முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊடக வெளிச்சத்தால் உதவிகள் கிடைத்த தனியார் பேருந்து பெண் ஓட்டுனர்

தனியார் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு சொகுசுக் கார் பரிசு கொடுத்த நடிகர் கமலஹாசன்.


தன் சொந்தப் பணத்தில் அநாதை மற்றும் உரிமை கோராத பிணங்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து வைத்த மணிமாறனுக்கு  நடிகர் ரஜினிகாந்த் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார்.

போட்டிக்கு விளம்பர மோகத்தில் தனியார் பேருந்தில் அரசியல் நடவடிக்கைக்காக வேலை போன ஒரு தனியார் பேருந்து பெண் ஓட்டுனருக்கு நடிகர் கமலஹாசன் கார் வாங்கிக் கொடுக்கிறார்.(அந்தப் பொண் அப்புடி எந்த ஒரு சாதனையோ ஒரு  தியாகமும் செய்துள்ளதென இந்த கார் பரிசு அது அவருக்கே வெளிச்சம்).


இது தான் நடிகர்  ரஜினிகாந்துக்கும் நடிகர் கமலஹாசனுக்குமுள்ள வித்தியாசம். இந்தப் பெண் பிள்ளையின்  முகம் சினிமாவிற்கானது.



நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷிற்கு அடுத்து வரிசையில் வசூலை அள்ளுவார்.

ஒரு வாய்ப்புத் தாருங்க பிக்பாஸ் எனவாகவும் இது இந்த நிகழ்வு  அமையும் 

முன்பே இந்த வடிவம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் பிரிவுத் தலைவருமான வானதி சீனிவாசன் முதலில் பேருந்தில் பயணம் செய்ய அந்தத் தகவல் பரவியதால் அதை் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கருணாநிதி  பயணம் செய்யும் போதே  எழுதலாமெனறி இருந்த நிலையில்.  கலைஞானி நடிகர் கமலஹாசன் முந்தி விட்டார். அதை அரசியலாக்கி விட்டார் கார் பரிசு மூலம்  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு 24 ஆண்டு காலம் அரசுப் பேருந்தின்  ஓட்டுநராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற வசந்த குமாரி (கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில்) க்குக் 





கிடைக்காத புகழ் மற்றும் அதிர்ஷ்டமும் பாராட்டுக்களும் ஊடக விளம்பர வெளிச்சமும் கோயமுத்தூர்  ஷர்மிளாவிற்கு கிடைக்கிறது காரணம் அரசியல் 

ஆனால் முதல் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா இல்லை என்பதே உண்மை, அதைவிட ஒரு தகவல்  சென்னை மெட்ரோ ரயில் சேவையை ஜுன் மாதம்  29 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டில் அப்போதய முதலமைச்சர் காலம் சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவால்   தொடங்கி வைக்கப் பட்டபோது 

 மெட்ரோ ரயிலை இயக்கியவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண்மணியே

இன்று பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் லோகோ பைலட்டாக  மெட்ரோ ரயிலில் பணிபுரிகிறார்கள் மெட்ரோ ரயிலை திறம்பட இயக்கியும் வருகிறார்கள் அவர்களுக்குக் கிடைக்காத

விளம்பரங்கள் ஊடக வெளிச்சம் மூலம் ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர்க்கு கிடைத்ததால் இன்று தமிழ்நாட்டு அரசியல் அதை வியந்து பார்க்கிறது ஊடக விளம்பரம் தேட  உதவிகள் அவருக்கு வந்து குவிகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...