திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் (27-03-2023) ல் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சிகளில் பாரம்பரியமாகத் தங்களுக்குத் தரப்பட்ட கடமைகளை ஆற்ற வந்திருந்த, சிவகங்கை சமஸ்தானத்தின் சில பகுதி நாட்டு அம்பலங்கள் தங்களின் அரசியும் பரம்பரை அறங்காவலருமான இராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியாரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வணங்கினர், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானக் கோவில்களில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் சமேத ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் கோயில் ஜீர்ணோத்தாரண புனர் அஷ்ட பந்தன மஹா ஸம்ப்ரோக்ஷண கும்பாபிஷேக விழா, சிவகங்கை சமஸ்தான இராணியார் மேன்மை கொண்ட ஸ்ரீ மதி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் தலைமையில் 23-03-2023 முதல் 27-03-2023 முடிய நடைபெற்றது.தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். 'ஓம்', 'நமோ', 'நாராயணாய' எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில...
RNI:TNTAM/2013/50347