கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைபஷீர், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்
“களியக்காவிளை பேருந்து நிலையம் எதிரில் 25 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறேன். உணவு பாதுகாப்புத்துறை fssai யிடம் முறையான உரிமம் பெற்றுள்ளேன். இந்த வழியாக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்து செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் எங்கள் கடைக்கு வந்து டீ, சிற்றுண்டி சாப்பிட்டுச் செல்வது வழக்கம்.
அதே போல இங்குள்ள மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பெறும் வகையிலும், எந்த இடையூறும் இன்றி டீக்கடையை நடத்தி வருகிறேன். இந்த நிலையில் இரவு 11 மணிக்கு மேல் டீக்கடைகள், உணவகங்கள் செயல்படக்கூடாதென மாநிலத்தின் அணைத்து பகுதியில் உள்ளது போல் கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நானும், எனது கடையில் பணியாற்றும் ஊழியர்களும் கடுமையான சிரமத்துக்கு ஆளாகிறாம். எங்களைப் போல ஏராளமான வணிகர்களும் பாதிக்கப்படுகின்றனர். என்னுடைய டீக்கடையை 24 மணி நேரமும் நடத்த மாண்புமிகு நீதியரசர் அனுமதித்து உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார் இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது முடிவில், மனுதாரரின் கடையை குறிப்பிட்ட நேரத்துக்குள் மூட வேண்டுமென கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. அரசின் அரசாணையைப் பின்பற்றி மனுதாரர் 24 மணி நேரம் கடையை நடத்த அனுமதிக்கப்படுகிறார். காவல்துறையினர் மனுதாரரின்
வியாபாரத்தில் தலையிடக்கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் மட்டுமே குறுக்கிடலாம்” என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
கருத்துகள்