முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் கேவியட் மனு தாக்கல்

டெல்லி உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராஜன்  கேவியட் மனு தாக்கல்


அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராசன் கேவியட் மனு தாக்கல் கட்சி சின்னம் விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் எசந கேவியட் மனு அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கில் எடப்பாடி கே.பழனிச்சாமி  தரப்பு மேல்முறையீடு செய்தால் தமது தரப்புக் கருத்தையும் கேட்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைந்த பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி  சசிகலா நடராஜனை  முதல்வராக தேர்வு செய்த நிலையில் ஆளுநர் விடுப்பில் சென்று விடவே அவர் பல வகையில்  முயற்சித்தார். ஆனால் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்  சசிகலா நடராஜன்  சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிட்டதனால் ஒரு முன் ஏற்பாடாக எடப்பாடி கே. பழனிசாமியை கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களைத் திரட்டி முதல்வராக்கினார் சசிகலா நடராஜன் அப்போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் சசிகலா நடராஜன் நியமித்து விட்டு தண்டனை காரணமாக கர்நாடக மாநில  சிறைக்குச்  சென்றார்.



இந்தக் கால கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பையும் ஆளுநரே  இணைந்து வைத்த நிகழ்ச்சி நடந்தது, 

தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா நடராஜன்  மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் அதிமுகவில் புதியதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ப்தவிகளும் பலர் வழிகாட்ட உருவாக்கப்பட்டன.


2017 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதத்தில்  தம்மை நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாதென அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் சசிகலா நடராஜனின் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அவரால் முதல்வராக உறுவாக்கப்பட்ட நபராக இருந்தும்  துரோகம் செய்த எடப்பாடி கே.பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.


நீண்டகாலம் நிலுவையிலிருந்த நிலையிலிருந்த  சசிகலா நடராஜனின்  மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன்  மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார் அந்த மனுவை நிராகரிக்கக் கோரி எடப்பாடி கே.பழனிச்சாமி  தரப்பில் முன்னால் அமைச்சர் செம்மலை ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததில், வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்றக் கட்டணம் செலுத்த சசிகலா நடராஜனுக்கு உத்தரவிட வேண்டும்; அப்படிக் கட்டணம் செலுத்தாவிட்டால் சசிகலா நடராஜன் மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி  செய்ய வேண்டும் என அதிமுகவின் அமைப்பு செயலாளர் என்ற அடிப்படையில் செம்மலை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததனால் எடப்பாடி கே.பழனிச்சாமி  தரப்பு தமது மனு தள்ளுபடி செயப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் கூறப்பட்ட நிலையில்



சசிக்கலா நடராஜன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், பொதுச்செயலாளர் பதவி நீக்க வழக்கில்  எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு உச்சநீதிமன்றத்தி மேல்முறையீடு செய்யும் போது Caveat Petition. (Section 148A of the Civil Procedure Code, 1908) ன் படி தமது தரப்புக் கருத்தையும் கேட்ட பின்னரே உத்தரவிட வேண்டும் என்று சசிகலா நடராஜன்  தெரிவித்துள்ளார். இந்த நிலையில்  .இரட்டை இலைச் சின்னம் தொடர்பான எடப்பாடி கே.பழனிச்சாமி  வழக்கில்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 


அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி கே.பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தொடர்பாக மூன்று  நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு  வெள்ளிக்கிழமை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் என எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டதில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உங்களது இந்தக் கோரிக்கை குறித்து தெரிவித்துவிட்டீர்களா?" என்று கேள்வி எழுப்பினர். அப்போது எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில், "இதுதொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டோம்" என்று தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து,  திங்கட்கிழமை மீண்டும் முறையிட எடப்பாடி கே. பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணை மட்டும் நடைபெறுமே தவிர அதைத் தாண்டி வேறு எந்த ஒரு விவகாரத்திற்குள்ளும் நாங்கள் செல்ல மாட்டோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...