கடந்த 500 ஆண்டுகளாக சம்பல் பள்ளத்தாக்கில் நடக்கும் மோதல் நிகழ்வுகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலிலுள்ள ஜமா மஸ்ஜித் நிர்வாகக் குழு,
நவம்பர் மாதம் 19 ஆம் தேதி மசூதியை சோதனை செய்ய உள்ளூர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சம்பல் ஜமா மஸ்ஜித் மனுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.
சம்பல் பகுதி மசூதி குறித்த சர்ச்சை உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா மசூதியின் இரண்டாவது சோதனை அல்லது கணக்கெடுப்பை மேற்கொள்ள சர்வேயர்கள் குழு சந்தௌசி நகரை அடைந்த போது, ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 24 ஆம் தேதி காலை கல் வீச்சுக்களும் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் அங்கு கலவரம் கட்டுக்கு வந்தது, இதில் பல உண்மை உள்ள கடந்த கால நிகழ்வுகள் குறித்த ஒரு தெளிவான பார்வை இதில் அவசியம் :-.
பொது ஆண்டு 1526 ல் மசூதி கட்டுவதற்காக ஒரு கோவிலை இடித்ததாகக் கூறப்பட்ட ஒரு மனுவை தாக்கல் செய்ததையடுத்து, உள்ளூர் நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை நவம்பர் மாதம் 19 ஆம் தேதி ஆய்வுகள் குறித்த கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை சந்தௌசியில் உள்ள சிவில் நீதிமன்ற மூத்த நீதிபதி பிரிவில், சம்பல் நீதிமன்றம் பிறப்பித்தது, அந்தப் பகுதியில் வசிக்கும் ஆதித்யா சிங். என்பவரால்
செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது, சில மணி நேரங்களுக்குள், நீதிபதி ஒரு வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து, அதே நாளில் மசூதியில் ஆரம்பகால நிகழ்வு குறித்த ஆய்வுகள் அல்லது கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு அவருக்கு உத்தரவிட்டார். நவம்பர் மாதம் 29 ஆம் தேதிக்குள் ஆய்வுக் கணக்கெடுப்பு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜமா மஸ்ஜித் "பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்", 1904 ஆம் ஆண்டு பழங்கால நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3, துணைப்பிரிவு (3) ன் கீழ் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி, 1920 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இது "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதை இணையதளத்தில் புள்ளிவிவரங்கள் படி காணலாம்" ASI, ஆக்ரா வட்டம் மொராதாபாத் பிரிவு” மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் பட்டியலில் உள்ளது.
மனுதாரருடன் மொத்தம் எட்டு மனுதாரர்கள் சம்பல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாத் ஆலயத் தகராறு வழக்கில் உள்ள வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் இவர்களில் அடங்குவர்; வழக்கறிஞர் பார்த் யாதவ்; மற்றும் மஹந்த் ரிஷிராஜ் கிரி, சம்பலில் உள்ள கல்கி தேவி கோவிலின் மஹந்த் . மற்ற மனுதாரர்கள் நொய்டாவில் வசிக்கும் வேத் பால் சிங்; சம்பல் பகுதியில் வசிக்கும் ராகேஷ் குமார், ஜித்பால் யாதவ், மதன்பால் மற்றும் தீனாநாத்.
ஜமா மஸ்ஜித் கமிட்டியால் வலுக்கட்டாயமாகவும் சட்டவிரோதமாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் சம்பல் நகரின் மையப்பகுதியில் கல்கி கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ ஹரி ஹர் கோவில் இருப்பதாகக் கூறப்பட்ட
அந்த மனுவில், "சம்பால் ஒரு வரலாற்று நகரம் மற்றும் ஹிந்து சாஸ்திரங்களில் ஆழமாக வேரூன்றிய தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, அதன் படி இது புனிதமான ஸ்தலம், அங்கு கல்கி என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் மஹா அவதாரம் எதிர்காலத்தில் வெளிப்படும், இன்னும் தோன்றாத தெய்வீக உருவம்" .
"கல்கி மஹாவிஷ்ணுவின் பத்தாவது மற்றும் கடைசி அவதாரம் என்று பெரும்பான்மை ஹிந்து மக்களால் நம்பப்படுகிறது, இது கலியுகத்திற்கு வர விதிக்கப்பட்டுள்ளது. அவரது வம்சாவளியானது சத்யுகம் எனப்படும் அடுத்த யுகத்தின் இருண்ட மற்றும் கொந்தளிப்பான கலியுகத்தின் முடிவைக் குறிக்கிறது என்றும் நம்பப்படுகிறது," என்று "வரலாற்று உண்மைகள்" என்ற தலைப்பின் கீழ் உள்ள வேண்டுகோள் கூறுகிறது. மேலும்
அந்த மனுவில், “பண்டைய காலங்களில் விஷ்ணு மற்றும் சிவபெருமானைக் கொண்ட ஒரு தனித்துவமான 'விக்ரஹம்' தோன்றியதை ஹிந்து மத நூல்கள் உறுதிப்படுத்துகின்றன, இதன் காரணமாக இது 'ஸ்ரீ ஹரி ஹர்' கோவில் என்று அழைக்கப்படுகிறது. "சம்பலின் ஸ்ரீ ஹரி ஹர் கோவில் பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதென்று கூறுகிறது. -விளம்பரம்-
-விளம்பரம் -
பொது ஆண்டு 1526 ல் ஆப்கானிஸ்தானிய படையெடுப்பாளர் பாபர் இந்தியாவின் மீது படையெடுத்தார் அதன் பின்னர் பல யுத்தம் அதன் தொடர்ச்சியாக"ஹிந்துக்கள் இஸ்லாமிய ஆட்சியின் குடிமக்கள் என்று இந்துக்கள் உணர இஸ்லாத்தின் வலிமையைக் காட்ட பல ஹிந்து கோவில்களை பலவற்றை அழித்தார்" என்று அது மேலும் கூறுகிறது.
"1527 ஆம் ஆண்டு முதல் 1528 ஆம் ஆண்டில் பாபர் ராணுவத்தின் லெப்டினன்ட் ஹிந்து பெக், சம்பலில் உள்ள ஸ்ரீ ஹரி ஹர் கோவிலை ஓரளவுக்கு இடித்தார்" என்றும், "முஸ்லீம்கள் கோவில் கட்டிடத்தை மசூதியாகப் பயன்படுத்த ஆக்கிரமித்துள்ளனர்" என்றும் அந்த மனு கூறுகிறது.
புராதன நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் ஸ்தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1958 ன் கீழ் இந்த நினைவுச்சின்னம் பாதுகாக்கப்படுவதாகவும், சட்டத்தின் 18வது பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு "பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை அணுகுவதற்கான உரிமை" இருப்பதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர். -விளம்பரம்-
-விளம்பரம்-"பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஸ்தளங்கள் மற்றும் எஞ்சியுள்ள விதிகள், 1959 ன் விதி 5 ன் படி, பொதுச் சொத்தை அணுகுவதற்கான உரிமை பொதுமக்களுக்கு உள்ளது" என்றும் அது கூறுகிறது.
" ASI புராதண பொருள்கள் மற்றும் சொத்துக்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது, அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. "ASI அலுவலர்கள் மௌனமான வேடிக்கைப் பார்வையாளர்கள் மற்றும் அவர்கள் முஸ்லீம் சமூக உறுப்பினர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்துள்ளனர்" என்றும் அந்த மனுவில் கூறுப்படுகிறது.
மனுதாரர்கள் "ஸ்ரீ ஹரி ஹர் கோவிலுக்குள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட ஜமா மசூதிக்குள் நுழைவதற்கான உரிமையை" அனுமதிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தைக் கோரியது.
மசூதிக்குள் "பொதுமக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய" பிரதிவாதிகளுக்கு (மசூதி கமிட்டி, யூனியன் அரசு, ஏஎஸ்ஐ) கட்டளையிடும் உத்தரவை பிறப்பிக்குமாறு அவர்கள் நீதிமன்றத்தை கேட்டுள்ளனர்.
மனுதாரர்கள், "பிரதிவாதிகள், அவர்களது அலுவலர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ் செயல்படும் ஒவ்வொரு நபரும் வாதிகள் மற்றும் பொதுமக்கள் நுழைவதில் எந்தவிதமான தடையையும் அல்லது கட்டுப்பாடுகளையும் உருவாக்குவதைத் தடுக்கும் நிரந்தரத் தடை உத்தரவு" என்ற வகையிலான உத்தரவையும் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.
ஜமா மஸ்ஜித் ஆய்வுகள் குறித்த கணக்கெடுப்பு குறித்து சம்பலின் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ., ஜியாவுர் ரஹ்மான் பார்க் கூறுகையில் , “வெளிப் பிரதேசத்தினர் நீதிமன்றத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்து மாவட்டத்தின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சித்துள்ளனர். 1991 ஆம் ஆண்டின் வழிபாட்டுச் சட்டத்தின் படி, 1947 ஆம் ஆண்டிலிருந்த அனைத்து மத வழிபாட்டுத் ஸ்தளங்களும் அவற்றின் தற்போதைய இடங்களிலேயே இருக்குமென்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. சம்பலில் உள்ள ஜமா மஸ்ஜித் என்பது பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். உள்ளூர் நீதிமன்றத்தில் திருப்திகரமான உத்தரவு கிடைக்காவிட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது” என்றார். சம்பல் மாவட்டம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் உருவான மூன்று புதிய மாவட்டங்களில் ஒன்றாக 28 ஆம் தேதி செப்டம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் அது "பீம்நகர்" மாவட்டம் என்று இருந்தது.
சம்பல் அதன் தலைமையகம் பஹ்ஜோய் நகரம். சம்பல் புதுடில்லியிலிருந்து 158.6 கிலோமீட்டர் (98.5 மைல்) தொலைவிலும், மாநிலத் தலைநகர் லக்னோவிலிருந்து கிழக்கு நோக்கி 355 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சம்பல், சந்தௌசி, குன்னூர் மக்களவைத் தொகுதிகள் சம்பல் சட்டமன்றத் தொகுதிகள் சம்பல், அஸ்மோலி, சந்தௌசி, குன்னூர் மக்கள்தொகையில் கல்வியறிவு பெற்றவர்கள் 57 சதவீதம் இதில் பாலின விகிதம் 78 சதவீதம் ஆகும்.
12 ஆம் நூற்றாண்டில், டெல்லியின் கடைசி ஹிந்து சமஸ்தானத்தின் ஆட்சியாளரான பிருத்விராஜ் சௌஹான், ஆட்சியில் காபூல் படை எடுப்பாளரான கஜினி முஹமதுவின் மருமகன் காஜி சய்யத் சலார் மசூத்துக்கு எதிராக நடந்த இரண்டு கடுமையான போர்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. முதல் போரில் சௌஹான் வெற்றி பெற்றார், அதற்கு நேர்மாறாக இரண்டாம் போர் கடுமையான போது இது நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும் கூட, அதை நிரூபிக்க எந்த சூழ்நிலை ஆதாரமும் இல்லை வழி வழியாக பரவலாக பேசப்படும் நிலை எனக் கருதப்படுகிறது.
டெல்லியின் முதல் முஸ்லீம் சுல்தானான குதுப்-உத்-தின் ஐபக், சம்பலைக் கைப்பற்றி தனது பேரரசின் கீழ் சேர்த்தார். அது 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்தது, அதன்பிறகு, டில்லியின் மற்றொரு சுல்தானான ஃபிரோஸ் ஷா துக்ளக், சம்பல் நகரத்தை தாக்கியதால், அங்கிருந்து வந்த ஹிந்து ஆட்சியாளர்களில் ஒருவருடன் பலரைக் கொன்றதற்குக் காரணமாக இருந்தார். எனவே, இந்திய ஹிந்து ஆட்சியாளர்களின் படைகள் அனைத்தையும் ஆப்கானிஸ்தானிய மற்றும் துருக்கி முஸ்லிம் படை எடுத்து முறியடித்து, வாழ்நாள் முழுவதும் அவரை அடிமைப்படுத்த முயற்சிப்பதற்காக சம்பலில் ஒரு முஸ்லீம் ஆட்சியை அவர் நிர்வகித்தார். இந்தியா முழுவதும் 40-க்கும் மேற்பட்ட பள்ளத்தாக்குகள் உள்ளன. இவற்றுள் சம்பல் பள்ளத்தாக்கு
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான மாநிலங்களை மும்முனைப்பகுதியாகக் கொண்டுள்ளதுதான் சம்மல் பள்ளத்தாக்கு. 1070 ம் ஆண்டு இப்பகுதியில் சம்பல் தேசிய சரணாலயம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இந்த வனப்பகுதியை ஊடறுத்துக்கொண்டு ஆழமான பள்ளத்தாக்குகள், மலைகள், மணற்கரைப்பகுதிகள் வழியாக சம்பல் ஆறு ஓடுகிறது. சம்பல் ஆறு முழுவதும் கரியல் முதலைகள் ஏராளமாக காணப்படுகின்றன. கங்கை டால்பின்கள் மற்றும் ஆலிகேட்டர் முதலைகளும் இதில் வசிக்கின்றன ஆழமான பள்ளத்தாக்கு
பல நூற்றாண்டுகளாக மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட மண் அரிப்பின் மூலம் சம்பல் பகுதியில் காணப்படும் ஆழமான பிளவுப் பள்ளத்தாக்குகள் உருவாகியுள்ளன. சம்பல் தேசிய சரணாலயம் 400 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாக 400 கிலோ மீட்டருக்கு ஓடும் சம்பல் ஆற்றுடன் மொத்தம் 1235 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. சம்பல் என்னும் சர்மான்யவதி
புராதாண நூல்களின்படி இந்த சம்பல் ஆறு ஒரு காலத்தில் சர்மான்யவதி எனும் பெயரால் அறியப்பட்டிருக்கிறது. இது ரந்திதேவர் எனும் அரசர் ஆயிரக்கணக்கான பசுக்களை பலி கொடுத்த போது பெருகிய ரத்தத்தினால் உருவானதாக சொல்லப்படுகிறது. இது போன்ற புராண கதைகள் இப்பகுதிக்கு அதிக மக்கள் பயணம் செய்யாமல் தடுத்து விட்டன. இருப்பினும் இந்தியாவில் ஓடும் மாசுபடாத தூய்மையான ஆறுகளில் இந்த சம்பல் ஆறும் ஒன்று என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். இயற்கையின் காரணமாக சம்பல் பள்ளத்தாக்கு ஆபத்தானது அல்ல. உண்மையில் அது கொள்ளையர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மிகுந்த பகுதியாக முன்னாள் சமாஜ் வாதி கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல கொள்ளைக்காரியுமான பூலான் தேவி வசித்த போது இருந்தது. சம்பல் பள்ளத்தாக்கின் கீழ் வரும் நிலப்பரப்பு, செங்குத்தான பள்ளத்தாக்குகள், பெரிய நதி, மர்மமான குகைகள் போன்ற இயற்கை அழகுகளால் நிறைந்திருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் இந்தப் பள்ளத்தாக்கு சாமானிய மக்களை அச்சத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. டகோஸ் என்று அழைக்கப்படும் மக்களால் சட்டவிரோத நடவடிக்கைகளால் பொதுமக்கள் அத்தகைய உயர் எச்சரிக்கைப் பகுதிகளில் செல்ல பரிந்துரைக்கப்படவில்லை. சம்பல் சரணாலயப்பகுதியில் விலங்குகள் மற்றும் பறவைகள் மட்டுமல்லாது யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பாடேஷ்வர் கோவிலையும் பயணிகள் தரிசிக்கலாம். கோவில் வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட உப கோவில்கள் அமைந்துள்ளன. இந்த பாடேஷ்வர் தலம் கிருஷ்ணர் அவதரித்த ஸ்தலமாகவும் கருதப்படுவதால் இந்த கோவில் ஒரு முக்கியமான ஆன்மீகத் ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது. இப்போது எழும் பிரச்சினைகள் பாபர் படையெடுப்பு நடந்த காலத்தில் இருந்து நடந்து வரும் நிகழ்வு ஆகும். அப் பகுதியில் உள்ள மக்கள் நம் பகுதி மக்கள் போல வரலாற்று தலைமுறை கடந்தும் எதையும் மறக்க வில்லை. இதில் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வு தான் இந்த சட்டப் போராட்டம். மனு தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில் (நவம்பர் மாதம் 19 ஆம் தேதி) கணக்கெடுப்பு உத்தரவு வழங்கப்பட்டதாகவும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் சம்பல் மசூதி நிர்வாகக் குழு கூறுகிறது.
சட்டப்பூர்வமான தீர்வுகளுக்கு அவர்கள் தயாராகிக் கொண்டிருந்த போது, நவம்பர் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவில் திடீரென மறுநாள் மற்றொரு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் மாதம் 24 ஆம் தேதி காலை 6.15 மணிக்கு, பலத்த காவல் துறை பிரசன்னத்துடன் மசூதிக்கு ஆய்வுக் குழுவினர் வந்து, அதிகாலை தொழுகைக்காக மசூதியிலிருந்த தொழுகையாளர்கள் மற்றும் நமாஜிகளை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர் - என மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கைத் தொடர வேண்டாம் என உச்ச நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறது. சம்பல் ஜமா மசூதிக்கு எதிராக, சர்வே உத்தரவை எதிர்த்து மசூதி குழுவின் மனு உயர்நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வரை.
வக்கீல் கமிஷனரின் அறிக்கையை சீல் செய்யப்பட்ட கவரில் வைத்திருக்கவும், இதற்கிடையில் திறக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.
"அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும்," என்று உத்திரப் பிரதேச மாநிலத்தின் நிர்வாகத்திடம் உச்சநீதிமன்றம் தெரிவிக்கிறது. உத்தரவு: Ld. ASG இதைப் பற்றி உறுதியளிக்கிறது. ஏதேனும் மறுபரிசீலனை மேல்முறையீடு பொருத்தமான மன்றத்திற்கு முன் பரிந்துரைக்கப்பட்டால், அது 3 வேலை நாட்களுக்குள் பட்டியலிடப்படும். உயர்நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் வரை விசாரணை நீதிமன்றம் வழக்கைத் தொடராது என்று நம்புகிறோம். சில பிரதிவாதிகள் ஆஜராகிவிட்டனர். சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மனு...மனுதாரர் CPC மற்றும் அரசியலமைப்பின்படி பொருத்தமான மன்றத்தின் முன் உத்தரவை சவால் செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இதற்கிடையில், அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும் என தற்போது சம்பல் மசூதி விவகாரம் முடிவான நிலையில்
கருத்துகள்