முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், ஒருவர் கைது தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், ஏர் இந்தியா விமானம் ஏஐ-950 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த ஃபசுலுதீன், 26, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர், அவரை சோதனையிட்ட போது, 707 கிராம் எடை கொண்ட தங்க பசை மூன்று பொட்டலங்களில் அவரது உடலில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதிலிருந்து ரூ 31.50 லட்சம் மதிப்பிலான 648 கிராம் 24 கேரட் தங்கம் எடுக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். மொத்தம் ரூ 31.50 லட்சம் மதிப்பிலான 648 கிராம் 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

சிர்மாரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல், நிதியுதவி

பிரதமர் அலுவலகம் சிர்மாரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு இமாச்சலப் பிரதேசம் சிர்மாரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிர் இழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் பிரதமர்  தெரிவித்துள்ளார். சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது : "இமாச்சலப் பிரதேசம் சிர்மாரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து துயருற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் வழங்கப்படும்: பிரதமர் மோடி "

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் சிறப்பான செயல்திறனிற்காக வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் அலுவலகம் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் சிறப்பான செயல்திறனிற்காக தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி, அதனு தாஸ் மற்றும் அபிஷேக் வர்மாவிற்கு பிரதமர் வாழ்த்து பாரிஸ் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில்  மாபெரும் செயல்திறனை வெளிப்படுத்திய தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி, அதனு தாஸ் மற்றும் அபிஷேக் வர்மாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான  சுட்டுரைச் செய்தியில், “கடந்த சில தினங்களாக உலகக்கோப்பைப் போட்டியில் நமது வில்வித்தை வீரர்கள் மாபெரும் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்தத் துறையில் வளர்ந்துவரும் திறமையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சாதனை படைத்த தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி, அதனு தாஸ், அபிஷேக் வர்மா ஆகியோருக்கு வாழ்த்துகள்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உதயம் முன்பதிவு தளத்தின் ஒருங்கிணைந்த சேவைகளை அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகப்படுத்தினார்.

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் தற்சார்பு இந்தியாவை உருவாக்க பல்வேறு முன்முயற்சிகளை அமல்படுத்துவதில் அனைத்து கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான பல்வேறு முன்முயற்சிகளை அமல்படுத்துவதில் அனைத்து கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தை முன்னிட்டு ‘இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்திகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி மாநாட்டில் பேசிய அவர், தற்சார்பு இந்தியாவை உருவாக்க, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் தொழில்துறை, தோல் மற்றும் பழங்குடி தொழில்துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். தொழில்நுட்பப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தரமான வளர்ச்சி ஆகியவை தொழில்...

பாதுகாப்புத் அமைச்சர் எல்லையோர 63 பாலங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பாதுகாப்புத் அமைச்சகம் லடாக்கில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்: 6 மாநிலங்கள் & 23 யூனியன் பிரதேசங்களில் எல்லையோர சாலைகள் நிறுவனம் கட்டிய 63 பாலங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே-வில் இருந்து 88 கி.மீ தொலைவில் உள்ள கியுங்கம் எனும் இடத்தில் 2021 ஜூன் 28 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், 6 மாநிலங்கள் & 23 யூனியன் பிரதேசங்களில் எல்லையோர சாலைகள் நிறுவனம் கட்டிய 63 பாலங்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். லடாக் துணை நிலை ஆளுநர் திரு ஆர் கே மாத்தூர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜம்யங்க் செரிங் நம்கியால், வடக்கு ராணுவ தள தலைமை தளபதி லெஃப்டினெண்ட் ஜெனரல் ஒய் கே ஜோஷி, எல்லையோர சாலைகள் நிறுவன தலைமை இயக்குநர் லெஃப்டினெண்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், இந்திய ராணுவம், எல்லையோர சாலைகள் நிறுவனம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அருணாச்சலப் பிரதேச முதல்வர் திரு பேமா காண்டு, ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் திரு ஜெய்ராம் தாகூர், உத்தரகாண்ட் முதல்வர் ...

இந்திய சுகாதார சேவைகள் அமைப்பில் அரசு-தனியார் கூட்டை கொவிட் வலுப்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சர்

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்  இந்திய சுகாதார சேவைகள் அமைப்பில் அரசு-தனியார் கூட்டை கொவிட் வலுப்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்திய சுகாதார சேவைகள் அமைப்பில் அரசு-தனியார் கூட்டை கொவிட் வலுப்படுத்தியுள்ளது என்றும் இது இரு பிரிவினருக்கும் நன்மை பயக்கும் என்றும் வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இரண்டாம் பொது சுகாதார உச்சி மாநாடு 2021-ல் பேசிய அவர், சுகாதார சேவைகள், பரிசோதனை வழங்கல், தடுப்பு மருந்து உருவாக்கம், ஆராய்ச்சி & மேம்பாடு, ஊரக பகுதிகளுக்கான தொலைமருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகளின் டிஜிட்டல் விநியோகம் உள்ளிட்ட பலவற்றில் தொழில் துறை மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடனான இந்த கூட்டு மூலம் பணியாற்றலாம் என்றார். சுகாதார சேவைகள் அமைப்பில் அரசு-தனியார் கூட்டு திருப்புமுனையாக அமையும் என்றும், இந்திய சுகாதார துறையை...

மாநிலங்களுக்கு கூடுதலாக 2,12,540 குப்பிகள் லிப்போசோமால் அம்போடெரிசின் பி ஒதுக்கீடு

இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் அனைத்து மாநிலங்கள்.  /யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக 2,12,540 குப்பிகள் லிப்போசோமால் அம்போடெரிசின் பி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன: திரு டி வி சதானந்த கவுடா அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு, கருப்பு பூஞ்சை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் லிப்போசோமால் அம்போடெரிசின் பி கூடுதலாக 2,12,540 குப்பிகள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா இன்று அறிவித்தார். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு போதுமான அளவில் மருந்துகள் கிடைப்பதற்காக சுமார் 10 லட்சம் குப்பிகள் இது வரை நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்