பசும்பொன்னில் தெய்வீக திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா
பசும்பொன்னில் இன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி குரு பூஜை விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தெய்வீக திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழாவும் மற்றும் 62-வது குருபூஜை விழாவும் அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி நினைவிடத்தில் துடங்கியது.முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனது செந்தப் பணத்தைக் கொடுத்து செய்து வழங்கிய தங்கத்தால் ஆன அங்கி அணிவிக்கப்பட்டது. நேற்று லட்சார்ச்சனையும் நடைபெற்றது. இன்று தேவர் குருபூஜை அரசியல் விழா நாளை ஆன்மீக விழாவும் நடைபெறுகிறது.
பசும்பொன் தேவர் திருமகன் நினைவிடத்தில் இன்று காலை 9 மணிக்கு மாநில அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்வில், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன்,
மு.பெ.சுவாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர். அதேபோல, முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்,
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், அதிமுகவின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடராஜன், காங்கிரஸ் மாநிலத் தலைவர், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தேமுதிக சார்பில் விஜய் பிரபாகரன், நடிகர் சங்க விஷால், பாஜகவின் எச் ராஜா, சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன், நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதை யொட்டி, கூடுதல் காவல்துறை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் பத்தாயிரம் காவலர்கள் வழிநெடுகிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், பசும்பொன் முதல் கமுதி வரை 90 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
அதே போல, காவலர்கள் உடையில் அணியக்கூடிய 600 கேமராக்கள் மூலமும் கண்காணிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
அது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின், தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். அதற்கு முன்னர் மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கும், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்தின் முடிசூடா மன்னர்கள் மற்றும் தளவாய் பிரதாணிகளான தியாக வேங்கை மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்” என தெரிவிக்கப்பட்ட நிலையில்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62ஆவது குருபூஜையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவு மதுரை விருந்தினர் இல்லத்தில் தங்கிய அவர், இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பசும்பொன் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் மதுரை தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள மருதிருவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெண்ணென்றால் அன்னையையும் நாடென்றால் நன்றி உணர்வையும் வீடென்றால் நேர்மையையும் பேர்சொல்ல வாழ்ந்தவர், காமராஜரை அரசியலில் அறிமுகம் செய்தவர் நீங்கள் புகழ்ந்தாலும் வாய்த்திருக்கும் புகழுக்கும் பெருமையுடன் ஊழலுக்கு ஊமையாய் இல்லாமல் வாழ்ந்து வென்ற ஊர்போற்றும் உத்தமரை, கிழக்கே கீழக்கரையிலிருந்து மேற்கே விருதுநகர் சூலக் கரை வரையில் எனது எல்லை என்று கூறுவார்!. அவருடைய நாடாளுமன்ற சட்டமன்ற உரைகளைப் படித்தாலே அவரது விசாலமான பார்வை நன்றாகப் புலப்படும்! முழுவதும் இந்திய தேசிய ஒருமைப்பாடு சார்ந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவை.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை தன்னகத்தே கொண்டவர்! வீரமும், விவேகமும், தெய்வீகமும், தேசியமும் இரண்டு கண்கள் என்று கூறியவர். தென்னகத்தில் பிறந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் வங்காளத்தில் நட்பு வளர்த்து இந்திய தேசிய ராணுவத்தில் ஐக்கியமாகி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி வெள்ளையனின் கனவிலும் கர்ஜித்த தேசியத் தலைவராய் மக்கள் நினைவுகளில் அழியாதிருக்கும்
பசும்பொன் தேவர் பெருமகனே உந்தன் ஒற்றைச் சொல்லுக்கு தென்னாடு கட்டுப் பட்டதே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சார்ந்திருந்த அரசியல் அமைப்பான அனைத்திந்திய பார்வார்டு பிளாக் ஆண்டு தோறும் விழா எடுத்து இப்போது அரசு விழாவாக நடக்கிறது, இந்நாளை தமிழ்நாட்டில் ஓர் பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரி வருகிறது அந்த அமைப்பு.
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62ஆவது குருபூஜையை முன்னிட்டு, மாவீரர்,ஜாதியச் சிந்தனை கொண்டவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகி விடும்" "ஜாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வழிபடவே அருகதை அற்றவன்". -தெய்வத் திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் நாளும் பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒன்று அக்டோபர்-மாதம் 30 ஆம் தேதி ஜெயந்தி விழா.தேவரே தெய்வம். அவரை வணங்க செல்வதற்கு. ஒழுக்கமுடன் செல்லுங்கள் அதுதான் அவர் விரும்புவது. ஆங்கிலேயரை எதிர்த்து நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் ஹரிஜன மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தபோது அதை ஏற்று,
ஹரிஜன மக்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்" என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தெரிவித்து ஆலய பிரவேசத்தினை அமைதியாக நடத்திய பெரியவர் திரு.பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தியில் அவரது தியாகத்தினையும் சேவையும் போற்றுவோம். என பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் எச் ராஜா குறிப்பிட்டுள்ளார். தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிப்பாளையம் மற்றும் பசும்பொன்னில் உள்ள,உ.முத்துராமலிங்க தேவரின் சிலைக்கும், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்! மற்ற செய்தி ஆசிரியர்கள் தற்போது உள்ள அரசியல் நிலை குறித்து என்ன சிந்தனை செய்கிறார்கள் ? இது எந்தத் திசையில் என்று கூற வர வேண்டும் ஆனால் அந்த ஆற்றல் இல்லாமல் இருக்கும் நிலை.
கருத்துகள்