பிரதமர் அலுவலகம் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் சிறப்பான செயல்திறனிற்காக தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி, அதனு தாஸ் மற்றும் அபிஷேக் வர்மாவிற்கு பிரதமர் வாழ்த்து
பாரிஸ் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் மாபெரும் செயல்திறனை வெளிப்படுத்திய தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி, அதனு தாஸ் மற்றும் அபிஷேக் வர்மாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுட்டுரைச் செய்தியில், “கடந்த சில தினங்களாக உலகக்கோப்பைப் போட்டியில் நமது வில்வித்தை வீரர்கள் மாபெரும் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்தத் துறையில் வளர்ந்துவரும் திறமையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சாதனை படைத்த தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி, அதனு தாஸ், அபிஷேக் வர்மா ஆகியோருக்கு வாழ்த்துகள்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்