இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாக்கிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுத்ததால்
தற்போது பாகிஸ்தானுக்குச் செல்லும் செனாப் நதி நீர் ஓட்டம் குறைந்து வருகிறது செனாப் நதி வேத காலத்திலிருந்தே பாரதமக்களுக்குத் தெரிந்திருக்கிறது. பொ.ஊ.மு. 325 ஆம் ஆண்டில் கிரேக்க மஹா அலெக்சாண்டர் அலெக்சாண்ட்ரியா நகரத்தை சிந்துவின் (இன்றைய உக்சுஷெரீப் அல்லது மிதன்கோட் அல்லது பாக்கிஸ்தானில் சச்சரன்) சங்கமத்தில் நிறுவியதாகக் கூறப்படுகிறது. சிந்து மற்றும் பஞ்சாப் நதிகளின் ஒருங்கிணைந்த நீரோடை தற்போது பஞ்சநாடு நதி என அழைக்கப்படுகிறது.
ஏற்கனவே நேற்று முன்தினம் ஜீலம் நதியில் முன்னறிவிப்பின்றி அதிகளவு நீரை திறந்து விட்டு பாக்கிஸ்தான் நாட்டிற்குள் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
Water war துவங்கியது. "1960 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மூலோபாய தவறுகளில் ஒன்றாகும்" என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மேல் நதிக்கரைப் பகுதியில் இந்தியாவுக்கு சாதகமான நிலை இருந்தபோதிலும், அப்போது அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் கடுமையான அழுத்தத்தின் கீழ், ஜவகர்லால் நேரு, சிந்து நதிப் படுகையின் 80 சதவீதத்திற்கும் அதிகமான நீரை பாக்கிஸ்தானிடம் ஒப்படைத்தார்.
வலிமைமிக்க சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் மீது முழு கட்டுப்பாட்டையும் பாகிஸ்தானுக்கு வழங்கினார். அதே நேரத்தில் இந்தியாவுக்கு சிறிய கிழக்கு நதிகளே (ரவி, பியாஸ், சட்லஜ்) மட்டுமே மிஞ்சின.
பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 135 மில்லியன் MAF தண்ணீர் கிடைக்கிறது, அதே நேரத்தில் இந்தியாவிடம் 33 MAF மட்டுமே மீதமுள்ளது. மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் உரிமைகள் சிறு நீர்ப்பாசனம் மற்றும் ஆற்றின் வழியாக ஓடும் நீர் மின் திட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன, அவை எந்த அர்த்தமுள்ள சேமிப்பும் இல்லாமல் உள்ளன, இதனால் பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் நீர் தேவைகள் நிரந்தரமாகச் சமரசம் செய்யப்படுகின்றன" எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த ஒப்பந்தம் இப்போது நிறுத்தப்பட்டதற்கு ஹிமாந்த பிஸ்வா சர்மா வரவேற்றுள்ளார்.
"சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை பாக்கிஸ்தானின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. அங்கு 75 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயம் சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது
பூர்வீக நாடான இந்தியாவிற்க்கு கெடுதல் செய்யும் பாக்கிஸ்தான் பங்காளதேசத்திற்க்கு இந்தியாவில் உற்பத்தியாகும் சிந்து, கங்கை நதிநீரைப் பருவத்தில் இருந்தே தார்மீக உரிமையில்லை. காங்கிரஸ் கட்சி செய்த சரித்திரத் தவறை இப்போது சரிசெய்ய வேண்டிய காலம் என பல அரசியல் தலைவர்கள் கூற்றின் படி உண்மை உள்ளது.
இது தவறு என்று கூறுபவர்கள் வீட்டில் ஒரு இழப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே எங்களுடைய வலி என்னவென்று புரியும்.படைகள் நகர்வு மற்றும் ஆபரேசன் போன்றவற்றை நேரடி ஒளிபரப்பு செய்வதை நிறுத்த மீடியாக்களுக்கு அரசு கோரிக்கை வைத்துள்ள நிலையில். லாகூர் ஏர்போர்ட்டில் தீ பரவியது
பாகிஸ்தானில் உள்ள லாகூர் இன்டர்நேசனல் ஏர்போர்ட் தீ பிடித்து எரிகிறது. தண்ணீரில ஒரு பக்கம் அழிவெனப் பார்த்தால் தீயில் அழிந்து வரும் நிலையில் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு விட்டது. இதுதான் அவர்களின் நிலை லாகூர் ஏர்போர்ட்டில் தீ மேலும் நேற்று
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தியாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணை அமைப்புக்கான அதிநவீன ஸ்க்ராம் ஜெட் எஞ்சின்; 1,000 விநாடிகளுக்கு மேல் இயக்கி இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதல் குறித்து தேச விரோதக் கருத்துக்கள் தெரிவித்ததற்காக வடகிழக்கிலுள்ள மூன்று மாநிலங்களில் குறைந்தது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஒரு பத்திரிகையாளர், மாணவர்கள், ஒரு வழக்கறிஞர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அடங்குவர். பெரும்பாலான கைதுகள் அவர்கள் சமூக ஊடகப் பதிவுகளிலிருந்து வந்தவை. ஆகவே இன்னும் பல இடங்களில் எதிர் கருத்து வெளியிட்ட பலரும் கைதாக வேண்டும்.
அதுவே தேசப்பற்றாளர்கள் கோரிக்கை.இந்தியாவின் கிரீடமாக உள்ள காஷ்மீரின் இயற்கை அழகை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மனிதநேய விழுமியங்கள் மற்றும் வாழ்வின் புனிதத்திற்கு எதிரான ஒரு தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை. இதை இந்த நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது" என உச்ச நீதிமன்றம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பஹல்காம் சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் காட்சிகளைப் பார்த்த பிறகு, மூத்த நீதிபதிகள் மதிய உணவு இடைவேளையின் போது அவசர ஆலோசனை நடத்தினர். பிற்பகல் 1:45 மணியளவில், உச்ச நீதிமன்றத்தில் இருந்த அனைத்து நீதிபதிகளும் கூடி, ஒரு தீர்மானத்தை உருவாக்கி ஏற்றுக்கொண்டனர். சரியாக 2:00 மணிக்கு, நடைமுறைகளைப் பின்பற்றி, சைரன்கள் ஒலிக்கப்பட்டு மௌனம் அனுசரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நீதிமன்றத்தின் மத்திய புல்வெளியில் கூடி பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.கர்நாடகா மாநிலம் தும்கூருவில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதாவது தும்கூரு டவுனில் மதீனா மசூதி உள்ளது. இங்கு நேற்று மதியம் தொழுகை முடித்த
நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மசூதி முன்பு, காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் பேசுகையில், "நிராயுதபாணியான மக்கள் காஷ்மீரில் தாக்கப்பட்டு உள்ளனர். எங்கள் மதம் யாரையும் கொல்ல அனுமதிக்கவில்லை. காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்தக் கொடூர செயலை செய்த பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
இந்திய அரசு பாக்கிஸ்தானிலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மே மாதம் 1 ஆம் தேதி வரை நேரம் கெடு விதித்திருக்கிறது. ஆகவே அரசாங்கம் நம் பிரஜைகள் போர் மூண்ட பிறகு பாக்கிஸ்தானில் சிக்கிக் கொள்ளக் கூடாதென்பதில் கவனமாக உள்ளது.
தற்போது இருப்பது புயலுக்கு முன் அமைதி.
தற்போது இருக்கும் நிலமையைப் பார்த்தால் பாரதம் பாக்கிஸ்தானை துவம்ஸம் செய்யத் தயாராகவே உள்ளது. அப்படி நிகழ்தால்.. பாகிஸ்தான் தற்போதைய நிலைக்கு மீண்டு வரவே ஒரு தசாப்தமாகலாம்.
பாகிஸ்தான் 1971 ஆம் ஆண்டு இந்தியாவோடு செய்து கொண்ட சிம்லா ஒப்பந்தம் இரத்தானதாக அறிவித்துள்ளது. அதற்கு அர்த்தத்தைப் பார்த்தால்.
லைன் ஆஃப் கன்ட்ரோல் - LoC எனும் ஒன்று இனிமேல் கிடையாது. இரண்டு நாடுகளுக்குமான எல்லைகள் மறைந்தோ கரைந்தோ விட்டது. ஆகவே. இனி இந்திய ராணுவம் பாக்கிஸ்தானுக்குள் நுழைந்து அதன் இடங்களை ஆக்கிரமித்துக் கொள்ளலாம். - விளம்பரம் -
-விளம்பரம்-டெக்னிக்கலாகப் பார்க்கும் போது இதுவே பாக்கிஸ்தானுக்கும் பொறுந்தும். அதாவது அவர்களும் நம் தேசத்திற்குள் வந்து ஆக்கிரமிக்கலாம். ஆனால் இந்திய ராணுவத்தின் பலத்தை மீறி நடக்காது என்பது மிகவும் வலிமையானது. நம் ராணுவவீரர்கள் நம்முடைய நிலத்தில் ஒரே ஒரு அங்குல நிலத்தையும் பாக்கிஸ்தானியர்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே.. பாக்கிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது நமக்கு ஆதாயமாகிறது.
1971 ஆம் ஆண்டில். இந்த சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னர் இந்தியா 93,000 பாகிஸ்தான் ராணுவ வீர்ர்களைக் கைது செய்திருந்தது. அவர்களனைவரையும் தலைகீழாகத் தொங்க விட்டு வெளுத்திருக்கிறார்கள் நம் ராணுவ வீர்ர்கள். அப்போதைய நிலமையை விட தற்போது பல மடங்கு இந்திய ராணுவத்தின் பலம் பொறுந்தியதாக உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் 1971 ஆம் ஆண்டை விட பல மடங்கு குறைவான நிலையில் தற்போது பலஹீனமாகவே உள்ளது.
இராஜஸ்தான் எல்லையில் (இந்திய எல்லை) தங்கியிருக்கும் உள்ளூர் பொது மக்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பங்கர்களை தற்போது சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். தேவையென்றால் அதில் தங்குவதற்காக. தங்களைப் பற்றி இந்திய ராணுவம் கவலைப் பட வேண்டாம் என்றும் பாகிஸ்தானை ஒழித்துக் கட்டுவதில் கவனம் செலுத்தும் படியும் ராணுவத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட உண்மையான தேச பகதர்களை வணங்கி வாழ்த்த வேண்டும். நேரிடையாக நெருப்பின் மேல் அமர்ந்திருக்கும் அவர்கள் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் என்பது எப்படிப்பட்ட பிரம்மாண்டமான விஷயம்.
எல்லையோரத்திலிருக்கும் இந்திய விவசாயிகளிடம் அவரவர் நிலங்களில் அறுவடையை முடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு தானியங்களை எடுத்துச சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாரதம் இண்டஸ் வாட்டர் ட்ரீட்டி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அப்படியென்றால்… நமது அரசாங்கம் பாக்கிஸ்தானுக்கு வெள்ளத்தையோ, வறட்சியையோ உண்டாக்கி அவர்களை நம் நாட்டில் அடிபணிய வைக்க முடியும்.
ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரிஃப் இந்தியாவிடம் நடுநிலையாளர்களை வைத்து மத்தியஸ்தம் செய்யலாமா என கெஞ்சிக் கொண்டிருக்க.
மற்ற பாக்கிஸ்தான் மந்திரிகள் பயத்தின் உச்சகட்ட விளிம்பில் இருக்கிறார்கள். சிலர் தங்களிடம் நியூக்ளியர் பாம் இருப்பதாக பயத்தில் சப்தம் செய்கிறார்கள். மேலும் சிலர்.சிந்து நதியில் இந்திய ரத்தம் பாயும் என மிரட்டல் விடுத்துள்ளார்கள்..
ஆனால். இந்தமுறை இப்படிப்பட்ட பேச்சுகளுக்கு எந்த பலனும் கிடையாது. எதற்கும் அசைந்து கொடுக்க இந்தியத் தலைமை தயாராக இல்லை.
ஆகவே. நாமனைவரும் ஆண்டவனிடம் நம் இராணுவ வீர்ர்களுக்கு எந்தவிதமான சேதாரமும் ஏற்படாமல்.. பாக்கிஸ்தானுக்கு கடுமையான ஒரு பாடம் புகட்ட வேண்டிக் கொண்டு காத்திருப்போம். அதுவே தேசபக்தி.
கருத்துகள்