முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செவிலியர் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் நடத்திய போராட்டம்

மரணத்தில் சந்தேகம் உள்ளதால் பிரேதப் பரிசோதனை முடித்து செவிலியர் மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.

புதுக்கோட்டை மாவட்ட அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  செவிலியர்  மாணவியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகத் தெரிவித்து  பிரேதப் பரிசோதனை முடித்த அவரது உடலை வாங்க மறுத்து இறந்த பெண்னின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட் டம் வடகாடு அருகில் உள்ள கருக்காக்குறிச்சி வடக்கு ராஜா குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ்  மகள் சௌமியா (வயது 20)  புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்னமோ நர்சிங் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து மாயமானது தொடர் பாக வடகாடு காவல் நிலையத்தில் அவர் தந்தை கொடுத்த புகாரில்  வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் அவரது விட்டின் அருகில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் பிரேதமாக மிதந்த மாணவியின் உடலை ஊர்மக்கள் மற்றும் காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோத ணைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் 



அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும் அது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவரது குடும்பத்தினர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருந்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலையில் திரண்டனர். மேலும் மாணவியின் ஜாங் சார்ந்த சங்கத்தினரும் திரண்டு வந்து செவிலியர் மாணவி சாவில் இளைஞர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாகவும் காதல் விவகா ரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் மாணவியின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டுமெனக் கூறினர்.

மாணவியின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து மருத்துவக்கல்லூரி வளாகத்திலிருந்து ஊர்வலமாகப் புறப் பட்டு தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த பேரூந்துகள், வாகனங்கள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், கோரிக்கை தொடர்பாக தோஷங்களையும் எழுப்பினர். மாணவியின் புகைப்படத்துடன் கூடிய பதாகையை கையில் ஏந்தி சிலர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.


மறியலில் ஈடுபட்டவர்களிடம் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் பேச்சு நடத்தினர். பிரேதப் பரிசோதனை அறிக்கைவந்ததும், அடுத்தக்கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவியின் செல்போன் எண் மூலம் உரையாடல்கள் உள்ளிட்டவற்றைப் பார்த்து. உரிய விசாரணை நடத்தப் படும் என்றும், தாங்கள் தெரி விக்கும் சந்தேகங்கள் கோரிக்கையின் படியும் நடவடிக்கை எடுப்பதாகவும் காவலர்கள் 

உறுதியளித்ததைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். அதே நேரத்தில் சவுமியா சாவில் சந்தேகம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனக்கூறினர். இந்த மறியல் போராட்டத் தால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரபரப்புடன் காணப் பட்டது. மேலும் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம்போக்குவரத்து பாதித்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...