த அ ப தே குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
த அ ப தே குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்.
த அ ப தே அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்று தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளனரா என்று ஒப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
தென்காசியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி எனக் கேள்வி எழுப்பினார். அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்:
’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்று தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளனரா என்று ஒப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதேபோல தேர்வு மையங்களின் எண்ணிக்கை, மாவட்டங்களின் எண்ணிக்கையில் முந்தைய காலங்களோடு ஒப்பிடும் போது வேறுபாடு உள்ளதா என்பது குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
நிதியை விட மனிதவள மேலாண்மை முக்கியம். அதற்காகவே சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் காலி இடங்களுக்கு 24 லட்சம் நபர்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு 2400 தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். 6 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். 100 கோடி வினா விடைத் தாள்களை அச்சடிக்க வேண்டும். இந்த நிர்வாக நடைமுறை நியாயமற்ற ஒன்று. இன்றைய தொழில்நுட்ப உலகில் இது சரியானதல்ல. இதற்காகவே சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டோம். சமூக நீதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுமென்றும் தெரிவித்தோம். ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது’’.
இவ்வாறு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பேசினார்.
முன்னதாக, த அ ப தே தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ், செயலாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் தலைமைச் செயலகத்துக்குச் சென்று, அரசிடம் விளக்கமளித்தனர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவை மார்ச் மாதம் 24 ஆம் தேதி அறிவித்தததில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பலர் தேர்ச்சி அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ஒரே பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதும் சர்ச்சையானது. கூடுதலாக இதற்கு முன் வெளியான நில அளவையாளர் தேர்விலும் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த 742 பேர் தேர்ச்சி பெற்றது தேர்வர்களிடையே சந்தேகத்தை எழுப்பியது.
தென்காசியில் மொத்தமே எட்டு மையங்கள் தான் உள்ளது. அதில் முதல் 500 பேரில் 27 பேர், முதல் 1000 பேரில் 45 பேர், முதல் பத்தாயிரம் பேரில் 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர், எத்தனை மையங்களை நடத்துகிறார் எங்கெங்கு நடத்துகிறார் என்பது குறித்து உரிய தகவல் என்னிடம் இல்லை சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எடப்பாடி கே.பழனிசாமிக்குப் பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஊழல் நடந்திருப்பதாக எந்த ஆதாரமும் இன்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசி இருக்கிறார். எனவே அந்தச் சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் இந்த அவையிலே விளக்க வேண்டும்” என்று கூறினார் பின்னர், இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். அப்போது பேசிய பி.டி.ஆர், “டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானதும் முறைகேடு புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மனித வள மேலாண்மைத்துறை செயலாளரிடம் சொல்லி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு புகார் வந்ததும் செயலாளரிடம் விசாரிக்க அறிவுறுத்தினேன். டி.என்.பி.எஸ்.சி முறையில் சீர்திருத்தங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நில அளவையர் தேர்வில் காரைக்குடியில் மட்டும் 700 பேர் தேர்வானதாக சர்ச்சை உள்ள நிலையில்
அமைச்சர் கருத்தாக:
"குரூப் 4 தேர்வில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசையில் மாற்றம் உள்ளதாக கூறப்படுகிறது. இளநிலை உதவியாளர் பதவிக்கு சிறப்பு தகுதிகள் எதுவும் தேவையில்லை. ஆனால் தட்டச்சர் பதவிக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் டைப்பிங் தெரிய வேண்டும் உள்ளிட்ட சிறப்பு தகுதிகள் தேவை அதனால் ரேங்குகளில் மாற்றம் ஏற்படுவது இயல்பு தான். குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மாவட்ட வாரியாகக் கேட்டுள்ளதாகவும்.
இதே போல் தான் சர்வேயர் தேர்வுகளிலும் காரைக்குடி மையத்தில் முதல் 500 பேரில் 200 பேர் முதல் 1000 பேரில் 377 பேர் முதல் 2000 பேரில் 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது குறித்து தேர்வு மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முன்னதாக இது போன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பீட்டு அறிக்கை அளிக்கக் கோரப்பட்டுள்ளது. முறைகேடு குறித்து விரிவான அறிக்கை அளிக்க டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று கூறும் விளக்கம் தான் தற்போது எதிர் நோக்கப்படுகிறது.
கருத்துகள்