முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிங்கம்புணரி கோசாலை வேள்வி பூஜை மற்றும் கண்டதேவி ஆலயத்தில் ஆளுநர் தரிசனம்

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் சிஙகம்புணரி



ஸ்ரீ சேவுகமூர்த்தி கௌசலா அறக்கட்டளையின் பத்தாவதாண்டு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி, பாரத நாகரிகத்தில் கோமாதாவின் புனிதமான ஸ்தலம் பார்வையிட்டு ஆன்மீகம், வாழ்வாதாரம், ஸ்திரத்தன்மை  மற்றும் இயற்கையுடனான நமது காலத்தால் அழியாத பிணைப்பின் உருவகமாக அவர் விவரித்தார். இந்த மரியாதை சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழும் நாகரிக நெறிமுறைகளை பிரதிபளிப்பதாகக் குறிப்பிட்டார். இது பாரதத்தின் கலாச்சாரக் கட்டமைப்பில் ஆழமாகப் பின்னிப் பிணைந்த ஒரு கொள்கை. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியாவின் மாற்றப் பயணத்தை ஆளுநர் எடுத்துரைத்தார்.

இயற்கை விவசாயம் போன்ற பண்டைய ஞானத்தைப் புதுப்பித்து, நவீன கண்டுபிடிப்புகளுடன் கலப்பதன் மூலம் தலைமைத்துவம், புத்துயிர் பெறுகிறது. இந்த அணுகுமுறை, உலகளாவிய இருத்தலியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நிலையான, உள்ளடக்கிய மற்றும் இணக்கமான எதிர்காலத்திற்கான பாதையை உலகிற்கு வழங்குகிறது என்று அவர் கூறினார். ஸ்ரீ சேவுகமூர்த்தி கௌசலா அறக்கட்டளையின் பங்களிப்புகளைப் பாராட்டிய அவர், உடனடி, கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார்,


இந்த இலட்சியங்களை அடிமட்டத்தில் பாதுகாப்பதிலும், கலாச்சார பெருமையை வளர்ப்பதிலும், 2047 ஆம் ஆண்டுக்குள் பாரதத்தின் தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சியின் இலக்கை முன்னேற்றுவதிலும் சமூகத்தின் இன்றியமையாத பங்கை வலியுறுத்தினார். அதன் பின்னர் மதியம் கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வர் ஆலயத்தில் வழிபட்டார் நான்கு தன்னாட்சி கள்ளர் நாட்டார்கள்  எதிர் நடவடிக்கைகள் இருந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவரை சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியர் ஆஷா அஜீத் வரவேற்றார். பின்னர் சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தவர்,

ஸ்ரீ சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆண்டு அபிவிருத்தி திட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்டார். அதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மேதகு டி.எஸ்.கே மதுராந்தகி நாச்சியார் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கு நடந்த கோ பூஜை, யாக வேள்வியில் கலந்துகொண்டவர் ராணி வேலு நாச்சியர் படத்தை திறந்து வைத்து, ஜல்லிக்கட்டுக் காளைகள் மற்றும் ரேக்ளா மாட்டு வண்டிகளின் அணி வகுப்பைத் துவங்கி வைத்துப் பேசினார்.



விழாவில் ஆளுநர் பேசும்போது, "தமிழ்நாடு ஆன்மீக பூமி, வீரம் நிறைந்த பூமி. பஹல்காம் கொடும் சம்பவத்தை நீண்ட காலம் மறக்க முடியாது. ஆனால் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை நாம் ஆபரேஷன் சிந்தூரின் மூலம் தவிடு பொடியாக்கினோம். அதற்காக நாம் முப்படைக்கும் மரியாதை செலுத்துவோம். நமது நாட்டை, ஆன்மாவை கட்டிக் காத்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடி. பசுவை வாழ வைப்பது போல் விவசாயத்தையும் வாழ வைக்க வேண்டும், நிலையான நீடித்த வளர்ச்சி என்பது தான் பிரதமர் நரேந்திர மோடியின் கோட்பாடு. மேற்கத்திய நாடுகளின் மாடல் என்பது பேராசை கொண்ட சுரண்டல் மாடலாகும். ஆனால், நாம் வளரும்போது, நம்முடன் சேர்ந்து உலகமே வளர்கிறது. இதுதான் பாரத மாடல்" என்றார் தொடர்ந்து மதியம் காரைக்குடியில் ஓய்வெடுத்து கண்டதேவியிலுள்ள ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். இப்பகுதியிலுள்ள சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் கலந்துகொண்டவர், தேவகோட்டை ராம் நகரில் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செயப்பட்ட 'கண்டதேவி தேர்' குறித்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் எனச் சொல்லப்பட்ட நிலையில் நான்கு நாட்டார்கள் எதிர்ப்பால் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியை ரத்து செய்தார். பாஜக ஆதரவாளர்கள் சிலர் தயாரித்த ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் தேவகோட்டைக்கு வருகிறார் என்ற செய்தி பரவியது 



'இந்த நூல் வெளியீட்டு விழா நடக்க கூடாது' என்று இப்பகுதியிலுள்ள. தலைவர்கள் சில நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதில், " 192 கிராமங்களை உள்ளடக்கிய 4 தன்னாட்சிக் கள்ளர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜாதி மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் ஏற்பட்ட சிறு பிரச்னையால் எங்களுக்கு சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் பாத்தியப்பட்ட கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் சில ஆண்டுகள் தேர் ஓடவில்லை. அதன்பின்பு உயர் நீதிமன்றம் உத்தரவு தலையீட்டால் அனைவரும் ஒற்றுமையாக தேர் இழுத்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் நான்கு நாடுகளுக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் கண்டதேவி தேர் குறித்து நூல் எழுதி அதை ஆளுநர் வெளியிட உள்ளதாக கேள்விப்படுகிறோம்.



இந்த நூல் எங்கள் நான்கு நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஜாதிக்கலவரத்தைத் தூண்டும். அதனால் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், இன்னும் சில நாட்களில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் பிரச்சனையை உண்டாக்கும் இந்த நூல் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினர் இந்த தகவல் காவல்துறை மற்றும் உளவுத்துறை, சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கும் ஆளுநரின் கவனத்துக்கு சென்றதால் வேறு வழியில்லாமல் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய ஆளுநர் ஒத்துக்கொண்டார் எனக் கூறுகிறார்கள்.  சிவகங்கை மாவட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவரை சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் வரவேற்றார். பின்னர் சிங்கம்புணரி சேவுகப்பருமாள் அய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தவர், ஸ்ரீ சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆண்டு அபிவிருத்தி திட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்டார்.குன்றக்குடி அடிகளார், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் உள்ளிட்ட பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கு நடந்த கோ பூஜை, யாக பூஜையில் கலந்துகொண்டவர் ராணி வேலு நாச்சியர் படத்தை திறந்து வைத்து, நாட்டின ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ரேக்ளா மாட்டு வண்டிகளின் அணி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.

விழாவில் பேசும்போது, "தமிழகம் ஆன்மீக பூமி, வீரம் நிறைந்த பூமி. பெஹல்காம் கொடும் சம்பவத்தை நீண்ட காலம் மறக்க முடியாது. ஆனால் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை நாம் ஆபரேஷன் சிந்தூரின் மூலம் தவிடு பொடியாக்கினோம். அதற்காக நாம் முப்படைக்கும் மரியாதைசெலுத்துவோம். நமது நாட்டை, ஆன்மாவை கட்டி காத்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடி. பசுவை வாழ வைப்பதுபோல் விவசாயத்தையும் வாழ வைக்க வேண்டும், நிலையான நீடித்த வளர்ச்சி என்பதுதான் பிரதமர் மோடியின் கோட்பாடு. மேற்கத்திய நாடுகளின் மாடல் என்பது பேராசை கொண்ட சுரண்டல் மாடலாகும். ஆனால், நாம் வளரும்போது, நம்முடன் சேர்ந்து உலகமே வளர்கிறது. இதுதான் பாரத மாடல்" என்றார்அதைத்தொடர்ந்து மதியம் காரைக்குடியில் ஓய்வெடுத்துவிட்டு கண்டதேவியிலுள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இப்பகுதியிலுள்ள சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் கலந்துகொண்டவர், ராம் நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செயப்பட்ட கண்டதேவி தேர் குறித்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கிளம்பினார்.அரசியல்வாதிபோல் தமிழக அரசுக்கு எதிராக பேசியும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என் ரவி, அவர் சென்ற இடங்களில் அரசியல் கட்சிகள், அமைப்புகளின் ஆர்பாட்டம், கருப்புக்கொடி எதிர்ப்பையெல்லாம் கண்டுகொண்டதில்லை. ஆனால், முதல் முறையாக மக்களின் எதிர்ப்பு காரணமாக ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் சென்றுள்ளார் என்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...