பிரதமர் அலுவலகம் சிர்மாரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு
இமாச்சலப் பிரதேசம் சிர்மாரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிர் இழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது : "இமாச்சலப் பிரதேசம் சிர்மாரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து துயருற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் வழங்கப்படும்: பிரதமர் மோடி "
கருத்துகள்