திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவிலில், பூஜை செய்து வரும் அர்ச்சகர்களின் தட்டுக்
காணிக்கையை தடுக்கும் ஹிந்து சமய அறநிலையத் துறையில் பணி செய்து வரும் அலுவலர்களின் செயலால் பூஜகர்கள் மற்றும் பக்தர்கள் கொந்தளிக்கின்றனர். பழனி முருகன் கோவில் அறநிலையத்துறை நிர்வாகத்தில், 30-க்கும் மேற்பட்ட உப கோவில்களும் வருகிறது. அதில், கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவிலும் ஒன்று. இங்கு பூஜைகள் செய்து வரும் அர்ச்சகரின் தட்டில் பக்தர்கள் இஷ்டப்பட்டு செலுத்தும் தட்டுக் காணிக்கையை உண்டியலில் செலுத்தும் படி வியாபாரக் கடை போல , அங்குள்ள ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், பக்தர்களிடம் அடாவடியாகவே நிர்ப்பந்திப்பதாகவும். அவ்வாறு செலுத்தாதவர்களிடம் கண்டிப்புக் காட்டுவதாகவும். பக்தர்களின் வருகையைக் கண்காணித்து, உண்டியலில் அவர்கள் பணம் செலுத்த மூன்று ஊழியர்களை நியமித்து கெடுபிடிகள் செய்வதோடு, 'சிசிடிவி' கேமராக்கள் அமைத்து அலுவலர்கள் கண்காணிக்கின்றனர்.
பக்தர்கள் விரும்பித் தட்டில் போடும் வழக்கம் ஹிந்து சமய முறை, அதைப் பெறும் அர்ச்சகர்கள் பலருக்கு, விளக்கம் கேட்டு ஹிந்து சமய அறநிலையத் துறை கடிதம் அனுப்பித் துன்புறுத்தல் நிலை தொடர்வதாகவும்பக்தர்கள் பணத்தை உண்டியலில் இடும் படி கட்டாய ப் படுத்தி, நன்கொடையாக பி.ஓ.எஸ்., இயந்திரம் மூலம் செலுத்தவும் அலுவலர்கள் கட்டாயப்படுத்துகின்றனர் எனவும்
கோவிலில் அன்றாட பூஜை, அபிஷேகம் குறித்த அறிவிப்புப் பலகைகள் ஏதுமில்லாமல் ஹிந்து சமய அறநிலையத் துறை இது போன்று பூம்பாறை வேலப்பர் கோவில் வழிபாட்டிற்கு வந்தபோது கோவில் உண்டியலில் பணம் செலுத்தினேன். தொடர்ந்து, விருப்பத்தின் அடிப்படையில் அர்ச்சகருக்கும் பணம் கொடுத்த நிலையில், வாங்க மறுத்து, பணத்தை உண்டியலில் செலுத்தி விட்டார். இது சம்பந்தமான எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. என பல பக்தர்கள் தெரிவித்துள்ளார்15 ஆம் நூற்றாண்டில் அருணகிரி நாதரின் பாடலின் படி, முருகன் அருணகிரிநாதரை அரக்கனிடமிருந்து குழந்தை வடிவில் வந்து காப்பாற்றியதால் 'குழந்தை வேலப்பர்' என அழைக்கப்படுகிறார்.
10 ஆம் நூற்றாண்டில், போகர் சீன தேசத்திலிருந்து திரும்பிய போது, பழனி மற்றும் பூம்பாறை (மேற்கு தொடர்ச்சி மலை) நடுவில் மேலும் ஒரு நவபாசன சிலையை அமைத்தார். அந்த இடம் யானை கெஜம் அல்லது போகர் காடு என அழைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள கல்வெட்டுகளின்படி, சேர மன்னரால் கட்டப்பட்டது இக்கோயில் பழனி முருகன் கோயிலுக்கு நேரெதிரில் அமைந்துள்ளது எனப்படுகிறது. கோவிலின் ஸ்தல விருட்சமாச குறிஞ்சிச் செடி உள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இக்கோவில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டது. இக்கோயிலில் உள்ள சிலையானது போகர் என்னும் சித்தரால் நவபாசனத்தில் உருவாக்கப்பட்டது. இந்தக் கோயில் பழனி அருள்மிகு ஶ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில் தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது. ஒவ்வொரு வருடமும் பூம்பாறை முருகனுக்கு தேர்த் திருவிழாவும். தை மாதம் பூசத்திற்குப் பிறகு வரும் கேட்டை நட்சத்திரத்தன்று விழா நடைபெறுகிறது. தை அல்லது மாசி மாதத்தில் இவ்விழா நடைபெறும்.
கருத்துகள்