முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக ஊடக வைரலான ஜசக் வீட்டு விளம்பரப் பலகை

திருநெல்வேலி திரைப்படத் துணை நடிகர் ஐசக் பாண்டியன்  தனது வீட்டை வாடகைக்கு விடுவதற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளார். அது வைரலாகிறது. . ஆனால் 


அப்படி என்ன வித்தியாசம் தெரியுமா? இதோ `வீடு வாடகைக்கு – குடிகாரர், வடமாநிலத்தவர், எடப்பாடி அதிமுக-வினர் அனுக வேண்டாம்’!  என உள்ள இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதைக்கண்ட வலைதள நபர்கள் பலரும், “அட என்னங்க இது… என்னதான் விமர்சனமா இருந்தாலும், மது குடிப்போரையும் அரசியல்வாதிகளையும் இப்படியா இணைக்கிறது” என்று கேட்கத் தொடங்கினர். ஐசக் பாண்டியனின்  நியாயம் இது  அவர் கூறுகையில்  

“என்னை பொறுத்தவரை, குடி பழக்கமென்பது இளைஞர்களை பின்னோக்கி கொண்டு செல்வதாகும். இன்றைய தமிழ் இளைஞர்கள், குடிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். இவர்களால் தமிழ் சமுதாயத்தை பின்னோக்கி செல்லும். அவர்களால் வீட்டிலும் பிரச்னை வரும். அதனால் அவர்கள் என்னை அனுக வேண்டாம் எனவும்.

குடியால் மூழ்கிய நம்மூர் இளைஞர்கள் பலரும், வேலை வாய்ப்பையும் இழந்து வருகின்றனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் இங்கே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.. தமிழ் பேசுவோரை விட இந்தி பேசுவோரும் பிற வட மாநில மொழி பேசுவோரும்தான் அதிகம் உள்ளனர். அதையெல்லாம் காணும்போது, நம் எதிர்காலமே கேள்விக்குறியானதை உணர்ந்தேன். நம் கலாசாரமே கெட்டுப்போகிறது. விரைவில் தமிழ் கலாசாரம் மறையுமே என்று அச்சப்படுகிறேன். அதனால் அவர்களும் வாடகைக்கு வீடு தொடர்பாக அனுக வேண்டாமென தெரிவித்தேன். அடுத்தபடியாக, எடப்பாடி அணியினர். இவர்களை மறுக்க இரண்டு காரணம் உண்டு முதலில் வீடு கேட்க வரும் போது, 4 கால்களில் தவழ்ந்து வருவர்; பின் என்னையே தெரியாது என சொல்லிவிடுவர் என்ற அச்சம். இந்த அச்சம், என்னைப் போன்ற எல்லா சாமாணியனுக்கும் இருக்கிறது. இரண்டாவது காரணம், இந்த எடப்பாடி பழனிசாமி தான், தனது ஆட்சிக்காலத்தில் வடமாநிலத்தவர்களை இங்கே வேலைக்கு அமரவைத்தார். கட்டட வேலைகள் தொடங்கி மின்சார - போக்குவரத்துறை அரசு ஊழியர்கள் வரை இன்று பலரும் நம் ஊரில் வட மாநிலத்தவர்கள்தான். காரணம், அன்று எடப்பாடி அவர்களை அனுமதித்தது. தன் பதவி நிலைக்க, மத்திய அரசு சொல்வதையெல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று அவர் அப்படி செய்தார். அதன் பலன்… இன்று கிராமங்களில்கூட வட மாநில மின் ஊழியர்கள் நிறைந்து கிடக்கின்றனர்.

இதை சொல்வதால் நான் ஆளுங்கட்சி என்றோ, அல்லது வேறு கட்சியை சேர்ந்த நபரென்றோ தயவுசெய்து பொருள்பட வேண்டாம். நான் எந்த கட்சி உறுப்பினரும் அல்ல; தவறுநடந்தால், ஆளுங்கட்சியாக இருந்தால் விமர்சிக்கும் சாமாணியன் தான் நான். திமுக-வையும் கருத்துகளால் தாக்குவேன். சொல்லப்போனால் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக மேல் எனக்கு நன்மதிப்பு இருந்தது. ஏனெனில் அப்போது மாநில அரசை கண்டு, மத்திய அரசு பயந்தது. `அந்த மோடியா இந்த லேடியா’ என துணிச்சலாக கேட்டவர் அவர். அப்படிப்பட்டவர் இருந்த சிம்மாசனத்தில் எடப்பாடியை அமர வைத்தார்கள். பதவி மோகத்தில், பதவியை தக்கவைத்துக்கொள்ள அவர் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை, வடமாநிலத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்தார். இன்றைய போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை எல்லாமே இதற்கு சாட்சி. தமிழர்களின் சாப்பாட்டை, இந்திக்காரர்களுக்கு அவர் கொடுத்தார் என்றே சொல்வேன்அப்படிப்பட்ட எடப்பாடியை ஆதரித்து, அவருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு, எப்படி என் வீட்டில் நான் இடம் கொடுக்க முடியும்? நான் சொல்லும் காரணம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை” என்றார்.

ஐசக் பாண்டியன், நடிகர் தனுஷின் மாரி திரைப்படத்தில் வில்லனுடன் வரும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். சீவலப்பேரி பாண்டி படம் தொடங்கி எந்திரன், மாரி போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பதாக கூறும் அவர் தற்போது திருநெல்வேலியில் வசிக்கிறார். அங்குதான் தனது வீட்டில் இந்த விளம்பரத்தையும் வைத்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...