ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கே லஞ்சம் கொடுத்ததாக தமிழ்நாடு மாநில மதுபான விற்பனை சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்) கடலூர் மாவட்ட மேலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு மாநில மதுபான விற்பனை சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்) சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து குடிகாரர்களிடம் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததாலும், மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு எச்சரித்தாலும், மதுபானக் கடைகளில் பணி செய்யும் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதல் விலை வைத்து விற்று தங்கள் சொந்த லாபம் போல ஒரு பகுதியை ஒதுக்கி ஊழல் லாபம் பார்த்து வருகிறார்கள். தீபாவளி, கிருஸ்துமஸ், ஆயுதபூஜை, மற்றும் பொங்கல், பகுதி திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவது தான் விலை என குடிகாரர்கள் தெரிவிக்கும் நிலையில். அதனால் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் மது விற்பனைக் கடைகளைக் குறி வைத்து சோதனை செய்து வருகின்றனர். ஆனால்
இந்த ஆண்டு அவர்கள் வைத்திருக்கும் பொறியில் சிக்கிவிடக் கூடாது என்று நினைத்த தமிழ்நாடு மாநில மதுபான விற்பனை சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்) கடலூர் மாவட்ட ட மேலாளர் செந்தில்குமார், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரை வித்தியாசமாக அனுகத் திட்டமிட்டிருந்ததன்படி
சில நாள்களுக்கு முன்னரே கடலூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் திருவேங்கடத்தைத் தொடர்பு கொண்ட மேலாளர் செந்தில்குமார், ``தீபாவளி நேரம் பாஸ். டாஸ்மாக் கடைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்ய வேண்டாம். எதையும் கண்டுக்காதீங்க. ரூபாய்.25,000 த்தைக் கொடுத்தனுப்பறேன்” எனக் கூறியதால் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆய்வாளர்
திருவேங்கடம், அவர் பேசிய விபரங்கள் குறித்து தன்னுடைய உயர் அலுவலர்களுக்குத் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து தமிழ்நாடு மாநில மதுபான விற்பனை சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்) கடலூர் மாவட்ட மேலாளர் செந்தில்குமாரை லஞ்சம் பெற்ற கையுடன் பிடிக்கத் திட்டம் போட்டனர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.
இதற்கிடையில், தமிழ்நாடு மாநில மதுபான விற்பனை சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்) விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அருகில் இருக்கும் சென்னிநத்தம் பகுதியில் நடைபெற்றதில் கலந்து கொண்டு மதுபானக்கடைகளின் விற்பனையாளர்களுக்கும், மேலாளர்களுக்கும் ஊழல் செய்வது எப்படி என `அறிவுரை? வழங்கிய செந்தில்குமார்,
ஆய்வாளர் திருவேங்கடத்தைத் தொடர்பு கொண்டு, `சேத்தியாத்தோப்புக்கு நேரில் வந்து வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்’ எனக் கூறியிருக்கிறார். அதற்கு சரியென்று கூறிய ஆய்வாளர் திருவேங்கடம், சேத்தியாதோப்புக்குச் சென்று செந்தில்குமாருக்குப் போன் செய்து தான் வந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
அதையடுத்து தன்னுடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் ராதாகிருஷ்ணன் என்பவரிடம், ரூபாய்.25,000 கொடுத்தனுப்பியிருக்கிறார் செந்தில்குமார். அப்போது அவர்களுக்காகவே காத்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான குழுவினர், செந்தில்குமாரையும், ராதாகிருஷ்ணனையும் கைது செய்திருக்கின்றனர். அப்போது கூட, பணம் பத்தவில்லை என்றால் கேளுங்கள் கூடுதலாகத் தருகிறோம். எங்களை மட்டும் விட்டுவிடுங்கள்’ என்று தான் பேரம் பேசினார்களாம் அந்த திருட்டு ஊழல் குற்றவாளிகள் விசாரணைக்குப் பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்
கருத்துகள்