்கு எந்த சூழலும் சரியாகவில்லை 

மணிப்பூரில் ஏன் ஆட்சியைக் கலைக்கவில்லை? என்ற வினா பலருக்கும் உண்டு, 

அவசரநிலை பிரகடனம் செய்து ஜனாதிபதி ஆட்சி அமைத்து நீதிவிசாரணை நடத்துவதில் தான்  அரசியல் சார்ந்த  நிலையில் பின்புல ஐந்து சம்பவங்களை நாம் பார்க்க வேண்டும்  

முதலாவது. மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடென்று ஒரு தீ பற்றியது.

இரண்டாவதாக. போராட்டம் கலவரமாக மாறுகிறது.

மூன்றாவதாக. இணைய தள சேவைகளை  அரசு நிறுத்தி விடுகிறது.

இந்த நிலையில் காணொலி நேற்று முன் தினம் தான் வெளியாகிறது.

நடந்த.காட்சிகளின்  அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்காக்கி அதில் எச்சரிக்கை விடுகிறது.. உடன்  பிரதமர முதன் முறையாக வாய் திறக்கிறார்.

பின் . நாடாளுமன்றம்  முடக்கமாகிறது.  அதில் மத்திய அமைச்சர் ஏன் இத்தனை நாள்களாக அமைதியாக இருந்தீர்கள் என்கிறார்.

அடுத்ததாக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மற்றும் பல எதிர் கட்சிகள் இணைந்து ஏன் இதற்காக நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்த நிலையில் பின் திடிரென விழித்த காரணம் பலருக்குப் புரியவில்லை ? அங்குள்ளவர்கள் கட்சியினரோ, ஏனையோரோ, இது குறித்து தகவல்கள் தராமலா இருந்திருப்பார்கள் ? பலரும்  ஐ லவ் இந்தியான்னு கிளம்பியிருக்காஅங்க.

ஆக இப்போது பலரும் காண்பது முதலாளித்துவம். திராவிடத்தின் கங்காணி.குறிவைக்கப்படும் இந்தியாவின் மகள்கள் : தேசத்தையே உலுக்கிய காணொளிக்காட்சியானது 

 இந்தியாவையே புரட்டிப் போட்ட நிலையில் அது குறித்து விரிவாக அலசும் பொது நீதி குறித்த  இந்தத் தொகுப்பு.

இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சுற்றிலும் ஆண்கள் புடைசூழ செல்போன் கேமராக்களில் படம்பிடித்துக் கொண்டே ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சி காணொளியாக வெளியாகி இந்தியாவையே உலுக்கியது. அந்த காணொளி காட்சி மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி படமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள காங்கோப்கி மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்திலிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஒடிய போது 3 குக்கி இனப் பெண்களை வழிமறித்து காட்டுமிராண்டிக் கும்பலொன்று உடைகளை கழட்டி நிர்வாணப்படுத்தியதோடு , அவர்களில் 21 வயது பெண் ஒருவரை பட்டப்பகலில் கூட்டுப் பாலியல் வல்லுறவும் செய்திருக்கிறது.

 இந்தச் சம்வத்தை தடுக்க சென்ற பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை மற்றும் சகோதரனை அடித்துக் கொன்றிருக்கிறது அந்தக் கும்பல் . மற்ற இரண்டு பெண்களும் அந்தக் காட்டுமிராண்டிக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஊர்காரர்கள் உதவியிருக்கிறார்கள். பலரும் வெட்கித் தலைகுனிய வைத்த இந்தக் காணொளி காட்சி சம்பவத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது மணிப்பூர் மாநிலக் காவல்துறை.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து அரசியல் தலையீடுகள், கண்டனங்கள் என அதிர்வலகளை ஏற்படுத்த , காணொளியில் பச்சை டீஷர்ட் அணிந்த 32 வயதான ஹீராதாஸ் என்ற குற்றவாளியை தளபல் மாவட்டத்தில் கைது செய்து , கடந்த 77 நாட்கள் மணிப்பூர் கலவரத்தில் முதல் கைதை தற்போது நடைமுறைப்படுத்தியிருக்கிறது மணிப்பூர் காவல்துறை.

 மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெரும்பான்மை சமூகமான மெய்தி இன மக்களுக்கு அம்மாநிலத்தின் சிறுபான்மையராக உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த குக்கீ இன மக்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் இரண்டு தரப்பிலும் பாதிப்புக்குள்ளான பெண்களும் , குழந்தைகளும் தான் . கண் முன்னே அவர்களது வீடுகளை தீயிட்டு கொளுத்திய நிகழ்வுகளைப் பார்த்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தாலும் கண் மூடினால் தீ வைப்பார்களோ என்ற அச்சத்தால் தூங்க முடியாமல் அந்த மக்கள் தவித்து வருகிறார்கள் அந்தப் பெண்களும் ,குழந்தைகளும்.

3 ,4 குழந்தைகளுக்குத் தாயாகயிருக்கும் கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் அப்பா எங்கே என்று கேட்கும் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாமல் தேற்றுவாரின்றி நிற்கிறாள் அந்தப் பெண். கணவனை இழந்து, வீடுகளை நிலபுலங்களை, உடைமைகளை இழந்து ,கைகளில் கணவர்களின் புகைப்படங்களை மார்போடு அணைத்துக் கொண்டு அழும் அந்தப் பெண்களின் எதிர்காலம் மீண்டும் பூஜ்யத்திலிருந்து தொடங்க திக்கு தெரியாத நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் அந்தப் பெண்கள் .

 தந்தை, சகோதரன் என இரத்த உறவுகளின் இழப்பு, பறிபோன பாடப்புத்தகங்கள் , செல்லமாக வளர்த்த வளர்ப்புப் பிராணிகள் , அது வரை தங்கி இருந்த வீடு, விளையாடிய விளையாட்டு பொருட்கள் என அனைத்தையும் இழந்து நிற்கும் அந்த குழந்தைகள் பள்ளிக்கும் செல்ல முடியாமல் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கே உரிய குழந்தை பருவத்தையும் இழந்து நிற்கும் அந்த குழந்தைகளின் மன நிலையை சிந்திக்கவே  பதட்டமானது.

 மணிப்பூர் தலைநகர் இம்பாலைச் சுற்றியுள்ள சூரசந்தபூர் ,பிஸ்னாபூர் , தூர்பங், மொய்ராங் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில கிராமங்கள் முழுவதுமே சூரையாடப்பட்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்தக் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பக்கத்துக் கிராமங்களின் எல்லைப் பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 12 நாட்களுக்கு மேல் குளிக்காமல் முகாம்களிலிருக்கும் பெண்கள் , தண்ணீரை மட்டும் குடித்து வாழும் பெண்கள் , தங்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளை மட்டுமே உணவாகக் கொடுக்கும் அம்மாக்கள் என முகாம்கள் இன்னொரு வதை முகாமாக மாறி இருக்கிறதை அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்த

சில தன்னார்வத் தொண்டு நிறுவன  அமைப்புகள் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளுக்கு உணவுகள் , பாடப்புத்தகங்கள் , உளவியல் நிபுணர்களை கொண்டு உளவியல் பயிற்சிகள், நிவாரணங்கள் என்று வழங்கிய போதும் கையில் ஆயுதங்கள் , துப்பாக்கிகள் , கம்புகள் என இளைஞர்கள் கூட்டமாக கூட்டமாகச் செல்வதைப் பார்க்கும் அந்த பிஞ்சு குழந்தைகளின் மனநிலை நஞ்சு கலந்த நிலையில் பெரும் அச்சத்திலேயே தான் உள்ளது.

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் நிலை இன்னும் மோசம். மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாததால் குழந்தைப் பேரு குறித்த அச்சம் , உளவியலாக கர்ப்ப கால பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னொரு பக்கம் கார்கள் மற்றும் சாலைகளில் குழந்தைப் பேறுகள் நடந்தேறுகிறது. பச்சிளங் குழந்தையோடு பாலூட்டும் தாய்மார்கள் முறையான ஊட்டசத்தான உணவின்றி பட்டினி கிடக்கிறார்கள் .

இதுவரை காடுகளின் வாசம் அறிந்த பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்து தற்போது தான் கல்வியின் சுவாசத்தை உணர்ந்த முதல் தலைமுறை படிப்பறிவு பெறுகிற பெண்கள் ,போட்டித் தேர்வுக்கு தயாராகும் பெண்கள் அனைவரின் எதிர்காலமும் தற்போது கேள்விக் குறியாகிறது.

கடந்த 3 மாதங்களில் 14 ஆயிரம் பெண்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள் . 14 ஆயிரம் பெண்கள் என்ற புள்ளி விவிரங்களை அளித்தது அரசோ , அரசு அதிகாரிகளோ அல்ல, தன்னார்வ அமைப்புகள் தான்.  . இவை அனைத்தும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அனைத்து தேசிய ஊடகங்களிலும் வந்த செய்திகள். கூடவே ' The Burden of Riots' என்ற தலைப்பில் பிரபல இணையதள மொன்றில் கட்டுரையாகவும்  வெளிவந்துள்ளது.

ஜாதி, மதம் , பொருளாதார அடுக்குகளில் தந்தை வழி சமூகத்தில் ஆண்களின் அதிகாரத்தை வைத்து நடத்தப்படும் பெண்களின் மீதான வன்முறைகள் காலங்காலமாக நடந்தேறுகிறது . சிறு குழுக்களுக்கிடையே ஆன கலவரங்கள் தொடங்கி இரு நாடுகளிடையே ஆன பெரும் போர்கள் வரை என எத்தகைய வடிவங்களில் வன்முறைகள் நடந்தாலும் அதில் பாதிப்புக்குள்ளாவது பெண்கள் தான் . எதிராளிகளை பழிதீர்க்க கலவரங்களில் ஆண்கள் ஆயுதமாக பெண்களின் உடலை தான் பயன்படுத்துகிறார்கள். பெண்களின் உடல் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய வன்முறைகள் மூலம் எதிராளியை வீழ்த்த முடியும் என்றோ அல்லது வீழ்த்த முடியாது போது பெண்களை பாலியல் வல்லுறவு செய்து சித்தரவதைக்குள்ளாக்குகிறார்கள்

 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரமடைந்து இரண்டாகப் பிரிந்த போது , 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்கதேசப் போர் , 1984 ஆம் ஆண்டில் அரங்கேறிய சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் , இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர் இனப்படுகொலை என தெற்காசிய வரலாற்றில் நடைபெற்ற இத்தகைய பெரும் வன்முறைகளில் பெண்கள் மீதும் அவர்களது உடல்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் எண்ணிலடங்காதவை. அவைகள் அனைத்தும் வார்த்தையால் விவரிக்க முடியாதவை. அவை பெரும்பாலும் வெளியே வருவதே இல்லை. அப்படியே அவை வெளியே வந்தாலும் அதற்கான நீதி என்பது இரண்டாம் பட்சம் தான் . ஒரு வேளை அப்போதெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திருந்தால் இப்படி பட்டவர்த்தனமாக பாலியல் வல்லுறவு செய்ய ,நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் அளவிற்கு குரூர ,குரோத மனநிலை உருவாகாமல் போயிருக்குமோ என்னவோ.

தேர்தல் அரசியலில் அரசியல் கட்சிகள் அனைத்தும் பெண்களை மையமாக வைத்து நலத் திட்டங்களை அறிவிப்பதை தற்போது வாடிக்கையாக கொண்டுள்ளனர் . இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் பெண்களின் வாக்கு வங்கி அதிகம் இருப்பதாலும் ,பெண்களின் முன்னேற்றமும் தேவைப்படுவதாலும் தான் இத்தகைய நலத்திட்ட அறிவிப்புகள் வருகிறதே என்று ஆதங்கப்பட்டாலும் அப்படியாவது பெண்கள் நலனில் அரசியல் தலைவர்கள் அக்கறை கொள்கிறார்களே என ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்கள் பெண்கள் .                                ஆனால் வருங்காலங்களில் இத்தகைய அசம்பாவிதங்கள் , வன்முறைகள் , கலவரங்கள் நடந்தேறும் போது பெண்களைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாகத் தர வேண்டும். அந்த வாக்குறுதிகளை மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போன்று அசம்பாவித காலங்களில் , பேரிடர் காலங்களில் குழந்தைகளை, பெண்களை சுயமரியாதையுடனான பாதுகாப்பை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் பாதிப்புக்கு ஆளக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தலையாய கடமை. அது தான் ஓரிரவில் இந்திய தேசத்தையே உலுக்கிய மணிபபூர் நாட்டியம் உள்ளிட்ட பல வகையில் இனிப்பூர் என்றிருந்த நிலை தற்போது மாறிப்போனது தான் பலரது கவலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்