வேவ்ஸ் 2025: உலக அளவில் காதியை பிரபலப்படுத்துவதற்கான போட்டியின் இறுதிச் சுற்றுப் பங்கேற்பாளர்கள் அறிவிப்பு
வேவ்ஸ் 2025: உலக அளவில் காதியை பிரபலப்படுத்துவதற்கான போட்டியின் இறுதிச் சுற்றுப் பங்கேற்பாளர்கள் அறிவிப்பு
தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய விளம்பர முகவர் சங்கத்துடன் (ஏஏஏஐ) இணைந்து, மே 1 முதல் 4-ம் தேதி வரை மும்பையில் நடத்தவுள்ள வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-ன் ஒரு பகுதியாக நடைபெறும் 32 படைப்பாற்றல் போட்டிகளில் ஒன்றான “மேக் தி வேர்ல்ட் வியர் காதி” என்ற தலைப்பிலான காதியை உலக அளவில் பிரபலப்படுத்தும் போட்டிக்கான இறுதிச் சுற்றுப் பங்கேற்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இமான் சென்குப்தா, சோஹம் கோஷ்
கார்த்திக் சங்கர், மதுமிதா பாசு
காஜல் திர்லோத்கர்,
தன்மே ரவுல், மந்தர் மகாதிக்
ஆகாஷ் மெஜாரி, கஜோல் ஜெஸ்வானி
ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
நாட்டின் சுதந்திர இயக்கத்தின் அடையாளமாக இருந்து நிலையான நவநாகரீக தீர்வாக கதர் ஆடையின் வளர்ந்து வரும் அடையாளத்தை பகிர்ந்து கொண்டனர்.
உலகளாவிய உடையாக கதரை பிரபலப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்க, நாடு முழுவதும் இருந்து 750 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இது கதர் ஆடையை துணியாக மட்டுமின்றி, சர்வதேச அரங்கில் புதுமை மற்றும் வாழ்வின் அடையாளமாக நிலைநிறுத்தும் வகையில் பிரச்சாரங்களை உருவாக்குவதை போட்டியாக கொண்டுள்ளது.
இறுதிச் சுற்றில் வெற்றி பெறுபவர்கள் வேவ்ஸ் உச்சி மாநாட்டின் போது அறிவிக்கப்பட்டு, பாராட்டப்படுவார்கள்.
கருத்துகள்