சென்னையில் பத்து இடங்களிலும், நாகர்கோவிலில் ஓரிடத்திலும் என்ஐஏ அலுவலர்கள் சோதனை
நடத்தி வருகின்றனர் சென்னை, கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டையில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பான வழக்கை, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரித்து வந்ததனிடையே, இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து, வழக்கு தொடர்பாக மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் கைப்பற்றி வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தும், என்.ஐ.ஏ அலுவலர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட "ஹிஸ்புத் தஹ்ரிர்" என்ற அமைப்புக்கு ஆதரவாக ஆட்கள் சேர்ப்பில் ஈடுபட்டதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஆறு பேரை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்திருந்தனர்.
அதில் டாக்டர் ஹமீது உசேன், அவருடைய தந்தை மன்சூர், அவருடைய சகோதரர் அப்துல் ரஹ்மான், நண்பர்கள் முகமது மாரிஸ், காதர் நவாப் ஷெரீப், முகமது அலி உமாரி ஆகிய ஆறு பேரையும் பயங்கரவாதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர்.
கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை கோயம்புத்தூர் அழைத்து வந்து என்.ஐ.ஏ விசாரணை
நடத்தும் சூழலில், சென்னையில் இன்று பத்து இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.. நாகர்கோவிலில் ஒரு இடத்திலும் என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் தாம்பரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டையில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், இந்த வழக்கு தொடர்பான சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு இடங்களில், காலையிலேயே என்.ஐ.ஏ. அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருவது அந்தப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில், ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஏழுகிணறு, நீலாங்கரை, வெட்டுவாங்கேணி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடக்கிறது.. நீலாங்கரை வெட்டுவாங்கேணி குறுக்குத்தெருவில் முகமது ரியாஸ் என்பவரது வீட்டில் அலுவலர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதேபோல, தாம்பரம் காவல் ஆணையரகப் பகுதிகளில் மூன்று இடங்களிலும், பெரும்பாக்கம் உள்ளிட்ட மூன்று இடங்களிலும் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. எனினும், இன்று அதிகாலை முதலே என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்துவது மிகப்பெரிய கவனத்தை பெற்று வருகிறது.
கருத்துகள்