உச்ச நீதிமன்றத்தில் விசாரணை மற்றும் உள் கட்சி பிரச்சினை காரணமாக மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா
பொது அழுத்தம், உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆகிய காரணிகளால் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்ய
கட்டாயப்படுத்தியதாக நாடாளுமன்ற மக்களவையின் காங்கிரஸ் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகளாக பாஜக முதல்வர் பைரன் சிங், மணிப்பூரில் பிரிவினையை தூண்டியதாக கூறிய ராகுல் காந்தி, வன்முறை, உயிரிழப்பு ஏற்பட்ட போதும், அவரை முதல்வராக தொடர பிரதமர் அனுமதித்ததாக குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடி உடனடியாக மணிப்பூருக்குச் சென்று, மக்களின் பேச்சைக் கேட்டு, இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டு வருவதற்கான திட்டத்தை விளக்க வேண்டும் என தெரிவித்தார்.
நோங்தோம்பம் பிரேன் சிங் என்ற என். பிரேன் சிங் மணிப்பூரின் முதலமைச்சர். பாரதிய ஜனதா கட்சியின் பிராந்திய தலைவர் ஒரு தேசிய அளவிலான கால்பந்து வீரர் மணிப்பூரின் 12வது முதலமைச்சர்
2022 ஆம் ஆண்டில், மணிப்பூர் சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களில் 32 இடங்களை வென்று பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் காரணமாக பாஜக சட்டமன்றக் கட்சி என் பிரேன் சிங்கை தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து அவரை மீண்டும் மணிப்பூரின் முதலமைச்சராக்கியது. மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் திடீரென தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரைச் சந்தித்த பின்னர் ராஜினாமா செய்துள்ளார் பிரேன் சிங். பாஜக தலைமையிலான அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் அபாயம் உள்ள நிலையில் பிரேன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கினார். காலை டெல்லிக்குச் சென்ற பிரேன் சிங் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். தொடர்ந்து, மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை, இம்பாலில் உள்ள ராஜ்பவனில் சில சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கினார்.
மணிப்பூர் மாநில சட்டசபையில் மொத்தம் 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை. 2022 ஆம் ஆண்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 2 உறுப்பினர்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி, 7 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சி, 6 உறுப்பினர்களைக் கொண்ட ஜேடியூ, 5 உறுப்பினர்களைக் கொண்ட என்பிஎப் கட்சிகள் ஆதரவு தந்தன. பின்னர் ஜேடியூவின் 5 உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். மணிப்பூரில் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்டது. கலவர வன்முறையில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். பலரும் மாயமாகினர். மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறைகளால் 2 உறுப்பினர்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி கடந்த 2023 ஆம் ஆண்டு பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 7 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சியும் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில் இரு கட்சிகளும் ஆதரவைத் திரும்பப் பெற்றபோதும் பாஜகவிற்கு நெருக்கடி எதுவும் இல்லை. மணிப்பூர் கலவரம் தொடங்கியது முதலே பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தாலும் அவர் விலகவில்லை. இந்த நிலையில், தற்போது திடீரென தனது பதவியை முதலமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இதற்கு, உச்ச நீதிமன்ற வழக்கு ஒரு முக்கியமான காரணமாகவே சொல்லப்படுகிறது.
மணிப்பூரில் குக்கி - மெய்தி இன மக்களுக்கு இடையேயான கலவரத்தை மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தூண்டியதாக குக்கி இனத்தவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பிரேன் சிங் பேசிய ஒரு ஆடியோவும் சமர்ப்பிக்கப்பட்டவழக்கில் முதலமைச்சர் பிரேன் சிங்கின் குரல் பதிவை மத்திய அரசின் தடய அறிவியல் சோதனை மையம் ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டடது.
மணிப்பூரில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருந்தது. பிரேன் சிங்கிற்கு எதிராக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்த நிலையில், ஆளும் பாஜகவைச் சேர்ந்த சில சட்ட மன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் வந்த சூழலில் தான் அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுவரை மணிப்பூர் மக்களுக்கு சேவை செய்ததை ஒரு பெருமையாகக் கருதுகிறேன்" என முதல்வர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கும் வரை முதல்வர் பதவியில் தொடருமாறு ஆளுநர் அவரைக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மணிப்பூர் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அண்மையில் முதல்வர் பிரேன் சிங் அறிவித்தார். "கடந்த 2023 மே முதல் நடந்து வரும் நிகழ்வுகளுக்கு நான் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் வருத்தப்படுகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இப்போது, கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்ட பிறகு, 2025 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
கருத்துகள்