மாசிக் கருவாடு ஓசி வாஙகிய ஊழல் காக்கி விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணை பணம் தராமல் மாமூலாக மாசிகருவாடு வாங்கியதுடன், கடையிலிருந்தவர்களை மிரட்டியதாக பாம்பன் காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக உள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் பரவிய நிலையில் உயர்நீதிமன்றத்நில் வழக்கு விசாரணை சம்பவம்: பணம் கொடுக்காமல் காவலர் மாசிக் கருவாடு வாங்கிச் சென்றதுடன் உரிமையாளர்களைக் காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படடுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பன் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் கருவாடு வாங்கி பணம் தர மறுத்த விவகாரம் குறித்து டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவு அருகில் அமைந்த பாம்பனைச் சேர்ந்தவர் மீனவர் குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது கடையில் ஆயிரம் ரூபாய்க்கு மாசிக் கருவாடு வாங்கிய பாம்பன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ், பணம் தர மறு...
RNI:TNTAM/2013/50347