இராஜபாளையம் காவல் நிலையத்தில் பாலியல் அத்துமீறல்
மது போதையில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) பணியிடமாற்றம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகிலுள்ள தொம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 54). காவலராகப் பணியாற்றியவர் சமீபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்று இராஜ பாளையம் தெற்கு காவல் நிலையத்தில் பணி செய்கிறார்.
இராஜபாளையம் மலையடிப்பட்டி காவலர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடிப் பழக்கம் கொண்ட மோகன்ராஜ் பணியின்போதும் போதையில் இருந்துள்ளார். அன்றும் அதே போல் அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு குடி போதையில் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு வந்தவரை சக காவலர் மாடியிலுள்ள அறைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சென்றவர் தன்னுடன் பணியாற்றும் இளம் வயது பெண் காவலர் ஒருவரை நெருங்கி பேச்சு கொடுத்துள்ளார். போதையில் உளறியவரிடருந்து விலக
நினைத்த பெண் காவலரை நெருங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர். மோகன்ராஜ் அவரிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதால். அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் கூச்சல் போட்டார்.
அதைக்கேட்ட பணியிலிருந்த மற்ற காவலர் மாடியில் அறைக்கு ஓடிச்சென்று பெண் காவலரை மீட்டனர். அத்து மீறிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி. டி.வி. கேமராவில் பதிவாகியது. உடனடியாக சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன் ராஜை, அரசு மருத்துவம னைக்கு அழைத்துச் சென்று அவர் குடி போதையில் பணியில் இருந்ததை உறுதி செய்தனர்.
பின்னர் தொடர் பாக விசாரணை நடத்திய இராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிரீத்தி, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு தகவல் தெ தெரிவித்ததையடுத்து பணி நேரத்தில் மது போதையில் பெண் காவலரிடம் அத்துமீறல் செய்த சிறப்பு காவல் துறை உதவி ஆய்வாளர் மோகன் ராஜ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். விசாரணை முடிவில் அவர் பணி நீக்கம் செய்யப்படலாம். நீதிமன்றம் விசாரணை நடத்தி தண்டனை வழங்கினால் தான் நீதி வெல்லும்
கருத்துகள்