அதிமுக,பாஜக கூட்டணிக் கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன்!
அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கே.ஏ.செங்கோட்டையனை முன்னிறுத்த பாஜக முடிவு செய்து ள்ளதாகவே தகவல் வருகிறது.
தமிழ்நாட்டு மூத்த அரசியல் தலைவரான கே.ஏ.செங்கோட்டையனை, முதல்வர் வேட்பாளராக ஏற்கவும், அவருக்காக பிரசாரம் செய்யவும் அண்ணாமலை சம்மதம் தெரிவித்துள்ளதாகவும்.
அதிமுக, பாஜக, பாமக, அமமுக, ஓ.பன்னீர் செல்வம் அணி, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, தமாகா, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் என ஒரு பிரமாண்டமான அணியை அமைத்து, திமுக கூட்டணியை வீழ்த்த டெல்லி வியூகம் வகுத்தள்ள நிலையில்.
இந்த பிரம்மாண்டமான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் மூன்று வருட காலத்திற்கு அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன் முதல்வராக இருப்பார். 2029-ஆம் ஆண்டில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் அமலுக்கு வருமானால், அந்தத் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக பாஜகவின் அண்ணாமலை முன் நிறுத்தப்படுவார்.
இறுதிக் காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன! அ.தி.மு.க. ஒன்றிணையும் பட்சத்தில் அ.ம.மு.க.வை கலைத்து விடுவீர்களா..? என செய்தியாளர்கள் வினவிய போது தி.மு.க.வை வீழ்த்த எதையும் விட்டுக்கொடுக்கத் தயாரென டிடிவி.தினகரன் பரபரப்பு பேட்டி அளித்தார் அதிமுக முட்டல் மோதல் நிலையில் கே.ஏ.செங்கோட்டையனை நீக்கம் செய்ய எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முதுகெலும்பெல்லாம் நிமிர்ந்ததில்லை! என பலரும் பேசும் நிலையில் அதிமுகவில்
அக்கட்சியின் சார்பில் பலரும் பேசும் நிலை வந்தது. மாஃபா.பாண்டியராஜனிடம் அட்டகாசம் செய்த. கே.டி.ராஜேந்திர பாலாஜியையே கட்சியில் கைவைக்க முடியவில்லை! நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஓட்டுப் போட வேண்டியவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்றவர் அடுத்தடுத்த சர்ச்சை நிகழ்வுகளுக்குப் பின்னர், ரெங்கநாத் பாண்டே நடத்திய நிகழ்ச்சியில் பங்குபெற்றார் அதில் பேசிய அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
,"இக்கட்டான சூழலில் உங்களுடன் உரையாற்றுகிறேன். காலத்தின் சூழலால் தொலைக்காட்சியில் நாள்தோறும் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
நான் இப்போது எவ்வளவு இக்கட்டான சூழலில் பேசுகிறேன் என்பதை உங்களால் உணர முடியும். நாம் தமிழர் கட்சி சீமான் பேசுவது போல என்னால் பேச முடியாது. அவர் ஒரு கட்சியின் தலைவர். அதனால், அவர் நினைப்பதைப் பேசலாம். ஆனால், நான் அளந்து பேச வேண்டியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை தவறாகப் பேசிவிட்டாலும், அது எப்படி வரும் என்பதை நான் அறிவேன்.ஒரு மாதத்திற்கு முன்பிருந்த நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு. நீங்கள் சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள் அப்புறம். எப்படி அவரைச் சந்தித்தீர்கள்' என்று என்னிடம் கேட்டார்கள். நான் மட்டுமல்ல. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் சென்றோம். என்னுடைய தேவை தொகுதி மக்களின்
நலன். பவானி ஆற்றின் அருகில் சாயப்பட்டறை கொண்டு வர இருக்கிறார்கள்
என்று என்னைச் சிலர் சந்தித்தார்கள். அந்த மனுவைத் தான் நான் சட்டப்பேரவைத் தலைவரிடம் கொண்டு சென்றேன். ஆனால், அது 'சபாநாயகரை செங்கோட்டையன் எப்படிச் சந்தித்தார்?' என்று இப்போது பெரிய செய்தியாக மாறியுள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகரைச் சந்திப்பது இயல்பான ஒன்று. கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்றவற்றைக் கொண்டுவர அவரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அதெல்லாம் பெரிய விஷயம் ஆக்கப்பட்டிருக்கிறது. புரட்சித் தலைவரால் என்னுடைய பயணத்தில் காலடி எடுத்து வைத்தேன். அவருடைய திரைப்படத்தை நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்ற புரட்சியைத் திரைப்படங்கள் மூலம் அவர் ஏற்படுத்தினார். அவர் சாதரணமாக அரசியல் வரலாற்றில் இடம் பெறவில்லை. அவரது அரசியல் வரலாற்றைப் பார்க்கும் போது, எல்லோரையும் ஈர்ப்பது போலிருக்கும். 2026-ஆம் ஆண்டு நெருங்கும் நேரமிது. இந்த நேரத்தில் தான் நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன். எப்படிப் பதில் சொன்னாலும், எப்படி வேண்டுமானாலும் போகலாம். நான் தடுமாறாமல் பதில் சொல்ல வேண்டும். சீமானைப் போல அள்ளிவிட முடியாது. அவர் உணர்ச்சிகரமாகப் பேசினாலும் இளைஞர்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்.
ஆனால், நான் நிதானத்துடன் பேசும் சூழலில் உள்ளேன்.எங்கள் நீதியே. உழைக்கும் மக்கள் யாவரும் ஒரு தாய் பெற்ற பிள்ளையே' என்று அன்றே புரட்சித்தலைவர் கூறினார். இந்த மாதிரியான கருத்துகளைக் கேட்டுதான், அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தொண்டனாகச் சேர்ந்தோம். இன்றைக்கும் நான் தொண்டனாக இருக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். நான் தலைவர் இல்லை. மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்த புரட்சித்தலைவர் மறைந்த போது, 'இனி என்ன செய்யப்போகிறோம்' என்று தவித்துக்கொண்டிருந்தபோது துணிவோடு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அவரது ஆற்றலாலும், தொலைநோக்குப் பார்வையாலும் நான் பலமுறை வியந்திருக்கிறேன். மத்திய ஆசியாவில் சிறந்த பிரதமர் நரேந்திர மோடி பாரதப் பிரதமர் என்பதைச் செய்தியில் பார்த்தேன். இந்திய எல்லைக்கோட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரே காரணம் அவர் தான்.
அவர். எதிர்க்கட்சியாக இருந்தபோது நான் யாரையும் கடுமையாகப் பேசியதில்லை. ஏன் கடுமையாகப் பேசவில்லை என்று கேட்டால், அப்படிப் பேசத் தான் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை.
நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. எந்தப் பாதை சரியானதோ, அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என் பாதை தெளிவானது. என் வெற்றி முடிவானது. நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. எந்தப் பாதை சரியானதோ, அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என் பாதை தெளிவானது. என் வெற்றி முடிவானது.
பாரதி சொன்னது மாதிரி பல வேடிக்கை மனிதர்கள் போல மட்டும் வீழ்ந்து விட மாட்டேன்" எனப் பேசினார். இந்த நிலையில் அதிமுகவில் கே.ஏ.செங்கோட்டையன். கட்சியின் ஒருங்கினைப்பாளர். முன்னாள் முதல்வர் O.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர், SP.வேலுமணி மணி- பொருளாளர், வி.கே.சசிக்கலா நடராஜன் பொதுச் செயலாளர். இனி ஆரம்பம் எடப்பாடி பழனிச்சாமி கேம் ஓவர். "நாடகம் விடும் நேரம்தான்! உச்ச காட்சி நடக்குதம்மா...
வேஷம் கலைக்கவும், ஓய்வு எடுக்கவும், வேளை நெருங்குதம்மா...
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா...
சீண்டிக் கண்டு கொண்டதை, சீராட்டி வைத்ததை, சினம் கொண்டு போகுதம்மா! என பாடல் இப்போதே ஒலிக்கிறது. நம் காதில்
கருத்துகள்