முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தலில் நிலை நிற்க அரசியல் களமாடும் அமமுக

நான்கு


ஆண்டுகளாக தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் .          இலஞ்சத்தை நம்பும்  அரசியல்வாதிகள், ஊழலுக்கு உதவும்  அதிகாரிகள் என்பதாக தமிழக அரசு நிர்வாகம் அதகளப்பட்டுள்ளது..    அதிகாரமென்பதே பொதுப் பணத்தை சூறையாடக் கிடைத்த வாய்ப்பாகக் கருதும் மன நிலை சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது. அரசியல்வாதிகளுக்குத் தோதாக சட்ட,திட்டங்களை வளைத்து சதி செய்து சம்பாதிக்கும் வழிமுறைகளை செய்வதற்கென்றே அதிகாரிகள் கூட்டம் காத்துக் கிடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையில் நூதனமாக நிகழ்த்தப்பட்டு வரும் ஊழல் சதிகள் தான் அதற்கு சான்று. மணல் கொள்ளை அடித்து அதில் நடக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி 234 தொகுதிகளில் வேட்பாளர் நிறுத்தவும் அந்த ஒருவர் பின் நிற்பதே ஒரு ஊழல் இது இந்த மக்களால் அறியப்படவில்லை. தற்போது  பத்துப் பதினைந்‌து.      நாளாக கருத்துக் கணிப்புகளை வெளியீடுகிறார்கள.                        அவரவர் சௌகரியத்திற்கு ஏற்றாற் போல் வாங்கிய பணத்திற்க்கு  வஞ்சமில்லாமல்  ஒளிபரப்பு செய்து மக்களை நன்றாகவே குழப்பி விட்டுருக்க..

சரி அதனால் நமக்கென்னவென்று நாம் விட்டுப் போக முடியாது உண்மை உரைக்க வேண்டும்

ஒருசில தொகுதிகளில் 25 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளும்.

பல இடங்களில் 14 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரையிலான வாக்குகளும்..

மீதமுள்ள தொகுதிகளில் அது சராசரியாக 6 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வாக்குகளும் அமமுக தலமையிலான கூட்டணி பெற்றுவிடும் என்பதாகதான் எல்லா எக்ஸீட் போல் நிலவரமும் சொல்கிறது.

அப்படியே சரியாக கனித்தோமென்றால் தினகரனின் அமமுக கூட்டணி 15 சதவிகித வாக்குகளைப் பெறும் என்பதைத்தான் உறுதியாக சொல்லபடுகிறது.

அதாவது ,இது ரொம்ப ஆரோக்கியமான விசயமாகதான் நாம் பார்க்கலாம்.

ஐந்தரை சதவிகித கட்சி அமமுக என்பதை தான்டி 2021-தேர்தல் களத்தில் கதாநாயகன் தினகரன் என்பது நிருபனமாகிறது.

தற்போது மொத்தம் 12 இடங்களில் உள்ள கோவில்களுக்கு வி.கே.சசிகலா நடராஜன் பயணம் செய்கிறார்.. இந்த 12 இடங்கள் என்பது 12 தொகுதிகளாகும்.. கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிப்பட்டி, மேலூர், திருப்பரங்குன்றம், முதுகுளத்துார், குன்னூர், காரைக்குடி, பொள்ளாச்சி, உசிலம்பட்டி, திருவாடானை போன்றவையே அவைகள். இது ஆன்மீகத் தேடலின் அரசியல் பூச்சு நடிகர் ரஜினிகாந்த்  கடைசி நேரத்தில் கைவிரித்து விட்டார். தம்பி பக்கம் சாய்ந்து மு.க.அழகிரி உதவவில்லை கமல்ஹாசன், சகாயம் ஆகியோர் மக்களிடம் ‌எடுபடவில்லை

வன்னியர் இட ஒதுக்கீடு என்று பிரச்சாரம் செய்தால் முக்குலத்தோர் வோட்டு இழக்க வேண்டியிருக்கிறது. வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று முக்குலத்தோரிடம் கூறியதால் தற்போது வன்னியர் வோட்டையும் இழக்க நேரிடுகிறது.

எய்ம்ஸ் சாதனை என்று கூறலாம் என்றால் எய்ம்ஸ் மருத்துவமனையைத் திருடி விட்டார்களா ஏன் கண்டு பிடித்து தர கேட்டு பலர்.

நடந்து முடிந்த நான்கு வருட ஆட்சியில் சொல்வதற்கு எந்தச் சாதனையும் இல்லை. 

சுயமாக தேர்தல் அறிக்கையும்  முடியவில்லை. திமுக அறிக்கையை அப்படியே நகலாக்கியதால் மக்கள் இத்தனை நாள் ஏன் இதைச் செய்யவில்லை என்று கேட்கிறார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி படத்தைப் போட்டால் இருக்கும் கொஞ்ச நஞ்ச வாக்குகளும் பறிபோகுமோ என்ற பயம் பலருக்கு.

கடைசி அஸ்திரம் தாய்ப் பாசம். கருத்தை, வார்த்தைகளால் இறந்த ஒரு தாயை இழிவுபடுத்தியதாகப் பரப்பி, அதற்கு அழுது நடிக்க வைக்க அதுவும் எடுபடவில்லை

இதை ஏற்கனவே தேர்தலுக்கு தேர்தல் மத்தியில் செய்து வருகிறது. ஏழைத்தாயை க்யூவில் நிற்க வைப்பது, ஆட்டோவில் செல்ல வைப்பது பிறகு அதை ஊடகங்களில் பரப்புவது என தன் தாயை பகடையாக தேர்தலுக்கு பயன் படுத்த  முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியையும் அதை செயல்படுத்த வைக்கிறது .என்பதும் விவாதமாக மாறியது . மக்களைப் பாதிக்கும்

நீட் மரணம், தூத்துக்குடிப் படுகொலைகள், பொள்ளாச்சி பாலியல் பலாத்காரங்கள், சாத்தான்குளம் படுகொலைகள் என எதற்குமே அழாத முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தற்போது கண்ணீர் வடிக்கிறார்.

 தமிழகம் ஏற்கனவே இது போன்ற பல பார்த்து விட்டது. 

முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி  ஆட்சி அப்பட்டமான நாடகம் போல் தற்போது அம்பலப்பட்டு நிற்கிறது.

தமிழர்களை முட்டாள்கள் என்று  நினைக்கிறார்களோ. என்ற விமர்சனம் உண்டு தமிழர்கள் பெண்மையை மதிப்பவர்கள்.. ஆனால், தமிழைப் புரிந்து கொள்ள முடியாத தற்குறிகள் அல்ல. 

சொல்லாத ஒன்றை சொன்னதாக பரப்பி தமிழர்களை திசைதிருப்பி விடலாம் என்று  நினைத்தால் அதை நம்பி ஏமாற தமிழர்கள் வட இந்தியர்கள் அல்ல. என்ற நிலை இப்போது  பலருக்குப் புரிந்திருக்கும். அமைச்சர்  உதயகுமார் நடை பயணம் கிளம்ப காரணமே அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் தான். அமைச்சர் உதயகுமாருக்குத் தொல்லை கொடுக்கவே தேர்தலில் நிற்கிறார்  கொஞ்சம் மெனக்கெட்டா ஜெயிச்சிடுவார என்ற .நிலை .பார்ப்போம் திருமங்கலத்துல அமைச்சர் உதயகுமார் நிலை பரிதாபம் தான்.அதோடு போடிநாயக்கனூர் தொகுதி,  நாகலாபுரத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற "ஓபிஎஸ் "மீது பூவுக்குள் சாணியை வைத்து வீசிய சம்பவம் . மேலும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொளுத்தின பட்டாசு வெடித்து சிதறி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது விழுந்ததால் இரு கோஷ்டியினருக்கும் மோதல் அதிமுக ஒன்றிய செயலாளர் மண்டை உடைப்பு, ஐடி விங் மாநில நிர்வாகியை ஓட விட்டு அடித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் .விபரீதத்தை உணர்ந்த வேட்பாளர் தளவாய் சுந்தரம் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு தப்பியோட்டம்.

என்ற நிகழ்வுகள் பல அரங்கேற்றம் நாள் தோறும் நடைபெற மக்கள் வேடிக்கை பார்க்கும் நிலை தேர்தல் களத்தில் அமமுகவுக்கு பயங்கரமான வரவேற்பு, நாமே எதிர்பார்க்காத அளவுக்கு ஆதரவு  ஆனால்

அவர்கள் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பதல்ல அதிமுகவை வீழ்த்துவது வீட்டுக்கு அனுப்புவது தான்னு முடிவு பண்ணி பணி செய்துவர

  ஆதரவு தெரிவிக்கும் விதமாக அதிமுக வுக்கு எதிராக ஓட்டு போடுவோம்னு உறுதியாக கூறியும் வருகிறார்கள்...வட மாவட்டங்களில் தொடங்கி திருச்சி தாண்டி மதுரை வரை இது தான் கள நிலவரம்.

தென் மாவட்டங்களில் குறிப்பாக நகரம் மற்றும் தெற்கு டெல்டாவில் மட்டும் ஓட்டு  வந்து சேரும். எப்படிப் பார்த்தாலும் இரட்டை இலக்க எண்ணை எட்டி விடலாம் போல். ஒரு வருஷத்துக்கு முன்பே அவர்களின் நோக்கத்தை தெளிவு படுத்தியிருந்தால் கூடுதலாக 20-30 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும் நிலை தான் உள்ளது.

தினகரனுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக்கு மட்டும் 12 முதல் 20 சதம்  ஓட்டுக்கள் பதிவாகும் என்கிறது தான் பொதுவான கணிப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.