ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் லஞ்சம் பெற்ற கையுடன் சிக்கிய வருவாய் ஆய்வாளர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் வருவாய் ஆய்வாளர் லஞ்சம் பெற்ற கையுடன் சிக்கியுள்ளார்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்தி பணி செய்கிறார்.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பெரிய கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் நீர்பிடிப்பு ஓடைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அரசாணைகள் படி எடுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்திருந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் அந்த மனுவின் அடிப்படையில்
ஓடைப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற யோகேஸ்வரனிடம் வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கின் உதவியாளர் முருகன் மணியின் மூலம் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் பொறி வைத்து
லஞ்சம் வாங்கும் போது சேலம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆய்வாளர் முருகன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், வருவாய் ஆய்வாளரை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்து விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்தனர்.
கருத்துகள்