முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊடக சுதந்திரத்தைத் தடுக்க முடியாது. அண்ணா பல்கலை குற்ற வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கரார் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல்


வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்


இச் சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும் வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென


பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் மற்றொரு நபரையும் குறிப்பிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் வரலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ்



கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணையை CBI க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மற்றொரு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் வெளியிட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் அனைத்து கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.


இரு வழக்கறிஞர்களின் முறையீட்டையும் பெண் வழக்கறிஞர்களின் கடிதத்தையும் ஆய்வு செய்த நீதிபதிகள் காவல்துறையினரின் புலன் விசாரணை குறித்து தீவிரமான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பெண் வழக்கறிஞர் வரலட்சுமி கடிதத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழ்நாடு உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (DGP), சென்னை மாநகர காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டனர்.





மேலும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் விளக்கத்தைப் பெறாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக பிற்பகல் 2:15 மணிக்கு தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறையினரின் விளக்கத்தைப் பெற்றுத் தெரிவிக்கும் படி உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்குத் தள்ளி வைத்த பின் அரசு தரப்பில் ஆஜரான தலைமை அரசு வழக்கறிஞர் விவாதம் துவங்கி நடந்த நிலையில்.செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநகர் காவல்துறை ஆணையர் அருண்,


``24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அழைப்பின் அடிப்படையில் காவல் துறை குழு அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது, பாதிக்கப்பட்ட மாணவியும், POSH கமிட்டியிலுள்ள பேராசிரியையும் அளித்த புகாரின் அடிப்படையில் FIR பதிவு செய்தோம். பின்னர், விசாரித்து ஆதாரங்களைச் சேகரித்து 25-ஆம் தேதி காலையிலேயே குற்றம் சாட்டப்பட்ட நபரைப் பிடித்தோம். மேலும் விசாரித்து அவர் தான் குற்றவாளி என்று உறுதிப்படுத்தியவுடன் கைது செய்து காவலில் வைத்தோம்.

போக்சோ குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களில் FIR பதிவு செய்யும்போது Crime and Criminal Tracking Network & Systems (CCTNS)-ல் தானாகவே லாக் ஆகிவிடும். ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக FIR லாக் ஆவதில் தாமதமாகியிருக்கிறது. அந்தத் தாமதமான நேரத்தில் ஒரு சிலர் பார்த்து, பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். அவர்கள் வழியாகக் கசிந்திருக்கலாம். அதேபோல், புகார்தாரருக்கு ஒரு நகல் கொடுத்தோம். இந்த இரண்டு வழிகளில் FIR வெளியாகியிருக்கலாம். இதுபோன்ற வழக்குகளில் FIR-ஐ கசியவிடுவது குற்றம்.இப்போது இந்த விவகாரத்தில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.



வெளியிலிருந்துதான் கசிந்திருக்கிறது. கசியவிட்டவர்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்கப்படும். இதுவரை நடந்த விசாரணையில், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி. எனத் தெரிவித்தார் இது இவ்வாறு இருக்க பல மூத்த பத்திரிகையாளர்கள் சாலையோர பிரியாணிக்கடை நடத்துபவன் மாதிரியா குற்றவாளி தெரிகிறான். நிற்கும் தோரணையைப் பாக்கும்போது பலருக்கும் கோபம் வருது.

துணிச்சலாக அந்தம்மா மட்டும் புகாரைக் கொடுக்க வில்லை எனில் இன்னும் எத்தன குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்குமோ. நினைக்கப் பதறுகிறது. இந்தக் குற்றவாளிக்குத் துணை போனவன், பாதுகாத்தவன் அத்துனை பேருமே குற்றவாளிகள் தான். குற்றவாளி ஞானசேகரன் குறித்த வேறு வீடியோ வெளியானது


அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன், ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அது மேலும் எரிச்சல் தரும் நிலையில் கடந்த ஜூன் மாதம், கோட்டூர்புரம் லேக் வியூ சாலையில் காரை நிறுத்தியவரிடம் தகராறில் ஈடுபட்ட ஞானசேகரன் படு பயங்கரமான குற்றவாளி தான் இந்த நிலையில் ABVP அமைப்பினரை அலுவலகத்தில் அனுமதியின்றி நுழைந்து இரவோடு இரவாக கைது செய்ததாக அந்த அமைப்பினர் குற்றம் சாட்டும் நிலையில் 

அந்த சிசிடிவி காட்சி வெளியானது. இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கை பெண் காவல்துறை அலுவலர்கள் மட்டுமே கொண்ட ஐபிஎஸ் அலுவலர்கள் குழு விசாரணை நடத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் ஆகியோர் அடங்கிய அமர்வில் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் ஊடகங்கள் எதிரிகள் அல்ல! -.

அரசு அலுவலர்களின் நேர்மை, வெளிப்படைத்தன்மை குறித்தும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் 

ஊடகங்கள் எதிரிகள் அல்ல! ஊடக சுதந்திரத்தைத் தடுக்க முடியாது. ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.


அரசு அலுவலர்கள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதில் என்ன சிரமமுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை தொடங்கிய போது, மாணவி தொடர்பான முதல் தகவல் அறிக்கையை (FIR) பொதுவெளியில் வெளியிட்டது மீடியா தான் என  அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

நீதிபதிகள் கூறுகையில், ஊடக சுதந்திரத்தைத் தடுக்க முடியாது. ஊடகங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் வேண்டும்.

ஊடகங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் மறைக்கப்படாமல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது, ஊடகங்கள் எதிரிகள் அல்ல.

பத்திரிக்கைகள் தவறாக திரித்து செய்தி வெளியிட்டதாகக் கூறக்கூடாது.

அரசு அலுவலர்கள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதில் என்ன சிரமமுள்ளது எனக் கேள்வி எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்றம் சனிக்கிழமை 28 டிசம்பர் 2024 லவ் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க இந்தியக் காவல்பணி (ஐபிஎஸ்) அலுவலர்கள் கொண்ட அனைத்து மகளிர் குழுவையும் , முதல் தகவல் கசிவு குறித்து விசாரிக்க பூஜியம் குற்றக் காவல் துறையினர் பதிவு செய்த மற்றொரு வழக்கையும் இணைந்து பாலியல் வன்கொடுமை தொடர்பான முதல் தகவல் அறிக்கை (FIR).பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை விசாரிக்க IPS அலுவலர்கள் புக்ய சினேக பிரியா, அய்மன் ஜமால், எஸ்.பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SID) அமைத்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறைக்கு உட்பட்ட நீதிமன்றத்தின் அமர்வு உத்தரவிட்டது. தொடர்புடைய FIR வெளிவந்த வழக்கு. SID அமைப்பதற்கான நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு அரசு வரவேற்பதாகவும், அதற்கு ஒப்புதல் அளிப்பதாகவும் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் சமர்ப்பித்ததை நீதிபதிகள் பதிவு செய்தனர். இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரிக்கக் கோரி தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகள் (PIL) மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பாதிக்கப்பட்டவரிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது,'

அவரது பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்திய முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியிட்ட காரணமாக பாதிப்புகளுக்கு உள்ளான பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் அவமானத்திற்காக மாநில அரசு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுவாக பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து கல்விக் கட்டணம் அல்லது தங்கும் விடுதி என எந்தவிதமான கட்டணத்தையும் அண்ணா பல்கலைக் கழகம் வசூலிக்கக் கூடாதென்றும், அவர் படிப்பைத் தொடரத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டுமென்றும் தெளிவுபடுத்தப்பட்டது. அவரது பெற்றோருக்கும் தேவையான உதவிகளைச் செய்ய பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடப்பட்டது.நகர் காவல் துறை ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'

விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருந்தபோதிலும், விசாரணையின் விவரங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியதற்காக, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ. அருண் மீது, தேவைப்பட்டால், தகுந்த நடவடிக்கையைத் தொடங்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டது. FIR உள்ளடக்கங்கள் சரியாக எழுதப்படாததால், பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்தியதற்கு இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. அரசியலமைப்புச் சட்டம் ஆண், பெண் பாகுபாடு காட்டாத போது, ​​பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை சமூகம் ஆணையிட முடியாது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கை (FIR) எதிர்காலத்தில் வெளிவராமல் பார்த்துக் கொள்ளுமாறு காவல்துறை தலைமை இயக்குனருக்கு (DGP) உத்தரவிட்ட நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பெண்கள் இருந்தும் உரிய பாதுகாப்பு இல்லாதது குறித்து தங்களது அதிருப்தியைப் பதிவு செய்தனர். விடுதி கண்காணிப்பு கேமரா தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு ஏற்பட்டது'

அதுவும் முன்னதாக, வாதங்களின் போது, ​​தொழில்நுட்பக் கோளாறால் (FIR)கசிந்ததாகவும், அதற்கு காவல் துறை எந்த வகையிலும் பொறுப்பல்ல என்றும் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் & சிஸ்டம்ஸ் (CCTNS) போர்ட்டலில் ஒவ்வொரு FIR பதிவேற்றப்படும், ஆனால் அவற்றில் சிலவற்றின் பொது அணுகல் தடுக்கப்படுகிறது.இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து (IPC) பாரதிய நியாய சன்ஹிதாவுக்கு (BNS) மாறியதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், FIR தடுக்கப்படுவதற்கு முன்பே 14 பேர் பதிவிறக்கம் செய்து, தேசிய தகவல் மையம் (NIC) கூட அதிர்ச்சி அடைந்தது. கசிவு பற்றி அறிய உள்ளதாகவும் அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார்.

FIR பதிவிறக்கம் செய்து பகிர்ந்தவர்களும், ஊடகங்களும் நிதானத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட நபரின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடக்கூடாது என்றும் அவர் கூறினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை தடுக்கவே காவல்துறை ஆணையர் செய்தியாளர் சந்திப்பை நடத்தியதாகவும்அரசு தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

ஒரு குற்றத்தைப் பற்றிய தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகள் பரவுவதால் பொதுமக்களிடையே ஏற்படும் தீமைகள் மற்றும் அச்சத்தைப் போக்க ஆணையர் செய்தியாளர் சந்திப்பு நடத்துவதற்கு முன் அகில இந்திய சேவை விதிகளுக்கு மாநில அரசின் முன் அனுமதி தேவையில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...