கடன் வாங்கியதில் தவணைத் தொகை முறையாகச் செலுத்தாத தொழிலாளியின் மைனர் மகளைக் கடத்திக் கைதான நிதி நிறுவன ஊழியர்
வேலை முடித்து வீட்டிற்குத்திரும்பிய வனத்து ராஜா வீட்டுக்கு வந்தபோது மகள் இல்லாததால், பதற்றமடைந்தவர் அக்கம் பக்கத்தில் வசிப்போரிடம் விசாரித்தபோது நிதி நிறுவன ஊழியர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றுவிட்டதாகக் கூறியிருக்கின்றனர்.அதிர்சியில்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில், மருதூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி வனத்து ராஜா மாதாந்தர தவணையில் ரூபாய்.50 ஆயிரம் கடன் வாங்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் தவணைத் தொகையை முறையாகச் செலுத்தாமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் அந்த நிதி நிறுவனத்தில் வசூல் ஊழியரான விக்னேஷ் (வயது 28) என்பவர் பணம் வசூலுக்காக மருதூர் வனத்து ராஜா வீட்டுக்குச் சென்ற போது, வனத்து ராஜா வீட்டிலில்லை. அவரது 11 வயது மகள் வீட்டிலிருந்திருக்கிறார். அப்பா வேலைக்குச் சென்றுவிட்டதாகச் சிறுமி கூறியிருக்கிறார்.அதையடுத்து, விக்னேஷ் வலுக்கட்டாயமாகச் சிறுமியை டூ வீலரில் நிதி நிறுவனத்துக்கு ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார்
இருந்திருக்கிறார். அப்பா வேலைக்குச் சென்றுவிட்டதாகச் சிறுமி கூறியிருக்கிறார். இதையடுத்து, விக்னேஷ் வலுக்கட்டாயமாகச் சிறுமியை டூ வீலரில் நிதி நிறுவனத்துக்கு ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார்.
அதனால் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தவர்,கீரனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கீரனூர் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, சிறுமியை மீட்டனர். சிறுமியைக் கடத்திச் சென்ற விக்னேஷை கைதுசெய்து அவரது இரண்டு சக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்