முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிர்த்தியாகம் செய்த 5000 வெள்ளலூர் நாட்டு வீரர்களுக்கு நினைவுச் சின்னம்்அமமுக அறிவிப்பு






இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போர் வரி கொடா இயக்கம்

1764 ஆம் ஆண்டு  வெள்ளையர்களுக்கு (கேப்டன் ரூம்லே) எதிராகப் போராடி உயிர்த்தியாகம் செய்த 5000 வெள்ளலூர் நாட்டு  வீரர்களுக்கு நினைவுச் சின்னம்



எழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென டிடிவி தினகரன் அறிவிப்பு....அதன் வரலாற்று நிகழ்வைக் காண்போம்.அலெக்ஸாண்டர்ஸ் கிழக்கு இந்தியா மற்றும் காலனித்துவ இதழ் எனும்  ஆங்கிலப் புத்தகம் கிபி 1835 ஆம் ஆண்டில் இலண்டனில் வெளியிடப்பட்டது. இப் புத்தகத்தில் பக்கம் 220 ல் கேப்டன் ரூம்லே எனும் கிழக்கிந்திய கும்பெனி ஆங்கிலேயத் தளபதியால் கொல்லப்பட்ட தன்னாடசி வெள்ளளூர் நாட்டுக் கள்ளர்களைப் பற்றிய  தகவல் ஒரளவுக்கு இங்கு விரிவாக உள்ளது.

நவாப் மற்றும் ஆங்கிலேயருக்கு எதிராக திரும்பிய யூசுப்கான் கிபி 1764 ல் கொல்லப்பட்டான்.  பின் மதுரை நவாபின் கட்டுப்பாட்டில் வந்தது, அடுத்த 5 ஆண்டுகளில் மற்ற பாளையக்காரர்களை நவாப் அடக்கினான்.

இந்த 5 வருடங்களில்(1764 முதல் 1769 வரை) கள்ளர்கள் நவாபின் மேலாண்மையை ஏற்காமல், தன்னாட்சி புரிந்தனர். இதனால் கள்ளர்களை ஒடுக்க எண்ணிய நவாப் முதலில் மேலூரைக் குறி வைத்தான். தளபதி கேப்டன் ரூம்லே தலைமையில் 5 பட்டாலியன் குழு

சிப்பாய்களையும், 1500 குதிரைப்படை வீரர்களையும் நவாப் அனுப்பி. மேலூரில் முகாமிட்ட ரூம்லே, மேலூர் நாட்டார்களுக்கு , அடிபணிந்து வரி செலுத்துமாறு தூது அனுப்பி பதினான்கு நாள் முகாமிட்டான். மேலூர் நாட்டார்கள் அடிபணிய மறுத்து  வரி செலுத்த முடியாது என கூறி. வெள்ளையர் சிப்பாய்களின் மீதும் தாக்குதல்களை தொடங்கவே

பின் மேலூரை விட்டு அகன்ற ரூம்லே தன் படையுடன் வெள்ளளூர் நாட்டை அடைந்து சுற்றி வளைத்து நாட்டார்களை தங்களிடம் வந்து அடிபணிய மிரட்டினான்.

கிராமத்தைச் சுற்றியுள்ள முட்புதர்களில் கள்ளர் நாட்டார்கள் திரண்டனர். ஆனால் வெள்ளளூர் நாட்டார்கள் அடிபணிய மறுத்து, அவர்களது இயல்பான முரட்டுத் தனத்துடன், வெள்ளையர்களை நோக்கி ஆவேசமாக குரல் எழுப்பி  ஆயுதங்களைக் கொண்டு தாக்கதீ தயாராக

முட்புதர்களையும், வீடுகளிலும் நெருப்பு வைத்தனர் ஆங்கிலேயர். வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வெளியேறி ஒரிடத்தில் திரண்டனர்.  தாக்குதலை தொடங்கினான் கேப்டன் ரூம்லே. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என 3000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். 

வெள்ளளூர் நாட்டின் முக்கிய நாட்டார்களை கைது செய்தனர். கைதிகளுடன் மேலூரை அடைந்தான் ரூம்லே. வெள்ளளூரில் நடந்த பெரும் படுகொலையை அறிந்து மேலூர் நாட்டார்கள், ரூம்லேயோடு ஒத்துழைக்க தற்காலிகமாக சம்மதித்தனர்.

மல்லாக்கோட்டை மற்றும் சிவகங்கை பிரதிநிதிகள் செலுத்தும் வரியின் அளவு மற்றும் சட்டங்களை தாங்களும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தனர். பல நூற்றாண்டுகளாக தன்னரசாக் திகழ்ந்த கள்ளர் நாடுகள் ரூம்லேயின் கொடூரத் தாக்குதலுக்குப் பின்

 நவாபின் பிரதிநிதி முகமது கோலி என்பவன் மேலூர் பகுதிக்கு அமில்தார் பதவியிலிருந்தான். வெள்ளளூர் நாட்டில் சில ஆய்வுகளைச் செய்ய 10 பியூன் அதாவது   ஏவலர்களை  அனுப்பினான் வெள்ளையனுக்கு கட்டுப்பட விரும்பாத கள்ளர்கள் கடுங்கோபத்தில்  பழிவாங்க காத்திருந்ததையடுத்து வெள்ளளூருக்கு வந்த 10 பியூன்களையும் கள்ளர்கள் கொன்றனர். இந்தச் சண்டையில் கிராமம் தீக்கிரையானது. அங்கிருந்த கள்ளர்கள் வடக்கு நோக்கி நகர்ந்து, புதுக்கோட்டை தொண்டைமான் ஆதரவில் குடியேற முயற்சித்தனர். அதற்குள்  படுகொலையை அறிந்த ரூம்லே பெரும் படை ஒன்றை வெள்ளளூர் அனுப்பினான்.

நடந்த மோதலில் 2000 வெள்ளளூர் கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பின் தான் கள்ளர் நாட்டில் அமைதி நிலவியது. மக்கள் சுமூக வாழக்கை வாழத் தொடங்கினர். மேலூர் நாட்டில் இருந்து வெள்ளையர் படை விளக்கிக் கொள்ளப்பட்டது.

சில ஆண்டுகள் அமைதியாக இருந்தவர்களை மீண்டும் ஹைதர் அலியின் தூண்டுதலில்  தாக்குதல்கள் தொடங்கினர்.

மதுரை, தஞ்சை கள்ளர்கள் எதிரிகளைத் தாக்குதல் நடத்தும்  போது தீ பற்றும்  துப்பாக்கியை பயன் படுத்தி எவ்வளவு மறைவான பகுதிகளில் இருந்தாலும குறிதவறாமல் சுடுவதில் வள்ளவர்கள், குதிரைகளை கடிவாளம் இல்லாமலே வேகமாகச் செலுத்தும் திறனுடையவர்கள். மேலூர் கள்ளர்கள் தங்களது கோட்டைகளில் மலபார் துப்பாக்கிகளை வைத்திருந்தனர், அவற்றை உபயோகிப்பதிலும் சிறந்து விளங்கினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...