சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் விநியோக நிகழ்ச்சி

ஜவுளித்துறை அமைச்சகம். சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் விநியோக நிகழ்ச்சி
மற்றும் சணல் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பட்டறையை மத்திய ஜவுளி அமைச்சர் தொடங்கி வைத்தார்

பல்வேறு சணல் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பொருட்களின் உற்பத்தியில் நாட்டுக்கு பங்களிக்கவும், தங்களது வருவாய் மற்றும் உற்பத்தி திறனை பெருக்கி கொள்வதற்காகவும் சான்றளிக்கப்பட்ட விதைகளை பயன்படுத்துமாறு விவசாயிகளை மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி. ஸ்மிருதி ஜுபின் இரானி கேட்டுக் கொண்டார்.

பாரக்பூரில் உள்ள ஐசிஏஆர்-சிஆர்ஐஜேஏஎஃப் ஏற்பாடு செய்த சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் விநியோக திட்டம் மற்றும் சணல் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பட்டறையை காணொலி மூலம் தொடங்கி வைத்த திருமதி. ஸ்மிருதி ஜுபின் இரானி,  வெறும் 60 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் மற்றும் 20,000 விவசாயிகளோடு 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐகேர் முன்னெடுப்பு, வெறும் ஒன்றரை வருடங்களில் வேகமாக முன்னேறி 2017-ஆம் ஆண்டு 600 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகளாக உயர்ந்ததாக தெரிவித்தார்.

ஐகேர் திட்டத்தின் கீழ் 2.60 லட்சம் விவசாயிகளுக்கு அரசு இதுவரை ஆதரவளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சணல் ஐகேர் முன்னெடுப்பை சரியான முறையில் கொண்டு சென்றதற்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்த அமைச்சர், நேர்மையான முயற்சிகளும் சிறப்பான ஒருங்கிணைப்பும் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.

10,000 குவின்டால் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள்

 விநியோகிக்கப் படுவதன் மூலம், சுமார் 5 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.

சணல் புவி சார்ந்த ஜவுளி உள்ளிட்ட தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் சணல் புவி சார்ந்த ஜவுளியை ஊக்குவிக்கும் வகையில் சணல் புவி சார்ந்த ஜவுளிக்கான தர நிலைகளுக்கு இந்திய தரநிலை அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்