பத்திரிக்கையாளரை அவதூறாகப் பேசிய ஓம்கார் பாலாஜி கைது , தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து பேசிய நடிகை கஸ்தூரியை தேடும் காவல்துறை
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மகனும் அதன் இளைஞர் அணி தலைவராக உள்ள ஓம்கார் பாலாஜி கைது.
ஹிந்து மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில். ஓம்கார் கலந்து கொண்டார் அதில் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார். அர்ஜுன் சம்பத் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஓம் கார் பாலாஜி பேசும் போது நக்கீரன் ஆசிரியர் கோபாலின் நாக்கை அறுத்து விடுவேன் எனப் பேசியதாகத் தெரிகிறது.
தி.மு.க.,வைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ஜலில், வயது 74, என்பவர், அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி பந்தயச் சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர். அதையடுத்து ஓம்கார் பாலாஜி, முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரை புதன்கிழமை நேரில் ஆஜராகும்படி உயர் நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. அதுகுறித்து ஓம்கார் பாலாஜி யிடம் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் பந்தய சாலை காவல்துறையினர் சென்னையில் ஓம்கார் பாலாஜியை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அது போல நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேசிய நிலையில் அவருக்கு எதிராகப் புகார்கள் அளிக்கப்பட்டது.
அதனை அடுத்து தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கருத்துகள்